இதற்கு முன்பு எதற்காகவெல்லாம் சிறை சென்றிருக்கிறீர்கள் மிஸ்டர் ஆட்டுக்குட்டி?

அனைத்து நாட்களிலும் கோவில் திறக்காவிட்டால் சிறைக்கு செல்ல தயங்க மாட்டோம் என்கிறார் ஆட்டுக்குட்டி அண்ணாமலை. ஆர். எஸ். எஸ் மூளையுடன் ஐபிஎஸ் பணியாற்றிய அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு எதற்காக வாரத்தில் 3 நாட்கள் கோவில் திறப்பதை தவிர்த்துள்ளது என்கிற விபரம் புரியாதா? தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சனிக்கிழமைகளில் வைணவ கோவிலுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், சனிக்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் தாமாகவே சனிக்கிழமைக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை அல்லது பிந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்கு செல்லலாம் என முடிவெடுத்து அதே அளவுக்கு கூட்டமாக கூடிவிடுவார்கள் என்பதாலேயே இந்த மூன்று நாட்கள் கோயில் இயங்க வேண்டாம். அதனால் கொரோனா பரவுவதை தடுப்பதற்கான தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை எதிர்த்து பேசுகையில், 1967 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றதாகவும், அந்த ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 1967ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி வருகை தந்ததாகவும்,அவர் வருகை தந்ததற்கான கல்வெட்டு ஆதாரம் காளிகாம்பாள் கோவிலில் உள்ளது எனவும் இமாலய பொய்யை இமைக்கின்ற பொழுதுகளில் அள்ளித் தெளித்திருக்கிறார் ஆட்டுக்குட்டி அண்ணாமலை.

இவர்களின் நோக்கம் தான் என்ன? கூட்டம் கூடுவது கொரோனா நோய்த்தொற்று பரவும் சூழல் ஏற்படும் என்பதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை இந்து மதத்தின் பெயரை சொல்லி “நாம் எல்லாம் இந்துக்கள்” என்று சொல்லி மக்களை ஏமாற்றி கோவிலை திறப்பது மட்டுமே அதிலும் வாரத்தில் நான்கு நாட்கள் இருந்திருக்கக்கூடிய கோவிலானது, வெள்ளி, சனி ,ஞாயிறு ஆகிய எஞ்சியுள்ள மூன்று நாட்களையும் சேர்த்து வாரத்தில் ஏழு நாட்களும் திறந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு காரணம் என்ன? தினந்தோறும் அதிகரிக்கக்கூடிய பெட்ரோல் விலை, உயர்வு டீசல் விலை உயர்வு இவற்றின் காரணமாக மக்கள் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு அத்தியாவசியமான பொருட்கள் அனைத்திற்குமான விலைவாசி உயர்வு, மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு தேவையான சமையல் கேஸ் விலை கடந்த ஓராண்டில் மட்டும் 300 ரூபாய் அளவிற்கு உயர்ந்து கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாயை நெருங்கி வருகின்ற சூழலில் இவற்றின் மீதான அக்கறையை இவர்கள் வெளிக்காட்டியதுண்டா? இவற்றின் மீதான மக்கள் கவனம் திரும்பி விடக்கூடாது என்பதே இவர்கள் நோக்கம்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு, பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் இவற்றால் முடங்கிப் போயிருந்த அன்றாட உழைக்கும் மக்களின் தினக்கூலி வருவாய் இன்னும் மீளவில்லை, அவர்களது வாழ்க்கையை இருள் அண்டிக் கிடக்கின்றது. இருளை போக்குவதற்கான மின்சாரக் கட்டணம் உயர்வு, மாநிலங்களுக்கு வழங்கும் மின் கட்டணத்தை,தனியார் நிறுவனங்களுக்கு விற்பதைவிட கூடுதலாக மாநில அரசுகளுக்கு விற்கும் ஒன்றிய அரசின் சட்டங்கள், உணவு பாதுகாப்பு மசோதா வேளாண்மையில் இருந்து முற்றாக விவசாயிகளை அழித்தொழிக்கக்கூடிய வேளாண் மூன்று சட்டங்கள். அவற்றில் கார்ப்பரேட் கொள்ளையை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு மகிழும் ஒன்றிய அரசின் உணவு தானிய சேமிப்பு மசோதா, அத்தியாவசியமான பொருட்களையும் வரையறையின்றி சேமித்து வைப்பதற்காக தளர்த்தப்பட்டுள்ள சட்டங்கள் இவையெல்லாம் மக்களின் கவனத்திற்கு சென்றுவிடக்கூடாது இவற்றுக்காக தலைநகர் டெல்லியில் மழை, வெயில், குளிர், இரவு, பகல் என பருவங்களைப் பற்றி கவலைகொள்ளாது உடல்மெலிந்து உயிர்துறந்து போராடும் விவசாயிகளைப் பற்றியோ, விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொலை செய்யும் பாசிச பாஜக கொடுங்கோல் ஆட்சியின் கொடுமைகளை மக்கள் சிந்தித்து இவர்களை அப்புறப்படுத்த ஆயத்தமாகக்கூடாது என்பதற்காகவே, நாள்தோறும் புதுவிதமான புரளிகளை மக்களிடம் ஊடகங்கள் வாயிலாக பரவச் செய்து, அதன் மூலமாக மக்கள் தாம் அனுபவிக்கின்ற துன்பங்களை மறந்து, இவர்களது ஊதாரித்தனமான பேச்சுக்களை நோக்கி கவனத்தை மடை மாற்ற இவர்கள் திட்டமிடுகிறார்கள்.

ஒரு முன்னாள் ஐபிஎஸ் க்கு 1962 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர் தமிழ்நாட்டில் ஆட்சி செய்யவில்லை என்பது தெரியாதா ?
சத்ரபதி சிவாஜி கிபி 1680 ஆண்டில் இறந்தது தெரியாதா? அல்லது காளி பக்தரான சத்ரபதி சிவாஜி 1677 ஆம் ஆண்டு காளிகாம்பாள் கோவிலுக்கு வந்ததாக எவனோ ஒரு வரலாறு தெரியாத அரைக்கிறுக்கன் கூறியதை கோவில் ஏதோ ஒரு பகுதியில் சுவரொட்டி போல எழுதி வைத்திருந்ததை வைத்துக்கொண்டு, எந்த மராட்டிய ஆய்வாளர்களும், சத்ரபதி சிவாஜி பற்றிய ஆய்வாளர்களும் சொல்லாத தகவலை, சென்னைக்கு சத்ரபதி சிவாஜி வந்ததாக சிறு குறிப்பு கூட எந்த ஒரு வரலாற்று பக்கங்களிலும் எழுதாத போதும் உண்மைக்கு மாறான ஒரு தகவலை, 1677 என்று கூறிய அரை கிறுக்கனின் உளறலை தாண்டி 1967 என புதிய கிறுக்குத்தனமான தகவல்களை தெரிவித்து, ஊடகத்தில் தாங்களாகவே அதனை பரவச் செய்து, இதனைப் பற்றி பேசுகையில் மக்களைப் பற்றியும், அவர்கள் அனுபவித்து வருகின்ற துன்பங்களைப் பற்றியும் பேசாமல், இந்த புரளிகளுக்கான விளக்கங்களை எழுதிக் கொண்டிருப்பார்கள், பேசிக் கொண்டிருப்பார்கள் என நினைத்து, திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட பொய்யுரையாகும்.

இதனை தாண்டி சில கேள்விகள் எழலாம் அரசு மதுபான கடை டாஸ்மாக் எப்பொழுதும் திறந்திருக்கிறது ஏன் கோவிலுக்கு இந்த தடை? கோவிலுக்கு செல்பவர்களையும், மதுபான கடைகளுக்கு செல்பவர்களையும் ஒன்றாக ஒப்பிட்டு பேச வேண்டும் என நாம் நினைக்கவில்லை. இதனை பிஜேபி, ஆர் எஸ் எஸ் சங்பரிவாரங்கள் நினைத்தால் அல்லது பேசினால், இதனைவிட வேறு எவராலும் கடவுள் நம்பிக்கை உள்ள மக்களை கொச்சைப்படுத்தி விட முடியாது என்பது மறுக்கவியலாத உண்மை.

  • பாவெல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here