ட்சியாளர்களுக்கு எதிராக மாற்று கருத்து கொண்ட செயல்பாட்டாளர்கள் மற்றும் சனநாயகம் ஆகியவற்றுக்கான அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் அனைவருக்கும் எதிராக இந்திய அரசு அடக்குமுறை சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA )சட்டத்தை எவ்வாறு ஆயுதமாக்கியுள்ளது என்ற ஆய்வின் முதல் பகுதியை பொதுமக்களுக்கு வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

உபா சட்டத்தை ரத்து செய்வதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள UAPA வழக்குகளின் உண்மை விவரங்களைச் சேகரித்து “வழக்கு மூலம் துன்புறுத்துவதற்கு” UAPA பயன்படுத்தப்பட்ட உண்மையான முறையை ஆய்வு செய்ய நாங்கள் மேற்கொண்டோம்.
இன்று வெளியிடப்படும் இந்த அறிக்கையின் முதல் பகுதியில், இந்தியாவில் UAPA சட்டத்தின் படி தேசிய புலனாய்வு முகமை (NIA) இச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி உள்ளதை நாங்கள் ஆய்வு செய்தோம். குறிப்பாக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய சனநாயக கூட்டணி 2014 மே மாதம் பொறுப்பேற்ற பின் இருக்கும் நிலையை கணக்கில் கொண்டோம்.

தேசிய புலனாய்வு முகமை அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 2009 – ஆகஸ்ட் 2022 வரைஇந்த ஆய்வுக்கான காலமாக எடுத்து கொள்ள பட்டது. அதன்படி தேசிய புலனாய்வு முகமை சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் UAPA வழக்குகள் மொத்தம் 357 இவற்றில் சுமார் 20% UAPA வழக்குகள் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின் போது பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது, அதே நேரத்தில் 80% UAPA வழக்குகள் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவை.

மாநில காவல்துறையிடம் இருந்து விசாரணைகளை தானாக தன் வசம் ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ள உள்ள அதிகாரம்: கூட்டாட்சி தத்துவத்திற்கு அச்சுறுத்தல்

தேசிய புலனாய்வு முகமை என்ற புலனாய்வு அமைப்பு மத்திய அரசால் எப்படி ஒடுக்குமுறை கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தேசிய புலனாய்வு முகமை இணையதளத் தரவுகளின் அடிப்படையில் செய்த ஆய்வில், தேசிய புலனாய்வு முகமையினால் விசாரிக்கப்பட்ட 357 UAPA வழக்குகளில் பின்வருமாறு விடைகள் கிடைத்தன. :

(i) தானாக பதிவுசெய்யப்பட்டவை: 41 வழக்குகள், அதாவது 12% வழக்குகள்;

(ii) மாநில காவல்துறையிலிருந்து தேசிய புலனாய்வு முகமை (NIA) க்கு மாற்றப்பட்டது: 316 வழக்குகள், அதாவது 88%. வழக்குகள்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பீமா கோரேகான் வழக்கை மகாராஷ்டிர மாநில காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமை NIA க்கு மாற்ற உள்துறை அமைச்சகம் ஒரே இரவில் முடிவு செய்து. அதற்கு காரணம் பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் தேர்தலில் தோல்வி அடைந்து, சிவசேனா தலைமையில் ஆன உத்தவ் தாக்கரேயின் அரசாங்கம் பதவிக்கு வந்தது காரணம். இது போல் பரந்த அளவில் அதிகாரங்களை மிகவும் தவறான வகையில் பயன்படுத்தியது.

எங்கள் ஆய்வு வின் படி, “இவ்வாறு மாற்றப்பட்ட வழக்குகளில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நாட்டின் பாதுகாப்புக்கோ அல்லது ந இறையாண்மைக்கோ எவ்வகையிலும் அச்சுறுத்தல் அல்லது வன்முறையில் ஈடுபடும் வகையில் இல்லை. எனவே மாநில காவல்துறையில் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்குகள் மாற்றப்பட்டது ஏற்புடையதல்ல. இது உள் நோக்கம் கொண்டது.

15.08.2019 அன்று மதுரையில் ஒருவர் முகநூல் பதிவை பதிவிட்ட ஒரு வழக்கு, அதில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது முகநூலில் ” இந்தியாவில் உண்மையிலேயே சுதந்திரம்இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு 2021 ஆம் ஆண்டு திடீரென்று தமிழக காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இது போன்று மத்திய அரசு தன்னிச்சையாக மாநில வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை சட்டம் மூலமாக தனது வசம் எடுத்துக் கொள்வது, மாநிலங்கள் உரிமை, கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தலாகும்.

சதி ஆலோசனை என்ற சட்டப் பிரிவு தவறாக பயன்படுத்துதல்

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA ) தவறாகிவிட்டது பற்றிய ஆய்வில் , இச் சட்டத்தின் பிரிவு 18, `சதிக்கான தண்டனை’ என்பது தவறாக பயன்படுத்தப் பட்டதை அறிய முடிந்தது. ஏனெனில் உண்மையில் ஒரு சதி நடநதிருக்க வேண்டியதில்லை. அது போல ஒரு ஒப்பந்தம் இருப்பதாக குறிப்பிடுவதே பயங்கரவாத குற்றமாக கருதப்படுகிறது. இப்பிரிவில் வழக்குத் தொடர சதி என்பதன் பொருள் குற்றம் நிகழ்ந்திருக்க வேண்டியதில்லை. எனவே எவர் ஒருவரையும் இப் பிரிவில் குற்றவாளியாக சேர்க்க முடியும்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் பிரிவு 18 உள்ள “சதி ஆலோசனை” பிரிவை தாக்கல் செய்த வழக்குகளில் படி ஆய்வு செய்த போது கீழ் கண்ட முடிவுகள் வெளிப்பட்டன.

தேசிய புலனாய்வு முகமையினால் (NIA ) விசாரிக்கப்பட்ட UAPA சட்டத்தின் கீழ் இருந்த வழக்குகளின் மொத்த எண்ணிக்கை: 357.

அதில் “சதி செய்தல் ” என்ற உபா UAPA சட்டம் பிரிவு 18 சேர்க்கப்பட்ட வழக்கு எண்ணிக்கை 238

இந்த 238 வழக்குகளில்

– சில பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்த வழக்குகள்: 86 வழக்குகள் (36%)

– ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட சம்பவம் இல்லாத வழக்குகள்
அல்லது வன்முறை எதுவும் இல்லாத : 152 வழக்குகள் (64%).

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “சதி செய்தல்” உபா பிரிவு 18 சம்பந்தப்பட்ட 64% வழக்குகளில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக உள்ளார் அல்லது அவரிடமிருந்து ஆயுதம் அல்லது வெடிமருந்துகள் அல்லது போதைப்பொருள் அல்லது பணம் மீட்கப்பட்டதாக காவல்துறையின் குற்றச்சாட்டின் கீழ் UAPA குற்றம் சாட்டப்பட்டால், அந்த நபரை கைது செய்து பல ஆண்டுகள் சிறையில் அடைக்க போதுமானது.

UAPA வழக்குகளில் தண்டனை விகிதம் குறைவு ஆனால் ஜாமீன் வருவது அரிது.

UAPA இன் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களின் உண்மையான எண்ணிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்கள் மட்டுமே தரவு ஆதாரம்; 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் தரவுகள் துல்லியமாக இருந்தாலும், ஆய்வில் இருந்து வெளிவரும் உண்மை வேதனையானது

மொத்த கைது

இந்தியா முழுவதும் 5924 UAPA வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் 8371 பேர் கைது செய்யப்பட்டனர் (அட்டவணை 2, அறிக்கை, 2015 – 2020 இல்).

மொத்தமும் ஜாமீனில் வெளிவந்தவர்கள்

2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், ஜாமீனில் விடுதலை ஆனவர்கள் எண்ணிக்கை சதவீதம் 16.88% இருந்து 16.32% ஆகக் குறைந்தது.

2019 இன் சதவீதம் எண்ணிக்கை 32.08% அதிக என இருந்தது.

ஆனால் 2019 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் இல், UAPA இன் கீழ் கைது செய்யப்பட்டதாகக் காட்டப்பட்ட 308 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர், இது நாட்டின் UAPA வழக்கு நிலையை பொருத்து வழக்குகளுக்கு மிகவும் வித்தியாசமானது. . தமிழக நீதிமன்றம் வழங்கிய பிணை வழக்குகளை ஒதுக்கி வைத்தால், பிணையில் விடுதலை ஆனவர்கள் சதவீதம் 16.27% ஆக இருக்கும். (அட்டவணை 3, அறிக்கை)

தண்டனை விகிதங்கள்

வழக்கு எண்ணிக்கை அடிப்படையில் தண்டனை அடைந்தோர் விகிதம்.: 27.57% (அட்டவணை 4)

எண்ணிக்கை அடிப்படையில் தண்டனை விகிதங்கள். கைது செய்யப்பட்டவர்கள்: 2.80% (அட்டவணை 5)

UAPA வழக்குகளில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விசாரணைக்கு பின்னர் 2.8% என்ற குறைவான தண்டனை விகிதம் உள்ளது. முந்தைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களான தடா TADA (P) சட்டம் மற்றும் பொடா POTA சட்டங்கள் நடைமுறையில் இருந்தபோது இதேபோல் குறைந்த தண்டனை விகிதமே இருந்து.

வேறு விதமாகப் பார்த்தால், 2015 – 2020 காலகட்டத்தில் UAPA-ன் கீழ் கைது செய்யப்பட்ட 8,371 பேரில், கிட்டத்தட்ட 8,136 பேர் கைது செய்யப்பட்டனர். இது சதவிகிதம் படி இந்த எண்ணிக்கை 97.2% , ஆகும். ஆனால் கைதுக்கு பின்னர் பிணை இல்லாமல் பல சிறையில் கழித்த பிறகு விடுவிக்க பட்டுள்ளனர். அறிக்கையில் நாம் குறிப்பிடுவது போல், “இத்தகையோர் கூடுதலாக விடுவிக்கப்பட்டதற்கு காரணம் பெரும்பாலான வழக்குகள் அடிப்படையில் தகுதியற்றவை மற்றும் UAPA இன் கீழ் முதலில் வழக்குத் தொடர முகாந்திரம் இல்லாதவை.

முடிவுரை

இந்த ஆய்வு சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் UAPA தவறாக நடைமுறை படுத்த பட்டு வருவதை உறுதி செய்கின்றது. அத்துடன் சட்டத்தின் பெயரில் நடக்கும் அத்துமீறல் எதிராக மக்கள் சமூகம் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், ஒன்றிணைந்து அப்பட்டமான அரச அத்துமீறலுக்கு எதிராக குரல் எழுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம். அரசியல் கட்சிகள் அதன் தலைமைகளை அரசியல் ஸ்பெக்ட்ரம் தலைவர்கள் இந்த அநீதிக்கு எதிராக பேச வைக்கவேண்டும். அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இத்தகைய சட்டங்களின் ஆபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட ஊடகங்களின் ஆதரவை நாங்கள் வேண்டுகிறோம்.

வேண்டுகோள்கள்

1. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) ரத்து செய்ய வேண்டும் ,அது போன்ற மற்ற அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

2. தேசிய புலனாய்வு முகமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் தேசிய புலனாய்வு முகமை கலைக்கப் பட வேண்டும்.

3. சிறையில் வாடும் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக பிணையில் விடுவிக்கக் கோருகிறோம்.

4. ஒடுக்கப்பட்ட சமூகங்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் மாற்று கருத்தாளர்களுக்கு எதிராக வேண்டுமென்றே பொய்யான புனையப்பட்ட வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும். அந்த வழக்குகளை தொடுத்த அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. நீதிமன்றத்தால் தவறாக குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

PUCL மற்றும் #RepealUAPA பிரச்சாரம் சார்பாக,

டாக்டர் வீ. சுரேஷ், தேசிய பொதுச் செயலாளர், PUCL,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here