திருவள்ளூர் பட்டாபிராம் பகுதியில்

பட்டாபிராம் பகுதியில் கடைவீதிகளில் சிறு வணிகர்களிடமும், கடை வியாபாரிகளிடமும் செப் 27 பாரத் பந்தையொட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது. பெரும்பாலான வியாபாரிகளுக்கு  செப் 27 முழு கடையடைப்பு போராட்டம் என்பதே தெரியவில்லை. அவர்களிடம் விளக்கிய பிறகு புரிந்துக் கொண்டார்கள். மேலும் எங்கள் வணிகர் சங்கத்தில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்பதயும் கூறினார்கள்.

பிரச்சார படங்கள்

 

கருவேப்பிலங்குறிச்சி

செப்-27 டெல்லி விவசாயிகளின் பாரத் பந்த்!

கருவேப்பிலங்குறிச்சி கடைவீதியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம்!!

கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் வட்டாரம் மக்கள் அதிகாரம் சார்பில் இன்று (25/09/2021) கருவேப்பிலங்குறிச்சி கடைவீதியில் வணிகர்கள் மற்றும் பொது மக்களிடம் டெல்லி விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் வணிகர்கள் ஆதரவு தெரிவித்தனர் பத்து மாதமாக போராடும் விவசாயிகளுக்கு நாம் தோள் கொடுக்க வேண்டும் என்றனர்.

பொது மக்களும் மோடி அராஜக நடவடிக்கையை தங்களது அனுபவத்தில் இருந்து பதிவு செய்தனர்.

தகவல்:

தோழர். மணிவாசகம்,

(வட்டார ஒருங்கிணைப்பாளர்) விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம்.

தொடர்புக்கு:

88703 81056

வண்டிபாளையம்

செப்-27 டெல்லி விவசாயிகளின் பாரத் பந்த்!

வண்டிப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம்!!

மக்கள் அதிகாரம் சார்பில் இன்று (25/09/2021) கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் செப்டம்பர் 27 விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்ற வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தகவல்:
தோழர் பாலு,
மண்டல ஒருங்கிணைப்பாளர்,
கடலூர் மண்டலம்.
தொடர்புக்கு:
81108 15963.

திருவெண்ணைநல்லூர்

திருவெண்ணைநல்லூர் வட்டாரம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி செப்டம்பர் 27 நாடு தழுவிய பந்த் ஆதரித்து அரசூர், திருவெண்ணைநல்லூர், பெரியசெவலை,மடப்பட்டு ஆகிய ஊர்களில் கடை முழுவதும் நோட்டிஸ் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

பந்த் ஆதரவாக கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பேசப்பட்டது.

தகவல்:
தோழர் அரிகிருஷ்ணன்
மக்கள் அதிகாரம் திருவெண்ணைநல்லூர்
வட்டாரம்

 

பச்சைபெருமாநல்லூர்

செப்டம்பர் 27 டெல்லி பாரத் பந்த்! பச்சைபெருமாநல்லூர் பகுதிகளில் பிரசுரம் வினியோகம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக வருகின்ற 27/9/ 2021 அன்று நடைபெறுகின்ற.

பாரத் பந்த் போராட்டத்தில் சீர்காழியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று இன்று 25/9/2021 பச்சை பெருமாநல்லூர், உமையால்பதி பகுதிகளில் பிரசுரம் வினியோகம் நடைபெற்றது.

தகவல்
தோழர் ரவி
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
மயிலாடுதுறை மாவட்டம்
9843480587

 

வேட்டவலம்

செப்-27 டெல்லி விவசாயிகளின் பாரத் பந்த்!

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், வேட்டவலம் பகுதி கடைவீதியில் மக்கள் அதிகாரம் சார்பில் இன்று (24-09-2021) வணிகர்களிடம் டெல்லி விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

பெரும்பாலான வணிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.போராடும் விவசாயிகளுக்கு நாம் ஆதரவு தெரிவிக்கும் விதமாக 27-ஆம் தேதி கடையடைப்பு செய்யவேண்டும் என்று பிரச்சாரம் செய்ததை ஏற்றனர்.

தகவல்:
தோழர்.பார்த்திபன்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
திருவண்ணாமலை மாவட்டம்.
தொடர்புக்கு:
809-862-3480

திருச்சி

செப்டம்பர்-27 பாரத் பந்த்தை முன்னிட்டு

திருச்சி அரியமங்கலம்,காட்டூர்,திருவரம்பூர் பகுதிகளில் மக்கள் அதிகாரம் மற்றும் கூட்டமைப்பு தோழர்கள் அப்பகுதி கடை வியாபாரிகளிடம் பிரசுரங்கள் கொடுத்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்
திருச்சி மாவட்டம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here