5 மாநில தேர்தல்கள் நடைமுறையில் இருக்கும் பொழுது மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசுத் துறை சார்ந்த தூர்தர்ஷன் உட்பட காட்சி ஊடகங்கள் இன்ன பிற ஊடகங்களில் அதிகார வரம்பை மீறி மோடி உரையாற்றிருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. இதனை தலைமைத் தேர்தல் ஆணையர்
ஞானேஷ்குமார் ஐஏஎஸ் கண்டு கொள்ளவே மாட்டார். ஏனெனில் பாஜக-வை நிரந்தரமாக ஆட்சி அதிகாரத்தில் தக்க வைக்கவும், எதிர்க்கட்சிகளை மட்டுமே ‘பதம்’ பார்ப்பதற்கெனவும் நியமிக்கப்பட்டுள்ள சங்கி அல்லவா அவர்?

சரி. ஏப்ரல் 18-ல் மோடி என்னதான் உரையாற்றினார்?

‘மகளிர் மசோதா நிறைவேற்றப்படாமைக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளால் இம்மசோதா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நடக்கும் அனைத்தையும் நாட்டுப் பெண்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை ஆதரிக்கும் என எதிர்பார்த்தேன். நாங்கள் வடக்கு தெற்கு என பிரித்துப் பார்த்ததில்லை. மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதாவை தோற்கடித்ததன் மூலம் எதிர்க்கட்சிகள் கருக்கொலை செய்து விட்டனர். நமது பெண்களின் கனவுகள் எவ்வாறு நசுக்கப்பட்டிருக்கின்றன என்பதை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான். இந்திய பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான போராட்டம் எதிர்க்கட்சிகளின் சுயநல அரசியலால் முடங்கிப் போய் உள்ளது. மகளிர் சக்தியை உதாசீனம் செய்து எதிர்க்கட்சியினர் பாவம் செய்துவிட்டனர். எதிர்க்கட்சியினர் செய்த பாவத்துக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். ஒரு பெண் எதை வேண்டுமானாலும் மறக்கலாம்; ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் மறக்க மாட்டாள். பெண்களுக்கு அவர்களுக்கு சட்டபூர்வமாக உரித்தான பங்கை வழங்குவதற்கான ஒரு நேர்மையான – உண்மையான மற்றும் புனிதமான முயற்சியாக இது அமைந்தது. இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் பெண்களை சம பங்காளிகளாக மாற்றும் ஒரு முயற்சியாக இது திகழ்ந்தது.
இது காலத்தின் கட்டாயமாகும். நமது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்துத் திசைகளையும் வலுப்படுத்துவதற்கும் மாநிலங்களின் பரப்பளவு அல்லது மக்கள் தொகையின் அளவை பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் குரலையும் ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி இது. அனைவரையும் சம அளவில் அதிகாரமிக்கவர்களாக மாற்றும் ஒரு முயற்சியாக இது அமைந்தது. இருப்பினும் பெண்களுக்கான இட ஒதிக்கீடு மசோதாவுக்கான போராட்டம் தொடரும். எங்கள் உறுதிப்பாடு அசைக்க முடியாதது’…!?

பெண்களின் மீட்பராக மோடி கண்ணீரை குடம் குடமாக கொட்டுவது நமக்குக் கூட ‘புல்லரிக்க’ச் செய்கிறது.
நாமும் சேர்ந்து அழ வேண்டும் போல் உள்ளது!?

குஜராத்தில் ஆண் பெண் வேறுபாடு இன்றி 2002-ல் மோடியின் திட்டமிட்ட கலவரத்தில் கொன்றொழிக்கப்பட்டோர் எத்தனை ஆயிரம் பேர்? எத்தனை பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர்? கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானு வரலாறு எல்லாம் மறந்து போய்விடுமா? ஜம்மு காஷ்மீர், உ.பி., ம.பி., ராஜஸ்தான், அரியானா, பீகார், உள்ளிட்ட வடமாநிலங்களில் எத்தனை நூறு பெண்களை கொன்றொழித்தீர்கள்? பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினீர்கள்? ஏன், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் இன்று வரை பற்றி எரிகிறதே ஆண் – பெண் வேறுபாடு இன்றி கொன்றொழிக்கப்படுகிறார்களே; பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்களே…ஏன்? இவ்வளவுக்கும் மோடியின் பாஜக தானே அங்கே ஆள்கிறது.
இரண்டாண்டுகளுக்கு முன் குக்கி இன இளம்பெண்களை நடு ரோட்டில் நிர்வாணமாக ஊர்வலம் விட்டு பிறப்புறுப்பில் கையை வைத்து அசிங்கப்படுத்திக் கொண்டே வந்தார்களே மிருக ஜாதிகள்…
இவற்றையெல்லாம் மறந்துவிட முடியுமா?

டெல்லியில் வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை பாராளுமன்ற உறுப்பினர் பதவி இருந்து கூட நீக்குவதற்கு நீங்கள் முன்வரவில்லையே, ஏன்? இவற்றையெல்லாம் தடுப்பதற்கு பாஜக என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டது? இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் எல்லையில் கால் வைக்கவே அஞ்சியவர் தானே இந்த மோடி சொல்லப்போனால் பாஜக மற்றும் அதன் கூட்டணியின் ஒன்றிய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் எத்தனை எத்தனை பேர் பாலியல் குற்றவாளிகள் என்பதனை சம்பந்தப்பட்ட நபர்கள் வாழும் காவல்துறை பதிவேடுகளில் கணக்கீடு செய்யுங்கள்.

என்னமோ ஏப்ரல் 16-ல் தாக்கல் செய்யப்பட்ட மசோதா
மகளிர் நலன் சார்ந்த மசோதா என்பது போன்ற அப்பட்டமான கபட நாடகத்தை என்னவென்று கூறுவது?
உண்மையில் அரசியல் அமைப்புச் சட்டம் விதி 131-ன் கீழ்
தொகுதி மறு வரையறை செய்யும் குறுக்கு வழிப் புத்தியை எவ்வளவு லாவகமாக மறைக்கிறார் பாருங்கள் மோடி. தனது உரையில் கெட்டிக்காரத்தனமாக தொகுதி மறு வரையறை மசோதா குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதிலிருந்து இவர்கள் எப்படிப்பட்ட மோசடி பேர்வழிகள் என்பதனை புரிய முடிகிறது அல்லவா?

படிக்க:

 மோடி அரசின் பெண்கள் இட ஒதுக்கீடு: தாகத்தை தணிக்க உதவாத கானல்நீர்!

 பார்ப்பன சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுருக்கு கயிறு!

‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை 543 உறுப்பினர்கள் எண்ணிக்கையிலேயே நடத்தி முடியுங்கள்’ என்று தானே எல்லா எதிர்க்கட்சிகளும் கோருகின்றனர். அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் துப்பு இல்லாமல் போயிற்று பாசிச பாஜக மோடி அரசுக்கு?.

எனவே பாஜக-வின் குள்ளநரித்
தனத்திற்கு ஏப்ரல் 17-ல் எதிர்க்கட்சிகள் கொடுத்த
‘சிறப்பான அடி’ தொடரட்டும்! எந்த வகையிலும் இந்த காவிக் கும்பல் இத்தோடு சுருண்டு வீழ்ந்திடப் போவதில்லை. இந்தக் காவிப் பாசிச கும்பலின் பிறவிக் குணத்தை
தனது மக்கள் விரோத லட்சியம் நிறைவேறும் வரை மாற்றிக் கொள்ளாது. மாறாக அது வைத்துள்ள ஆயிரக்கணக்கான ஆர்எஸ்எஸ் கிளை அமைப்புகள் மூலமாக நாட்டை ஒற்றை சர்வாதிகாரத்தின் கீழ்
நிலைநிறுத்தவே முற்படும். ‘இந்து ராஷ்டிரா’ உருவாக்கும் வரை அவர்கள் ஓய மாட்டார்களாம்!?

எனவே, இக்கும்பலை பாராளுமன்ற ஜனநாயக வழிமுறையில் வீழ்த்துவது கடினமே! எனவே பாசிச எதிர்ப்பு அய்க்கிய முன்னணியை விரிவாகக் கட்டி எழுப்பி ஜனநாயக கூட்டரசை நிறுவுவதை நோக்கிய பயணத்தின் மூலமே குறைந்த
பட்ச வாழ்வுரிமையையாவது தக்க வைத்துக் கொள்ள முடியும்.

எனவே,

மகளிர்க்கு எதிரான ஒட்டுமொத்தக் காவி(லி)க் கூட்டத்தை
தோலுரித்து அம்பலப்படுத்துவோம்!

மகளிர் நலன்களை – உரிமைகளை எந்நாளும் உயர்த்திப் பிடிப்போம்!

பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய543 எண்ணிக்கையில் 33 சதவீதமோ அல்லது அதற்கு மேலோ வழங்குவதற்கு குரல் எழுப்புவோம்!

கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை
முறியடிப்போம்!

ஜனநாயக கூட்டரசை
நிறுவுவோம்!

எழில்மாறன்

1 COMMENT

  1. மகளிர்க்காக குடம் குடவுமாய் கண்ணீர் வடிக்கும் பாசிச மோடி!!!? பயங்கர நடிப்புடா சாமி !

    மகளிர்க்காக 33 சதவீத இட வீட்டுக்கு கொண்டு வந்ததை எதிர்க்கட்சிகள் எதிர்த்ததாக நாடகம் நடத்தி மோடி பேசியுள்ளார்
    குஜராத் பெண்கள் படுகொலை செய்யப்பட்டது பில் கிஸ் பானு மணிப்பூர் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பாஜக அமைச்சர்கள் பாலியல் லீலைகள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பாஜக காளிகள் வன்முறை செய்யும்போது கண்ணீர் வடிக்காத மோடி தற்போது ஏன் கண்ணீர் வடிக்க வேண்டும் என்று அம்பலப்படுத்தி செருப்படி கொடுத்துள்ளது இந்த கட்டுரை

    கட்டுரையாசிரியர்
    தோழர் :எழில் மாறன்
    அவர்களுக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here