“சனாதனத்தை அவமதித்தால் செருப்பால் அடிப்பேன்” எனும் சங்கி வக்கீல்!


ன்று அக்டோபர் 6-இல் உச்சநீதிமன்றத்தில் இதுவரை நடக்காத ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது . வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதியான பி.ஆர். கவாய் மீது ஷூவை எறிந்து தாக்க முயற்சித்துள்ளான் ஒரு சங்கி வக்கீல்.

திங்கள் காலை 11:35 மணியளவில், நீதிமன்றம் எண் 1 இல் விசாரணையின் போது, ராகேஷ் கிஷோர் என்ற 70 வயதுக்கும் மேற்பட்ட (கிழட்டு சங்கி ) வழக்கறிஞர் தலைமை நீதிபதி மீது ஷூவை கழட்டி வீசி உள்ளார், தலைமை நீதிபதியின் பாதுகாவலர்கள் விரைந்து வந்து தாக்குதலை தடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து நீதிமன்ற காவலர்களால் சங்கி ராகேஷ் வெளியே இழுத்துச் செல்லப்பட்டா(ன்)ர்.

வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த இரு நீதிபதிகளில் யாரை இலக்காக வைத்தான் என்பது உடனே தெரியாமல் இருந்தது. அதற்கு பதிலைத் தரும் விதமாக சனாதனத்தை அவமதித்தால் இதுதான் நடக்கும் “ சனாதன்கா அப் மான் நஹி சகிகா ஹிந்துஸ்தான்” என வன்மத்துடன் கத்தி உள்ளான் . மற்றொரு நீதிபதியான வினோத் சந்திரனிடம் ”நான் உங்களை குறிவைக்கவில்லை ; கவாய் தான் எனது இலக்கு ” என மன்னிப்பு கேட்டு தெளிவுபடுத்தியுள்ளான். தலைமை நீதிபதி கவாயோ இதற்கெல்லாம் அசராமல் நீதிமன்றத்தில் சுற்றிலும் இருந்தவர்களை பார்த்து ”கோர்ட் விசாரணை தொடர்கிறது” என தனது பணிகளை தொடர்ந்துள்ளார் .

சனாதனத்தை யார் அவமதித்தது ?

கஜுராஹோ கோவில் உள்ள ஜவாதி கோவிலில் 7 அடி உயரம் உள்ள தலை துண்டிக்கப்பட்ட விஷ்ணு சிலையை கட்டுவது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் இரண்டு நாட்களுக்கு முன் தீர்ப்பளித்து, அதன் மீதான தனது கருத்தையும் சொல்லியுள்ளார். அவரது கருத்து சனாதனத்தை அவமதிப்பதாக சர்ச்சையை கிளப்பினர். அதற்கும் தலைமை நீதிபதி கீழ்க்கண்டபடி உரிய விளக்கம் தந்துவிட்டார்.

“சிலை கட்டுதல் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தனது தீர்ப்பை தந்து விட்டது. இனிமேல் அது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றால் ஒன்று தொல்லியல் துறையில் முறையிட வேண்டும். அல்லது நீங்கள் தீவிர பக்தர் என்றால் விஷ்ணுவிடமே சென்று பிரார்த்தியுங்கள்” என்பதாக கருத்து தெரிவித்துள்ளார் .

விஷ்ணுவிடம் பிரார்த்திப்பதால் பலன் எதுவும் இல்லை என்பது பகுத்தறிவாளர்களை விட பார்ப்பனர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே தலைமை நீதிபதியின் மீது கொலைவெறி அல்லது வன்மத்துடன் தாக்குதல் தொடுப்பதற்கான முகாந்திரம் இதில் அடங்கியுள்ளது . இப்படிப்பட்ட எதிர்வினைகள் வரக்கூடும் என தெரிந்தே தான் நீதிபதி கவாய் துணிச்சலாக கருத்து தெரிவித்துள்ளார்.

படிக்க:

 நீதிபதிகளில் பி.ஆர்.கவாய் ஒரு விதிவிலக்கு?

♦ ஜக்தீப் தன்கர், உச்சநீதிமன்றத்தின் மீது பாய்ந்து குதறுவது ஏன்?

பாசிஸ்டுகளிடம் கருத்துரிமையை எதிர்பார்க்கலாமா? எதிர்பார்த்தால் அது நமது தவறுதான். மூத்த (கிழட்டு) வக்கீல் ராகேஷ் கிஷோரின் செயல்பாடு என்பது பானையில் உள்ள ஒரு பருக்கை சோறு தான். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் பொங்கியுள்ள மொத்த சோற்றின் பதமும் இதுதான்.

தாக்குதலுக்கு எதிர்வினை!

இந்திய பார் கவுன்சிலானது ராகேஷ் கிஷோருக்கு விளக்கம்கோரும் நோட்டீசை அனுப்பி, பதில் தர 15 நாள் கால அவகாசம் தந்து அவரை தற்காலிக நீக்கம் செய்துள்ளது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மீதான தாக்குதல் முயற்சிக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர் சங்கங்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் தலைமை நீதிபதி கவாய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். ”கடந்து பத்து வருடங்களாக தலைமை நீதிபதியை நான் அறிவேன். இது மிகவும் தீவிரமான பிரச்சனை. நியூட்டனின் விதி எங்களுக்கும் தெரியும் . ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்வினை உண்டு . ஆனால் இப்போது ஒவ்வொரு செயலுக்கும் சமூக ஊடகத்தின் எதிர்வினைகள் சமமற்றவையாக இருக்கின்றன” என்று கூறியுள்ளார் . அந்த அளவிற்கு பாஜகவின் ஐடி விங் சுறுசுறுப்புடன் செயல்படுகிறது.

தலைமை நீதிபதியின் மீதான தாக்குதலை அனைவரும் கண்டிக்கின்றனர். ஆனால் மோடி இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது என கூறினாலும் உண்மையில் இத்தாக்குதலை சங்கிகள் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்பதில் நமக்கு துளி அளவு கூட சந்தேகமும் இல்லை.

தலை விரித்தாடும் பாசிசம் !

பாசிஸ்டுகள் ஒரு கருத்தை பரப்ப முடிவெடுத்தால், ஒரு நம்பிக்கையை தீவிரமாக விதைக்க முயற்சித்தால் அதற்குக் குறுக்காக வரும் எதையும், யாரையும் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையே கடந்த கால வரலாறு நிரூபித்து வந்துள்ளது.

நேர்மை, நியாயம், மனசாட்சி, அறம், கடமை உணர்ச்சி, நாட்டுப்பற்று போன்ற எதனடிப்படையில் ஒருவர் செயல்பட்டாலும், அவர் பாசிஸ்டுகளின் இலக்காக மாறுவது நிச்சயம். அப்படித்தான் நீதிபதி லோயா மர்மமாக மறைந்தார் அல்லது கொல்லப்பட்டார். லோயாவுக்கு தீர்ப்பு எழுதிய கரங்கள் தற்போது பி.ஆர். கவாயை குறி வைக்க அனுமதிக்கலாமா?

டெல்லியில் கடந்த புதன்கிழமை நடந்த ஆர் எஸ் எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி “ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டது ஆர் எஸ் எஸ்” என வாய்க்கூசாமல் அடித்துவிட்டார். அதையும் பார்ப்பன சங்கி ஊடகங்கள் தலைப்பாக போட்டு செய்தியை பிரசுரித்தன.

படிக்க:

ஆர்எஸ்எஸ் என்ற பயங்கரவாத அமைப்பையும், சனாதன் சன்ஸ்தான் என்ற கொலைகாரப் படையையும் தடை செய்!

ஆர்எஸ்எஸ்-ஸோ, மோடி அமித் ஷாவோ, பாஜகவினரோ விரும்பும், மதிக்கும் ஜனநாயகம் என்பது எத்தகையது? அவர்களுக்கு எதிராக சிந்திக்காமல், அவர்களுக்கு எதிராக கருத்து கூறாமல், அவர்களுக்கு எதிராக எத்தகைய செயல்பாட்டையும் செய்யாமல் இருக்கும் வரையில் உங்களுக்கான அனைத்து உரிமைகளும் நீடிக்கும் என்பது தானே.

நாம் இத்தகைய அடிமைத்தனத்தை ஏற்க போகிறோமா? அல்லது பாசிசத்தை குழி தோண்டி புதைக்க போகிறோமா? பாசிசத்துக்கு எதிராக தற்போது கொதித்தெழும் நீதித்துறையினர் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களையும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் ஒன்று திரட்டுவோம். பாசிசத்திற்கு எதிராக அனைத்து கட்சிகள் அமைப்புகள் இயக்கங்களும் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியாக ஒன்றுபடுவோம். இதுவே தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளது .

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here