ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் S.சம்சுதின் அவர்கள் உடல்நலக்குறைவால் 28.08.2025-ம் தேதி வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு மரணித்து விட்ட செய்தி பெரும்துயரத்தையும், தவிர்க்கவியலாத பெரும் சோகத்தையும் உண்டாக்கியுள்ளது.
உழைக்கும் மக்களுடைய பிரச்சினைகளில் அன்றாடம் தலையிடுகின்ற போராட்டத்தில் முன்னணியாக நிற்கின்ற தோழராக விளங்கியவர். எங்களோடு அரசியல் ரீதியில் மிகவும் நெருக்கம் கொண்டு தன்னை முழுமையாக போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்ட தோழர். அனைவர் இடத்திலேயும் மிகுந்த உரிமையோடு பழகக்கூடிய குணம் படைத்தவர்.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற BHEL மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஊழியரைப்போல பங்கேற்ற தோழர். வேறு வேலையாக டெல்லி சென்ற போதும் அந்த போராட்டத்தின் மைய பிரச்சினையை ஹிந்தியில் அதிகாரிகள் மற்றும் MP-க்களிடம் சேர்த்தவர். இன்றைய பாசிச சூழலில் தோழர் சம்சுதீன் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவரது மறைவு எளிய உழைப்பாளி மக்களுக்கும், பாசிச சூழலில் களமாடும் ஜனநாயக, முற்போக்கு மற்றும் புரட்சிகர இயக்கங்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF) தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தோழர்.R.லோகநாதன்,
பொதுச் செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு – புதுவை







