தக் கலவரங்களை நடத்துவது தான் தங்கள் கட்சியை வளர்ப்பதற்கான வழி என்று காவி பாசிஸ்டுகள் கூறிக்கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கின்றனர். அந்த வழியில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி தெலுங்கானாவிலும் ஒடிசாவிலும் பசு காவலர்கள் கலவரங்களை நடத்தியுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் பாஜக தற்பொழுது பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 21 நாடாளுமன்ற தொகுதிகளில் 20ஐ  பாஜக கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் சூட்டோடு சூடாக காவி பயங்கரவாதிகள் கலவரத்தில் இறங்கிவிட்டனர்.

ஒடிசா  மாநிலத்தில் உள்ள பாலசோர் நகரில் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை (17-6-2024 )அன்று, நகரில் உள்ள ஒரு சாக்கடையில் சிவப்பு வண்ணத்தில் நீர் வந்துள்ளது. இதை வைத்து இஸ்லாமியர்கள் பசுவை பலியிட்டு உள்ளார்கள் என்று  எவ்வித ஆதாரமும் இன்றி , மக்களிடையே பொய்யை பரப்பி பசு காவலர்கள்  கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமியர்களின் வீடுகளின் மீது கற்களை வீசி கலவரத்தை தொடங்கியுள்ளனர்.  இந்த கலவரத்தினால், 20 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் நகரில் ஊரடங்கு உத்தரவு போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் 48 மணி நேரத்திற்கு நகரில் இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

முன்பு ஆட்டுக்கறி வைத்திருந்தவர்களை மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறித்தான் இந்து மத வெறியர்கள் கலவரம் செய்தனர்; மக்களை கொன்றனர். இப்பொழுது, கொல்லப்பட்டதாக கூறப்படும்  பசுவையோ, பசுவின் பாகத்தையோ கூட   மக்களுக்கு காட்டவேண்டியது இல்லை என்ற அளவிற்கு சங்கிகள் முன்னேறி விட்டனர். அதாவது  சாக்கடையில் சிவப்பு வண்ணத்தில் கழிவு நீர் வந்தால் கூட கலவரத்தில் ஈடுபடும் அளவிற்கு இப்பொழுது பசு காவலர்கள் மேலும் முன்னேறி விட்டனர். இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? மாடு ஒன்று சத்தம் போட்டால் கூட போதும், இஸ்லாமியர்கள் பசுக்களை கொல்வதாக் கூறி இனி கலவரத்தில் ஈடுபடுவார்கள்.

அடுத்து தெலுங்கானா கலவரத்தை பார்ப்போம். தெலுங்கானா மாநிலத்தில் மேடக் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று, பக்ரீத் பண்டிகையின் போது பலியிடுவதற்காக 40  எருதுகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.  அப்பொழுது அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி, காவி பாசிஸ்டுகள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து  200 ஆட்களை திரட்டிய காவிகள்  தொடர்ந்து பிரச்சனை செய்ததால் அந்த மாடுகள் அனைத்தும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் அருகில் இருந்த இஸ்லாமியர்களின் கடைகளையும் சாலையில் வந்த வாகனங்களையும் காவி பாசிஸ்டுகள் தாக்கியுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் 8 பாராளுமன்ற தொகுதிகளை தற்பொழுது வென்றுள்ள நிலையில்  முஸ்லிம்கள் மீதான தாக்குதலை மேலும் கூர்மைப்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதே மேடக் மாவட்டத்தின் சங்கரெட்டி நகரில் உள்ள ஒரு மசூதியைப் பற்றி மோசமான பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ஒரு பெரும் கலவரத்தை 2012 ஆம் ஆண்டு காவி பாசிஸ்டுகள் நடத்தியுள்ளனர்.

அந்த மேடக் மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வென்றுள்ளது.   காவி   பாசிஸ்டுகள் கலவரத்தால் கட்சியை வளர்ப்பவர்கள்; ஆட்சியதிகாரத்தை பிடிப்பவர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் பாசிச பாஜக இன்னும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு வளரவில்லை. வருங்காலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக கட்சியின் பாஜக தலைவர்களே கலவரத்தில் இறங்கிவிட்டனர். பாஜக மாவட்டத் தலைவர் கதம் ஸ்ரீனிவாஸ், நகரத் தலைவர் எம் நயம் பிரசாத் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிஜேபியின் ஒன்றிய அமைச்சரான பண்டி சஞ்சை குமார் காவல்துறை உயர் அதிகாரியை அழைத்து பாதிக்கப்பட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார் –அதாவது மிரட்டியுள்ளார்.

இந்த கலவரத்தை தொடர்ந்து, பாஜக, வி ஹெச் பி, கோ சம்ரக்ஸ் தளம் உள்ளிட்ட பல்வேறு காவி பாசிச அமைப்புகள் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. பாஜக வளர்ந்து மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் அல்லவா, அதற்காகத்தான்.

பசுக்களை கொல்லக்கூடாது என்ற சட்டம் போடப்பட்டுள்ள உத்தரப் பிரதேசம் குஜராத் போன்ற மாநிலங்களில் அலைந்து திரியும் பசுக்களால் குடியிருப்பு வாசிகளும் விவசாயிகளும் மிகப் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பால் வற்றிப்போன பசுக்கள்  தங்கள் பயிர்களை மேய்வதால் மிகப் பெரும் நட்டதிற்கு உள்ளாவதாக விவசாயிகள் ஆத்திரத்தில் உள்ளனர்.

படிக்க:

 ஹரியானா மதக்கலவரம்; பாஜகவின் திட்டம்!
♦ கலவரம் செய்ய காத்திருக்கும் சங்பரிவார் கும்பல்!

வயதான, பால் கறக்காத, மக்களால் கைவிடப்பட்ட பசுக்களை தீவனம் கொடுத்து பாதுகாக்க வேண்டும்  என்பதற்காக கோசாலைகளை அமைத்தும் இப்ப பிரச்சனையை மாநில அரசுகளால் தீர்க்க முடியவில்லை. வயதான, பால் கறக்காத பசுக்களை அடிமாடாக விற்பதன் மூலமாக கிடைக்கும் பணம் அடுத்து வேறு பசுவை வாங்கி பால் கறந்து தொழில் செய்வதற்கு ஒரு சிறு உதவியாக இருந்து வந்த நிலையில் பசுக் காவலர்களால் இந்த விற்பனை தடுக்கப்பட்டு விட்டது.இதனால் கறவை மாடு வளர்ப்பவர்களும் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

அதேசமயம்,  இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மாட்டுக் கறி ஏற்றுமதி செய்வது என்பது மிகப்பெரும் அளவில் நடந்து வருகிறது.வெளிநாடுகளுக்கு மாட்டுக் கறியை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்களாக பார்ப்பனர்கள் தான் உள்ளனர். அவர்களின் நிறுவனங்கள் மூலமாகத்தான் ஏராளமான மாடுகள் கொல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைப் பற்றி பசு காவலர்கள் வாய் திறப்பதில்லை.

மாடுகளை கொல்லக்கூடாது என்று இவர்கள் செய்யும் கலவரத்தால் மாடு வளர்ப்போர் பாதிக்கப்படுவது,  மக்கள் பாதிக்கப்படுவது என்பது குறித்து பசுக்காவலர்களான  காவி பாசிஸ்டுகள் கவலைப்படுவதில்லை. பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்பதும் பசு காவலர்களின் நோக்கமல்ல.

இப்பொழுது பசு காவலர்களான காவி பாசிஸ்டுகள் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.  அடுத்து முருகனின் கொடியில் உள்ள கோழியை கொல்லக்கூடாது என்பார்கள். அடுத்து விஷ்ணுவின் அவதாரமான மீனைக் கொல்லக் கூடாது என்பார்கள்.

காவி மதவெறி பாசிஸ்டுகளான   பசு  காவலர்களின் ஒரே நோக்கம் மக்களை மதரீதியாக மோத விட்டு பிளவுபடுத்த வேண்டும். அதன் மூலம் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் வேண்டும் என்பதுதான்.    மக்களின் ரத்தம் குடிக்க துடிக்கும் மதவெறி ஓநாய்களை விரட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டு வரும் பணியில் முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் ஈடுபட வேண்டும். இதை செய்ய தவறினால் இந்த ஓநாய்களால் நாடும் நாட்டு மக்களும் கடித்துக் குதறப்படுவதை நம்மால் தடுக்க முடியாது போய்விடும்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here