அமெரிக்க – சீன கைக்கூலிகளின் ஆட்சி ஒழிக! மக்கள் அதிகாரம் வெல்க!

எல்லாவற்றையும் விட இன்னுமொரு ஊழல் ஆட்சியாளர் பயம் கொள்ளும் அளவு மக்கள், தம் பலத்தை கோட்டை அதிரும்படி பாடம் புகட்டியிருக்கிறார்கள். இப்போதே நாம் வெற்றி பெற்றுவிட்டோம்.

2

இலங்கையில் நடக்கும் மக்கள் எழுச்சி எந்த திசையில் செல்கிறது என்பதை பற்றியும் உடனடி இலக்கு என்ன நீண்ட கால இலக்கு என்ன என்பதை இந்த பதிவு நமக்கு விளக்குகின்றது.

அமெரிக்க – சீன கைக்கூலிகளின் ஆட்சி ஒழிக!
மக்கள் அதிகாரம் வெல்க!

இலக்கில் Goal விழுவது மட்டும் வெற்றி என்று கணிப்பிட சமூக மாற்றத்திற்கான போராட்டம் ஒரு கால் பந்தாட்டப் போட்டியல்ல, ஒரு போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களின் மனதில் ஜனநாயகமான சமத்துவமான சமூகத்திற்கான விதைகளை தூவிச் சென்றிருந்தால் அதுவும் வெற்றிதான். சமூக நீதி என்பது ஒரு நீண்ட கால வேலைத்திட்டமே ஒழிய, மந்திரத்தால் மாங்காய் பறிக்கும் மாயாஜால வித்தை இல்லை.

எந்த ஜனநாயக மாற்றத்திற்கான போராட்டமும் இந்த சமூகத்தை ஒரு அடியாவது மேல் நோக்கி நகர்த்திச் செல்லும், அதன் வீரியம் சமூகத்திலுள்ள முற்போக்கு சக்திகளின் உழைப்பிலேயே உள்ளது.

போராட்டத்தில் எந்தப் பங்களிப்பும் செய்யாத ஒரு சாரார், அடுத்தது என்ன? இனி எல்லாம் சரியாகி விடுமா? என்று அசட்டுக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆட்சி மாற்றத்திற்காக மட்டும் வேலை செய்தவர்களுக்கு இனி வரும் விளைவுகள் பற்றிய அச்சம் இருக்கலாம். சமூக மாற்றத்திற்கு உழைத்தவர்களுக்கு அது இல்லை.

இந்த 93 நாட்களில் நாம் பல வெற்றிகளை கண்டிருக்கிறோம். ஆயிரக்கணக்கான மனிதர்களை சந்திந்திருப்போம்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் மனிதர்கள் எவ்வளவு உயர்வானவர்கள் என்று நினைக்குமளவு அனுபவங்கள் எமக்கு இருக்கின்றன.

இந்தப் போராட்டம் மாளிகையை வென்றதல்ல… மனிதர்களை வென்றது என Anurudha Bandara ஒரு பதிவு எழுதியிருந்தார். அதன் தமிழாக்கம்…

Galle Face லிருந்து வர பேருந்துகள் இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு 200 ரூபாய்க்கு வரும் முச்சக்கர வண்டிக்கு இப்போது 3000/= கேட்டார்கள். பேருந்துக்காக காத்திருக்கும்போது வரும் வாகனங்களுக்கு
கைகளை நீட்டினேன்.

வியாபார நிமித்தம் சென்று திரும்பும் வழியில் சுமார் 60 வயதுடைய ஒருவர் தனது வண்டியை நிறுத்தி என்னை ஏற்றிக்கொண்டார். எப்படியோ பேசிப் பேசி போராட்ட கதைக்கு வந்துவிட்டோம்.

போராட்டத்தில் அவர் மிகவும் பாராட்டியது நான் எதிர்பார்க்காத ஒரு விடயத்தை. மும்மொழிக் கோட்பாடு. போராட்டத்தின் ஒவ்வொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மூன்று மொழிகளில் வெளியிடுவது வழக்கமான ஒன்று… (இதன் பின்னணியில் சமத்துவத்திற்காக எப்போதும் நிற்கும் பல ஆர்வலர்கள் இருக்கிறார்கள்.)

போராட்டத்தில் நமக்கே தெரியாமல் பல வெற்றிகளை பெற்றுள்ளோம்.

எப்படியோ, அவர் நிறுத்த வேண்டிய இடத்திலிருந்து மேலும் 2 கிலோமீட்டர்கள் தாண்டியும் என்னை கொண்டு வந்து இறக்கிவிட்டார்.
நாங்கள் வென்றது மாளிகையை அல்ல… மனிதர்களை.

முள்ளியவாய்க்கால் நினைவேந்தல்
தமிழ் மொழியில் தேசியகீதம்
மலையக மக்களுக்கான சிறப்பு அழைப்பு என பல்வேறு நிகழ்வுகளும் சிறுபான்மை இன உரிமைக்கான பல்வேறு உரையாடல்களும் நடந்திருக்கின்றன.
ஒரு சிலரையாவது வென்றெடுத்திருக்கிறோம். பலரை எம்பிரச்சனை பற்றி சிந்திக்க தூண்டியிருக்கிறோம்.

எல்லாவற்றையும் விட இன்னுமொரு ஊழல் ஆட்சியாளர் பயம் கொள்ளும் அளவு மக்கள், தம் பலத்தை கோட்டை அதிரும்படி பாடம் புகட்டியிருக்கிறார்கள்.
இப்போதே நாம் வெற்றி பெற்றுவிட்டோம்.

ஆகவே இந்தப் போராட்டத்தை கால் பந்து போட்டியாக பார்ப்பவர்களுக்கு சொல்வதற்கு எதுவுமில்லை. எப்போதும் போல எதிர்மறைச் சிந்தனையை பந்தி பந்தியாக எழுதி திருப்தி பட்டுக் கொள்ளுங்கள்.

மக்கள் உங்களைப் புறக்கணித்து தம் பாதையில் முன்னேறிச் செல்வார்கள். குறைந்தபட்சம் அவர்களின் பின்னால் ஓடிவரவாவது செய்யுங்கள். இல்லை குட்டையாக தேங்கிப் போவீர்கள்.

நதிகள் ஓடிக் கொண்டே இருக்கும் கடலைச் சேரும் வரை….

தோழர் மோகனா தர்ஷினி.
இலங்கை.

2 COMMENTS

  1. கட்டுரை அழகு….நம்பிக்கையை எதிர்நோக்கியிருக்கும் சமூகத்திற்கு அவ்வுணர்ச்சியை வழங்கிடும் இசையாய்… இலங்கைப்போராட்டம்…

    – பால் ராப்சன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here