1.இரண்டு பக்கமும் இரண்டு தூய்மைப் பணியாளர்கள்.அண்ணாமலையும் வினோஜ் செல்வமும் அவர்களுக்கு நடுவில்.
2.அண்ணாமலை, வினோஜ் இருவரின் இலைகளில் இனிப்புகள் மட்டுமே உள்ளன.
3.ஒரே பந்தியில் அமர்ந்திருப்பவர்களில் சிலரை விட்டுவிட்டு மற்றவர்க்கு உணவு பரிமாற முடியுமா?
4.அடுத்தவர் சாப்பிடுவதை வைத்த கண் வாங்காமல் பார்ப்பது அநாகரிகம்.இதில் தூய்மைப் பணியாளர்கள் சாப்பிடுவதை நாக்கில் உமிழ்நீர் வடிய ஏன் இப்படி நாகரிகம் சிறிதும் இல்லாமல் அண்ணாமலையும் வினோஜும் பார்க்கிறார்கள்?
5.தூய்மைப் பணியாளர்கள் சாப்பிட்டு விட்டு எழுந்ததும் இவர்கள் சாப்பிடாமலேயே எழுந்து விடுவார்கள்.இதற்குப் பெயர் சமத்துவ விருந்தா?
6.தூய்மைப் பணியாளர்கள் சிலர்தான் சாப்பிடுகிறார்கள்.அவர்களுக்குப் பின்னால் புகைப்படம் எடுக்க காத்திருக்கும் பாஜகவினர் பலர்.
7.இதிலிருந்து தெரிய வருவது,பாஜக ஒரு நாடக மேடை,அதில் பாஜகவினர் நாடக நடிகர்கள்.
தலித்துகளும், விளிம்புநிலை மக்களும் சமத்துவ விருந்து என்று யாராவது அழைத்தால் போகாதீர்கள். கூழோ களியோ சோறோ நம் வீட்டில் ஆக்கியதைச் சாப்பிடுவோம்.
அவர்களின் விளம்பரத்திற்கு நாம் பலியாக வேண்டாம்.
சுகிர்தாராணி