பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த சொல்லி மூட்டா சங்கத்தின் ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஐவரில் இருவர் உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். இருவர் ஒருநபர் குழு அறிக்கைக்குப் பின் பணியில் சேர்ந்துள்ளனர். சூலை மாதம் பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள பேராசிரியர் அமலநாதன் பணிநீக்கம் நீக்கப்படவில்லை .

மண்டலக்கல்வி இயக்குநர் உறுதி மொழி தந்ததின் அடிப்படையில் மூட்டா ஆர்ப்பாட்டம் இரவு பத்து மணிக்கு முடிந்துள்ளது. நாளை கல்லூரிக் கல்வி இயக்குநர் கல்லூரி செயலரை சந்தித்து பேச வருவதாக மண்டலக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மூட்டா போராட்டம் வெல்லட்டும்.

நன்றி
பேராசிரியர் ப. சிவகுமார்.
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here