கரூரில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடத்திய கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 38க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக செய்திகள் வந்துள்ளன. இது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பலியானவர்களின் குடும்பங்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்தலை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முதலமைச்சர் தலைமையில் தலைமை செயலகத்தில் அவசர கூட்டம் நடந்து வருவதாகவும் கரூரில் அமைச்சர்கள் நேரில் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலையிலேயே ஒரு 10 வயது சிறுவனிடம் தொலைக்காட்சி பேட்டி எடுக்கையில் தான் விடியற்காலையிலேயே வந்துவிட்டதாகவும், விஜயை பார்ப்பதற்காக சாப்பிடாமல்  காத்திருப்பதாகவும் தெரிவித்தான். இதை கேட்கும் பொழுதே நமக்கு பக்கென்று இருந்தது. கடும் வெயிலில் சாப்பிடாமல் குழந்தைகள் எப்படி தாங்கும்.?

இந்த ஒரு சிறுவன் மட்டுமல்ல, பள்ளி காலாண்டு விடுமுறை அறிவித்திருப்பதனால் பல சிறுவர்களும் குழந்தைகளும் விஜயை பார்க்க வந்திருப்பார்கள். காலை 8.45 மணிக்கு நாமக்கலுக்கு வருவதாக திட்டம். ஆனால் சென்னையிலிருந்து கிளம்பியதே காலை 8.30 மணிக்கு தான் என்கிறார்கள். இதெல்லாம் பொறுப்பற்ற கோமாளி விஜய்க்கு பிரச்சினை இல்லை. தன்னை பார்க்க ஒரு கூட்டம் எப்போதும் காத்திருக்கும் என்ற திமிர்.

கரூரில் மதியம் 12 மணிக்கு வருவதாக இருந்த விஜய் இரவு 7 மணிக்கு தான் வருகிறார். காலையிலிருந்து விஜயை பார்க்க காத்துக் கொண்டிருந்த கூட்டம் இரவு 7 மணிக்கு விஜய் வந்த பிறகு முண்டியடித்து விஜயை பார்க்க பலரும் நெருங்கியதாலயே இவ்வளவு பெரிய பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 38 உயிர்களை பலி கொண்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பு நடிகர் விஜயையே சாரும்.

பலர் மயக்கமடைந்து விழுந்த நிலையில் ஆம்புலன்ஸ் உள்ளே வருவதை தடுத்து நிறுத்தியுள்ளனர் விஜயின் தற்குறி தொண்டர்கள். சில ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கியும் உள்ளனர். கூட்டத்திலிருந்து எஸ்கேப் ஆன விஜய் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பகையில் எதற்கும் பதில் அளிக்காமல் தெறித்து ஓடியுள்ளார் 40 பேர் இறந்திருக்கிறார்களே என்று கேட்கும் எந்த பதிலும் விஜய்யிடம் இருந்து வரவில்லை.

ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரச்சாரத்திற்கு திட்டமிட்டுள்ள நடிகர் விஜய் முதல் சனிக்கிழமை திருச்சியிலும் இரண்டாவது சனிக்கிழமை நாகை திருவாரூரிலும் தனது பிரச்சாரத்தை நடத்தியவர் இன்று நாமக்கல் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளார் இதில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தான் விஜயை பார்க்க வந்த ரசிகர்கள் பலியாகி உள்ளனர்.

பொதுவாக விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த நாட்களில் இருந்து இதுவரை அவர் நடத்தும் கூட்டங்களில் மக்கள் அதிகம் கூடுவதை பார்க்க முடிகிறது தமிழ்நாட்டில் நடிகர் விஜய் மிகச் சிறந்த பிரபலமாகவும் நடிகராக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். அதனாலயே அவர் நடத்தும் ஒவ்வொரு கூட்டத்திலும் அவரின் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க கூடும் கும்பல் போல் அவரின் அரசியல் கூட்டங்களிலும் கூடுகிறது.

இது விஜயின் அரசியலுக்காக கூடும் கூட்டம் அல்ல முழுக்க முழுக்க ரசிகர் கும்பலே திரையில் பார்த்து வந்த நடிகர் விஜய் நேரில் பார்ப்பதற்காக கூடும் கூட்டமே. அதனால்தான் ஒவ்வொரு கூட்டத்திலும் ரசிகர்கள் எல்லை மீறுவதும் கூட்டம் நடக்கும் இடங்களில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது.

படிக்க: சினிமா டூ மாநாடு: நடிப்பில் அசத்தும் விஜய்!

தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள் நடக்கின்றன. இப்படியான பாதிப்பை ஏற்படுத்தாததற்கு காரணம் அவை ரசிகர் கும்பல் அல்ல என்பதுதான். சினிமாவில் நடிகர்களை ஆராதிக்கும் இளைஞர் கூட்டம் எந்தவிதமான அரசியல் அடிப்படைகள் அற்று விட்டேத்தித்தனமான கும்பலாகவே உள்ளது. ரசிகர்கள் மட்டுமல்ல நடிகர் விஜய்யும் அப்படியான நபர்தான்.

இத்தகைய கும்பலை கட்டுப்படுத்தி அசம்பாவிதங்கள் நடக்காது இருக்க அரசும் போலீஸும் நீதிமன்றமும் கட்டுப்பாடுகள் விதித்தால் அது தன்னைக் கண்டு அஞ்சி கட்டுப்பாடு விதிப்பதாக கூப்பாடு போட்டார் விஜய். பிரதமர் மோடி வரும்போது கட்டுப்பாடு விதித்தீர்களா? என்று மொன்னைத்தனமாக கேள்வி கேட்டார். இன்று அதன் விளைவாகவே இந்த பலிகள் நடந்துள்ளது.

மக்களை திட்டமிட்டு காத்துக் கொண்டிருக்க வைத்து படுகொலையை நிறைவேற்றி உள்ளது நடிகர் விஜய்யும் அவரது தவெக கட்சியும். இந்த படுகொலைக்கு காரணமான நடிகர் விஜய் உடனடியாக  கைது செய்வதோடு அவரது அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி மறக்க வேண்டும்.

இளைஞர்களே, விஜய் ரசிகர்களே உங்கள் உயிர் விலைமதிப்பற்றது. நமக்கு உள்ள பிரச்சினைகளுக்கு மாற்று விஜய் போன்ற அரசியலற்ற தற்குறி தலைவனிடம் இல்லை என்பதை உணர்ந்து உண்மையான மாற்றை நோக்கி நகருங்கள்.

மக்கள் அதிகாரம்
ஆசிரியர் குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here