இந்தியாவில் விளையாட்டு என்றாலே கிரிக்கெட்டிற்கு அளவுக்கதிகமான முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

“10 முட்டாள்கள் விளையாடுவதை 10,000 முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்” என்று விமர்சித்தாராம் ஷேக்ஸ்பியர்.

கிரிக்கெட் ஒரு சோம்பேறி விளையாட்டு என்பதை தாண்டி மூன்று நூற்றாண்டு காலமாக பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள், அதிலும் குறிப்பாக காமன்வெல்த் நாடுகளில் தான் இந்த கிரிக்கெட் விளையாட்டு மிகவும் கொடி கட்டி பறக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் தேர்வாணைய குழுவில் இருந்து துவங்கி கிரிக்கெட் விளையாடுகின்ற முன்னணி வீரர்கள் வரை பெரும்பாலும் பிறப்பால் பார்ப்பனக் கும்பலைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். கபில்தேவ், தோனி போன்ற ஒரு சிலர் இதில் தப்பிப் பிழைத்த நபர்கள்.

உடல் உழைப்பு அதிகம் தேவை இல்லாத இந்த விளையாட்டு இந்தியாவில் உள்ள தரகு முதலாளிகள் மற்றும் தேசம் கடந்த தரகு முதலாளிகள், மேட்டுக்குடிகள் மேல் சாதியினரால் திட்டமிட்டு ஊக்குவிக்கப்படுகிறது.

ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடுவதற்கு பல கோடி ரூபாய்க்கு வீரர்கள் ஏலம் எடுக்க படுகிறார்கள் இதைப்பார்த்து பல லட்சம் இளைஞர்கள் என்றாவது ஒருநாள் நாம் தேர்வு செய்யப்பட மாட்டோமா என்று மொட்டை வெயிலில் மண்டை வறல மட்டையை எடுத்துக்கொண்டு விளையாடி தன்னை தயார்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் பார்ப்பன கும்பல் வீசும் இன் ஸ்விங்கர், அவுட் ஸ்விங்கர் மற்றும் யார்க்கர்களில் கிளீன் போல்ட் ஆகிறார்கள்.

இந்த விஷச் சூழலைத் தாண்டி தமிழகத்தின் சிறுவர்கள் சதுரங்க விளையாட்டில் உலக அளவில் முன்னேறியுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.
இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று கூறிக் கொள்ளப்படும் ஹாக்கி விளையாட்டிற்கு கூட போதிய முன்னுரிமையும், மரியாதையும் தரப்படுவதில்லை. பார்ப்பன கும்பல் உடல் உழைப்பு இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதிக்க இது போன்ற விளையாட்டுகள் தடையாக உள்ளது என்பதால் கிரிக்கெட்டை ஊதிப் பெருக்கி ஊடகத்தின் வாயிலாக பிரச்சாரம் செய்து பல கோடி இளைஞர்களை வீணடிக்கிறார்கள். இதை உடைத்தெரிகின்ற வகையில் மாற்று விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்த இந்த சதுரங்க வெற்றி நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறது.

000

தமிழர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் சதுரங்கத்தில் (Chess) சாதனை படைக்கும் சகோதரர்கள்- பிரகானந்தா& வைசாலி

தமிழர்கள் சர்வதேச அளவில் விளையாட்டுக்களில் பிரகாசிப்பது அரிதாகவே உள்ளது. இதற்கு விதிவிலக்கான ஒரு விளையாட்டு எனில் அது நிச்சயமாக சதுரங்கமே( உ+ம்= விஸ்வநாதன் ஆனந்த்). அந்தவகையில் வளர்ந்துவரும் இரு தமிழ்நாட்டின் சகோதரர்களே பிரகானந்தா, வைசாலி ஆகியோர்.

பிரகானந்தா :
1. உலகின் இளமையான சதுரங்க மாஸ்டர் பட்டத்தினை வென்றவர் (the youngest International Master in history, at the age of 10 years, 10 months, and 19 days)
2. எட்டு வயதிலேயே இளையோரிற்கான சதுரங்க சாம்பியனாக தெரிவானவர் (the World Youth Chess Championship Under-8 boys title in 2013)
3. மீண்டும் 10 வயதில் அதே வெற்றி (Under-10 boys title in 2015)

வைசாலி

வைசாலியும் அவ்வாறே இரு முறை வென்றவர்கள். (Under-14s and Under-12s. Since 2016 she is a Woman International Master (WIM).

பொருளாதார வசதிகுறைந்த ஒரு குடும்பத்திலிருந்து வந்த இத் தமிழ் சகோதரர்களின் சாதனைகளை உரிய முறையில் வெளிக்கொண்டுவர தமிழ் ஊடகங்கள் தவறிவிட்டன.


தமிழ்நாட்டுடன் ஒப்பிடுமிடத்து ஈழம் சதுரங்கத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சினிமாவினையும், சிவசேனாவையும் மட்டும் உடனுக்குடன் இறக்குமதி செய்யும் நாம் இவ்வாறான நல்ல விடயங்களை மட்டும் கண்டுகொள்வதில்லை.

குறிப்பு- சதுரங்கம் ஒரு விளையாட்டு மட்டுமல்லாமல் சிந்தனைத்திறன், படைப்பாற்றல் என்பவற்றையும் அதிகரிக்கும்.

வி.இ.குகநாதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here