வரலாற்றுப் புரட்டு

புன்னப்புர வயலார், கையூர்,விவசாயிகள் போராட்டம், அந்த போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வீரமிக்க தோழர்களின் வரலாறு கூட நீக்கப்பட உள்ளன...

0

பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வீரப் புதல்வர்களின் வரலாற்றையும், வீரமிக்க அவர்களின் போராட்டங்களையும், வரலாற்றிலிருந்து
நீக்கும் கயமைத்தனம்…
கிலாபத் போராட்டம் என்றும், மாப்பிள்ளை கலகம் என்றும் புரட்டப்படும் மலபார் போராட்டம் குறித்த வரலாற்று தகவல்களையும்
உயிர் தியாகம் செய்த வீரப் புதல்வர்கள் குறித்து வரலாற்று தகவல்களையும், Indian Council for Historical Research (ICHR) என்ற, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், தனது வரலாற்று தொகுப்பிலிருந்து நீக்கி விட முடிவு செய்துள்ளது…
மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பில் வந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக இந்திய சுதந்திர போராட்ட வரலாற்று நிகழ்வுகளையும், சுதந்திர போராட்ட வீரர்களின் வீர மரணம் குறித்த தகவல்களையும், அப்படியே, நீக்கம் செய்யும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது…

வரலாற்றை நீக்கும் முயற்சியின் முன்னோட்டம்என்ற வகையில், ICHR,தனது Dictionary of Martyrs:Indian Freedom Struggle 1857 to 1947 என்ற வரலாற்று தொகுப்பிலிருந்து, மலபார் பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, உயிர் தியாகம் செய்த வீரப் புதல்வர்கள் குறித்த தகவல்களையும், அவர்கள் நடத்திய வீரமிக்க போராட்டங்கள் குறித்த தகவல்களையும் நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது…

விவசாயிகளை அணிதிரட்டி,பிரிட்டிஷ் ஆட்சியை கதி கலங்க வைத்த, பிரிட்டிஷ் ராணுவம் கைது செய்து, மரண தண்டனை விதிக்கப்பட்ட போது,”எனது கண்களை கட்டாமல், எனது மார்பில் சுட்டு என்னை கொல்லுங்கள்”என்று கூறி, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் துப்பாக்கி குண்டுகளை தனது மார்பில் தாங்கி, வீர மரணமடைந்த வாரியங்குந்நத்து குஞ்ஞகமது ஹாஜி. அவரோடு இணைந்து போராடி,கைது செய்யப்பட்டு, இறுதியில் கோவை மத்திய சிறையில் விசாரணை முடிவில், மரண தண்டனை விதிக்கப்பட்டு, கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் தூக்கிலேற்றி கொல்லப்பட்ட ஆலி முசலியார்…. உட்பட, 387 மலபார் பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டத்தில் வீர மரணமடைந்த வீரப் புதல்வர்களின் தியாக வரலாற்றை நீக்கம் செய்ய ICHR முடிவு செய்துள்ளது…..

புன்னப்புர வயலார், கையூர்,விவசாயிகள் போராட்டம், அந்த போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வீரமிக்க தோழர்களின் வரலாறு கூட நீக்கப்பட உள்ளன…

வாரியங்குந்நத்து குஞ்ஞகமது ஹாஜியையும், பகத் சிங்கையும் ஒப்பிட்டு பேசியதை வாபஸ் பெற வேண்டும், அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, கேரள சட்ட மன்ற சபாநாயகர் தோழர்.M.B. ராஜேஷ் மீது டெல்லியில், காவல்துறையிடம் பாஜக புகார் அளித்துள்ளது. இது போன்ற வரலாற்று இருட்டடிப்பு குறித்து,
கேரள முதல்வர் தோழர்:பிணறாயி விஜயன் அவர்கள், கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்… கேரள மாநிலம் முழுவதும் இது, பெரும் பரபரப்பை மட்டுமல்ல,பெரும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது..

ஆனால்.. தமிழ்நாடு உட்பட வேறெங்கும் சிறு சலசலப்பை கூட ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாசிஸ்டுகளின் வளர்ச்சிக்கு காரணம், அவர்களின் நடவடிக்கைகளும்,திட்டங்களும் மட்டுமல்ல, பொது சமூகத்தின் கள்ள மவுனம் கூட காரணம் தான்.

நேற்று வெளி வந்த மற்றொரு செய்தி மேலும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது..
ஆமாம்…
ICHR, தனது இணைய தளத்தின் பக்கத்தில் நமது நாட்டின் முதல் பிரதமரான, ஜவஹர்லால் நேரு அவர்களின் புகைப்படம் இல்லாமல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர இந்தியாவின் சிற்பி என்று வரலாற்றில் இடம்ப பெற்ற ஜவஹர்லால் நேரு
அவர்களின் புகைப்படம் நீக்கப்பட்டது இப்போது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது..

இதில் பெரிய வேடிக்கை, ICHR இணைய தள பக்கத்தில் V.D. சவர்க்கர் படம் கூட இடம்பெற்றுள்ளது என்பது தான்.
இதே நிலை தொடர்ந்தால்…
இனி வரும் காலங்களில்….
சுதந்திர போராட்ட காலத்தில், தங்களது, பிரிட்டிஷ் எஜமானர்களின், கால்களையும், செருப்புகளையும் நக்கிப் பிழைத்த,மன்னிப்பு கடிதம் கொடுத்து உயிர் தப்பி ஓடிய கேடு கெட்ட கயவர்கள் அனைவரும் வரலாற்றில், தியாகிகள் என்று பொறிக்கப்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை….

நன்றி

சாகுல் அமீது. முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here