சுபாஷினி யின்
வீடியோ உரை:

27-07-2025 அன்று ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் சுபாஷினியின் காதலன் பட்டியலினத்தைச் சேர்ந்த அப்பாவி கவின் செல்வகணேஷ். நான்கு நாட்கள் கடந்த பிறகு 31-07-2025 அன்று சுபாஷினி வீடியோ உரை நிகழ்த்தி அதே நாளில் காட்சி ஊடகங்களில் வெளிவந்து விட்டது.

கவினைத் தான் காதலித்தது உண்மைதான் என்று இப்போது அவர் கூறுவது உண்மை எனில், கவின் கொலை யுண்டு நான்கு நாட்கள் ஆகியும் ‘தலைமறைவாய்’ இருந்தாரா? சாதிவெறியர்கள், காவல்துறை ஆகியோரால் ‘வீட்டுக் காவலில்’ வைக்கப்பட்டிருந்தாரா ? நமக்கு தெரியவில்லை. இதற்கிடையில் காவல்துறையில் சுபாஷினி வாக்குமூலம் கொடுத்ததாக பரப்பப்பட்ட செய்தி இதுதான்:
“நான் கவினைக் காதலிக்கவே இல்லை; அவரை எனக்கு முன் பின் தெரியாது; வீணான வதந்திகள் பரப்பப்படுகிறது…” என்ற பாணியில் பத்திரிகைகளில் இன்னபிற ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால் இச்செய்திகளுக்கு உடனடியாக சுபாஷினி பதில் கூறவில்லை.

31-07-2025 தேதியில் சுபாஷினியின் வீடியோ உரையில்தான், “நான் கவினைக் காதலித்தது உண்மைதான்; ஆனால் கவின், ஒரு ஆறு மாத காலத்திற்கு இவ்விஷயத்தை உனது பெற்றோரிடம் கூறி விடாதே…  என்று சொன்னதால், எங்கள் காதல் விவாகரத்தை எனது பெற்றோரிடம் நான் தெரிவிக்கவே இல்லை” என்று ஒரு கதை சொல்கிறார்.அதன் தொடர்ச்சியாக “அதனால் எங்கள் காதல் பற்றிய விஷயம் எதுவும் எனது பெற்றோருக்கு உறுதியாகத் தெரியாது; எனவே இதுகுறித்து வீணான வதந்திகளைப் பரப்பாதீர்கள்; கவின் தாத்தா விபத்திற்கு உள்ளாகி திருச்செந்தூரில் இருந்தவரை நான் பணியாற்றும் நெல்லை சித்தா மருத்துவமனைக்கு 28ஆம் தேதி தான் வரச் சொல்லி இருந்தேன். ஆனால் கவின், அவரது அம்மா, மாமா அனைவரும் 27ஆம் தேதியே மருத்துவமனைக்கு வந்து விட்டார்கள். நான் ICU -வில் சேர்த்து சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தேன். கவின் அப்பா, அம்மா என்னுடன் பேசிக் கொண்டிருந்த வேளையில், வெளியில் சென்ற கவினை எப்படியோ எனது தம்பி சுர்ஜித், பெண் கேட்க வீட்டுக்கு வா என்று கூட்டிச்சென்று ‘இப்படி’ நடந்து விட்டது. அதனால் தேவையில்லாமல் இப்பிரச்சனையில் எனது பெற்றோரை சம்பந்தப்படுத்தாதீர்கள்; வதந்திகளை பரப்பாதீர்கள்; ப்ளீஸ் இத்தோடு இதனை விட்டு விடுங்கள்….” என்று தனது பெற்றோரை வழக்கில் காப்பாற்றும் நோக்கில் கருத்துக்களைப் பதிவு செய்கிறார்.

அப்படியெனில் நடந்தது என்னவாக இருக்கும்?

‘காதலன்’ கவின் கொலையுண்ட பிறகு, அவனை எனக்கு முன் பின் தெரியாது; அவனை நான் காதலிக்கவே இல்லை…’ என்று காவல்துறை விசாரணையில் ‘காதலி’ சுபாஷினி தெரிவித்ததாக வந்த செய்திகளுக்கு சுபாஷினி ஏன் அப்போதே மறுப்புத் தெரிவிக்கவில்லை?

கவினும், சுபாஷினியும் நெருங்கி இருந்த புகைப்படங்கள் கவினின் பெற்றோர் மூலமாக வெளிவந்து, அவை அச்சு ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் வெளியான பிறகு தான் சுபாஷினி ஜூலை 31-ல் தமது வீடியோ உரையில் ‘நானும் கவினும் காதலித்தது உண்மைதான்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க முன்வந்துள்ளார் என்று நாம்தான் யூகிப்பதில் தவறே இல்லை.

வீடியோ உரையில் கூட, தமது பெற்றோரை இவ்வழக்கில் இருந்து தப்புவிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே பிரதான நோக்கத்தை வெளிப்படுத்துகின்ற முறையில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

கூடுதலாக, கொலைகாரனான சுபாஷினியின் தம்பி சுர்ஜித், மருத்துவமனையில் கவின் இருப்பதை அறிந்து கொண்டதும், கவினிடம் இலகுவாகப் பேசி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று தனது வீட்டு வாசலிலேயே கண்களில் மிளகாய்ப் பொடியை அள்ளிக்கொட்டி, வீச்சரிவாளால் கவினை வெட்டி வீழ்த்தி கொலை செய்திருக்கிறான். கவினும்-சுபாஷினியும் பள்ளிப் பருவக் காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளதாக தெரிய வருகிறது. இதை அறிந்து வைத்திருந்த சுர்ஜித் திட்டமிட்டு கவினைப் படுகொலை செய்ய முனைந்திருந்த வேளையில், அவன் எப்படி தனது பெற்றோர்களான காவல் சார்ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ண குமாரிக்கு தெரிவிக்காமல் இருந்திருப்பான்? ஆக ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் வெகு காலத்திற்கு முன்பே இவர்கள் காதல் விடயம் நன்றாகவே தெரிந்திருக்கிறது. பட்டியல் சாதி பையனை ஆதிக்க சாதியான தேவர் இன நம் வீட்டு பெண் வாழ்க்கை நடத்த அனுமதிப்பதா என்ற ஆணவத்திலும் சாதிவெறியிலும் தான் அவர்கள் பிறருடன் இணைந்து கூட்டு சதி செய்து இந்த ஆணவப் படுகொலையை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

படிக்க:

♦ நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை! என்றுதான்டா அடங்கும் உங்கள் ஆதிக்க சாதிவெறி? மிருகங்களா!

காவல்துறை உருப்படியாக விசாரணையை முன்னெடுத்தால் இது சரவணன் தம்பதியர் – சுர்ஜித் – சுபாஷினி குடும்பத்தினர் மட்டும்தான் குற்றவாளிகளா? இதன்பின் ஆதிக்க சாதி வெறியர்கள், உறவினர்கள் அனைவரும் கலந்து பேசி கூட்டு நடவடிக்கைகள் மூலமாக அரங்கேறி இருக்கிறார்களா? என்று முழுமையாக தெரிய‌வரும்.

ஏற்கனவே, கோகுல்ராஜ் ஆணவக் கொலைவழக்கில் தொடர்புடைய பெண் “கோகுல்ராஜை சந்திக்கவே இல்லை” என்று மாறியதை பார்த்திருக்கிறோம். கொலையுண்ட கோகுல்ராஜிக்காக வழக்காடிய தோழர் ப.பா. மோகன் அந்த பெண்ணின் பிறழ்சாட்சியை முக்கியமானதாக கணக்கில் கொள்ளக் கூடாது. அது சமூக அழுத்தங்களின் காரணமாக வந்திருக்கும். பிற சாட்சியங்களையே முக்கியமாக கொள்ள வேண்டும் என்று வைத்த வாதத்தை ஏற்ற நீதிமன்றம் கொலையாளி யுவராஜிக்கு தண்டனையை உத்தரவாதப்‌படுத்தியது‌. அதே போல், கவின் ஆணவக்கொலை வழக்கிலும் சுபாஷினியின் காணொளியை முக்கியமானதாக கருதப்படக் கூடாது. அதன்பின் அவர் பெற்றோருடன் வேலை செய்த காவல்துறையினரோ, சாதிவெறி உறவினர்களோ இருக்கக்கூடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காவல்துறையும் அரசாங்கமும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதாது: 

இந்த ஆணவப் படுகொலை தொடர்பாக, காவல்துறையும் அரசாங்கமும் மேற்கொண்டிருக்க கூடிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் போதாது. போதவே போதாது!

கொலை நடந்திருக்கிறது. எஃப் ஐ ஆர் இல் கொலையாளி என சரண்டர் ஆன சுர்ஜித், அவனின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இக்கொலை வழக்கில் எஃப் ஐ ஆர் இல் இடம்பெற்ற சுர்ஜித் தவிர காவல்துறை சார் ஆய்வாளர்கள் சரவணனும் கிருஷ்ணகுமாரியும், காவல் உயர் அதிகாரிகளால் பணி இடைநீக்கம் மட்டுமே செய்யப்படுகின்றனர். நடந்ததோ ஆணவப் படுகொலை. இதில் பணியிடை நீக்கம் மட்டும் போதுமானதா? இது தொடர்பாக கவினின் பெற்றோர், சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரியைக் கைது செய்யப்படும் வரை நாங்கள் கவின் உடலை வாங்கவே மாட்டோம் என்று உறுதியாக நின்று போராடியதும், பல்வேறு அரசியல் கட்சிகள் கோபக்கனலில் அறிக்கைகள் விட்டதும், போராட்டங்களில் இறங்கியதுமே தற்போது காவல்துறையால் சரவணன் மட்டும் கண் துடைப்பிற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், கிருஷ்ணகுமாரி கைது செய்யப்படாமல் இருப்பதிலிருந்து வழக்கு விசாரணை நேர்மையாக செல்லவில்லை என்பதை உணர முடிகிறது. எனவே, முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கிருஷ்ணகுமாரியும் உடனடியாக கைது செய்யப்படல் வேண்டும்.

கவின் இறந்த நாள் முதல் துக்கத்தைக்கூட வெளிப்படுத்தாமல், பெற்றோரைப் பாதுகாக்கும் நோக்கிலான சுபாஷினியின் உரையைப் பார்க்கும் போது
தனது காதலன் சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட காலத்தில், காதலி கௌசல்யா தனது ஒட்டுமொத்த குடும்பத்தையுமே தனது கால் தூசுக்கு சமமாக பாவித்து உதறித் தள்ளிவிட்டு துக்கத்தின் உச்சத்தை வெளிப்படுத்தி சங்கர் குடும்ப பக்கம் சார்ந்து நின்றாரே, இன்று வரை மார்க்சிய- பெரியாரிய- அம்பேத்கரிய கொள்கையாளர்களின் அரவணைப்பினை பெற்று சொந்த காலில் நிற்கிறாரே, அதை நாம் பாராட்ட வேண்டும். ஆணவக்கொலைக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமல்ல, உண்மையான காதலுக்கும் கௌசல்யா போன்றவர்களே வழிகாட்டியாக இருக்க முடியும்.

நிலவும் சட்டகத்துக்குள்ளிருந்து காவல்துறையும் அரசாங்கமும் என்ன செய்யலாம்?
  • வழக்கு விசாரணையை சிபிசிஐடி-யிலிருந்து விடுவித்து தரமான உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, அவரது முழு கண்காணிப்பில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். நீதிபதியும் அதில் ஈடுபடக் கூடிய காவல்துறை அதிகாரிகள், கீழ்மட்ட காவலர்கள், அலுவலர்கள் அனைவரும், சரவணன் – கிருஷ்ணகுமாரி சாதியையோ அல்லது ஆணவப் படுகொலைகளை தொடர்ந்து அரங்கேற்றி வரும் சாதியினரையோ ஈடுபடுத்தவே கூடாது. நன்கு குறிப்பறிந்து விசாரணக் குழு தலைவரையும் அதில் அங்கம் வைப்போரையும் தேர்வு செய்ய வேண்டும்.
  • இவ்வழக்கில் FIR-ல் இடம் பெற்றுள்ள கிருஷ்ணகுமாரியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
  • விசாரணையின் போக்கில் தேவைப்பட்டால் சுபாஷினியையும் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
  • இக்கொலையில் சரவணன் குடும்பத்தினர் கூட்டுச் சதி மட்டுமின்றி, இச்சதிக்கு வேறு யார் யாரெல்லாம் உடந்தை என்பதனை புலனாய்வு செய்து அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும்.
  • இப்படிப்பட்ட ஆணவப் படுகொலைகள் இந்த விஞ்ஞான யுகத்திலும், தடுத்து நிறுத்தப்படவே முடியாமல் நீடித்துக் கொண்டே செல்வதால், குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்ட பின் அவர்களுக்கு வழங்கப்படக்கூடிய தண்டனை என்பது மரண தண்டனைக்கு குறையாமல் இருக்க வேண்டும். அப்பொழுது
    தான் பிறருக்கு ஒரு அச்சத்தை உண்டாக்கும்.
  • மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பாதித்த கவின் குடும்பத்தினருக்கு உடனடியாக
    ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
  • 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக காட்டியுள்ள வழிகாட்டுதல்களின்படி கவின் குடும்பத்தினருக்கு ஐந்தரை ஏக்கர் சாகுபடி நிலம் ஒதுக்கீடு செய்யப்படல் வேண்டும்.
  • குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியான அரசுப் பணி வழங்க வேண்டும்.
  • ஜெயலலிதாவுடன் ஆதிக்க சாதி வெறி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த சசிகலா இணைந்து வேலை செய்த காலத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, தஞ்சை, கடலூர் விழுப்புரம் இன்னும் மேற்கு மாவட்டங்கள் போன்ற பகுதிகளில் எல்லாம் காவல்துறையில் காவலர் முதல் சார் ஆய்வாளர், ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆதிக்க சாதி குடும்பத்தினரைச் சேர்ந்தவர்களையே மிக அதிகமாக நியமனம் செய்துள்ளனர்.

ஆக, காக்கி உடையுடன் ஆதிக்க சாதி வெறியும் இணைந்து கொள்வதால் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அவர்களது இழிவான நடவடிக்கைகள் பேராபத்து நிறைந்ததாய் உள்ளது. அதற்கு ஒரு உதாரணம் திருப்புவனம் – மடப்புரம் அஜித் குமாரை கொலை செய்த கொலைகார காவலர்களின் சாதி அடையாளங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். திருப்புவனம் பகுதி ஒரு காவல் சார்ஆய்வாளரையே ஆதிக்க சாதியினர் வெட்டி கொலை செய்ததையும், பின் ‘என்கவுண்டர் புகழ்’ டிஎஸ்பி வெள்ளத்துரை கொலையாளிகள் நான்கைந்து பேரை சுட்டு வீழ்த்தியதையும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

எனவே, இப்படிப்பட்ட நியமனங்களை கண்காணிப்பு செய்து, தனிநபர்களை மதிப்பீடு செய்து, சாதி ஆதிக்க வெறி உணர்வு கொண்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் குறைந்தபட்சம் எந்தெந்த பகுதிகளுக்கு மாறுதல் செய்யலாம் என்ற அளவிலாவது முடிவு எடுத்து மாறுதல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

  • இதுவரை இல்லாத அளவிற்கான மிகக் கடுமையான ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டத்தை எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.
  • கல்விச்சாலைகளில் முதல் வகுப்பு முதல் பட்டய படிப்பு வரை சாதி ஒழிப்பு மற்றும் சாதி மறுப்பு சிந்தனைகளை மாணவப் பருவத்திலேயே விஞ்ஞான பூர்வமான வகையில் ஊட்டுவதற்கு ஏதுவாக பாடத்திட்டங்கள் வகுத்து அதற்கான பாடப் புத்தகங்களையும் ஒவ்வொரு வகுப்பிலும் இணைத்திடல் வேண்டும். அத்துறைக்
    கான ஆசிரியர் பணியிடங்களை (உதாரணமாக ஆங்கிலம், தமிழ், கணிதம்…
    என்பன போன்றவற்றுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்வதைப் போன்று) ‘சாதி ஒழிப்புப் பாட ஆசிரியர்’ என்று அதற்கான ஆசிரியர்களை மாநில முழுமையும் நியமனம் செய்யப்படல் வேண்டும்.
  • வடமாநிலங்களில் இந்துத்துவக் கொள்கைகளை குறிப்பாக ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பாடப் புத்தகங்களில் திணிக்கின்ற கேவலம் நீடிக்கின்ற பொழுது, இது பெரியார் மண் என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் நாம் நமது மாநிலத்தில் சாதிகளை நிலை நிறுத்த ஆதாரமாக இருக்கக்கூடிய, சனாதனப் பார்ப்பனீயம், மனுதர்மம், பகவத் கீதை, புராண இதிகாச குப்பைகள், இவற்றை தூக்கிப் பிடிக்கும் தீய சக்திகள்…. அனைத்திலிருந்தும் குறிப்பான அம்சங்களை எடுத்து அம்பலப்படுத்தி சாதி மறுப்பு சாதி ஒழிப்பு கண்ணோட்டம் மாணவப் பருவத்திலேயே அவர்களுடைய மூளைகளில் பதியச் செய்யப்படத் தக்க நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களே!

தமிழ்நாட்டு மக்களைப் பொருத்தமட்டில், ஒவ்வொருவரும் இந்த பார்ப்பனீயக் கட்டமைப்பில் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தோராய் இருந்தாலும், அறுதிப் பெரும்பான்மை மக்களாக இருக்கக்கூடிய உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் ஒன்றேதான். விலைவாசி உயர்வோ, வேலையில்லா திண்டாட்டமோ, பசி – பஞ்சம் – பட்டினியோ சாதி பார்த்து வருவதில்லை. இக்கொடுமைகளை எல்லாச் சாதியினரும் தான் அனுபவிக்கின்றார்கள். மிகப்பெரும் பணக்காரன் அல்லது முதலாளி அல்லது பண்ணையார் அல்லது கந்து வட்டி கொள்ளையன் அல்லது ரியல் எஸ்டேட் கொள்ளையன் அல்லது தாது மணல் கொள்ளையன்…. இந்த கூட்டத்தினர் கூலித் தொழிலாளிகள் வீட்டிலோ, கூலி விவசாயிகள் வீட்டிலோ சம்மந்தம் பண்ணிக் கொள்வதில்லை. அங்கே வர்க்கம் தலை தூக்குகிறது. இந்த ஆழமான உண்மைகளை புரிந்து நமக்கான நிரந்த விடுதலை என்பது பாட்டாளி வர்க்க விடுதலை மூலமே சாத்தியம் என்ற புரிதலுக்கு வர வேண்டும்.

படிக்க:

கோகுல்ராஜ் சாதிஆணவப் படுகொலை வழக்கு : தீர்ப்பு எளிதில்பெற்ற ஒன்றல்ல.

சாதிய உணர்வுகளை உழைக்கும் மக்கள் முற்றாக தூக்கி எறிய வேண்டும். பிழைப்புவாதிகளான பெரும் பணக்காரர்கள் நிலச்சுவான்தார்கள் தத்தம் சுயநல காரியவாதங்களுக்காக – பிழைப்பு வாதங்களுக்காக – தாம் தாம் சேர்த்து வைத்துள்ள பல்லாயிரம் கோடி சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தம் சாதி மக்களை பின் இணைத்துக் கொண்டு, சாதிய இயக்கங்களுக்கு தலைமை தாங்குகிறார்கள். அதில் எந்த சாதியும் விதிவிலக்கல்ல. உதாரணத்திற்கு பாரிவேந்தராக இருக்கட்டும் ராமதாஸ் மற்றும் அன்புமணி போன்றோராய் இருக்கட்டும்; இன்ன பிற சாதி சங்க தலைவர்கள் ஆகட்டும்…. அவர்கள் தத்தம் உழைக்கும் மக்களுக்கு தவறான வழிகாட்டுதல் கொடுத்து அனைத்து சாதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களை ஒன்று சேரவிடாமல் தடுக்கின்றனர்.

யோக்கிய சிகாமணிகள் போல் பேசுவோர் கவனத்திற்கு:

‘எங்கோ ஒரு பொறுக்கிப் பயல் இப்படிப்பட்ட இழிவான ஆணவப் படுகொலை செய்ய நேர்கின்ற பொழுது, ஒட்டுமொத்த சாதியினரையும் குறை சொல்வது சரிதானா?’ என்று மிகவும் நல்ல பிள்ளைகள் போல் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
அவர்களுக்குச் சொல்லிக் கொள்வோம். இப்படிப்பட்ட ஆணவப் படுகொலை நிகழ்கின்ற கால நேரத்தில், சமூகத்தில் உங்களுடைய பங்களிப்பு என்னவாக இருந்திருக்கிறது? கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கின்றீர்களா? கண்டித்து வீதியில் இறங்கி போராடி இருக்கின்றீர்களா? எதையுமே செய்யாமல் மௌனம் காப்பதே அந்த கொடுஞ்செயலுக்கு நீங்களும் உடந்தையாக இருக்கின்றீர்கள் என்பதை மறவாதீர்! எனவே, குறுக்குச்சால் ஓட்டி உங்களது ஆணவ ஆதிக்க சாதி கண்ணோட்டத்தில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது.

எனவே, உண்மையிலேயே உங்களது மனசாட்சி உறுத்துமானால் சாதி ஒழிப்பு மற்றும் ஜனநாயக இயக்கங்களுடன் நீங்கள் கரங்கோர்க்க வேண்டிய தருணம் இது என்பதனை உணருங்கள். அதைவிடுத்து உங்களது பசப்பல் வார்த்தைகளால் மக்களை ஏமாற்றாதீர்கள்.

எழவு வீட்டில் நானே பிணமாக இருக்க வேண்டும்! கல்யாண வீட்டில் நானே மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்!

இத்தலைப்பிற்கு பொருத்தமானவர்கள் ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ சங்கிக் கூட்டமே!

மேலும் எழவு விழுந்தால் அரசியல் அறுவடைக்காக ஓடோடிச் செல்லும், போராட்டங்களை முன்னெடுக்கும் – பக்க கணக்கில் அறிக்கைகள் விடும் எச் ராஜா, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை, வானதி, கரு.நாகராசன் & கோ போன்ற சங்கி கூட்டங்கள் கவின் ஆணவப் படுகொலை விடயத்தில் எங்கு இருக்கின்றார்கள் என்றே தெரியவில்லையே? ஏன்? இதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். காரணம் இப்படிப்பட்ட படுகொலைகளுக்கு இந்த சங்கிகளின் அடிப்படை ‘சித்தாந்தங்கள்’ தான் காரணம் என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும். இவற்றைத் தான் வட மாநிலங்களில் இந்த காவி கூட்டம் அரங்கேற்றுக் கொண்டிருக்கிறது.

எனவே இப்போதைய நமது தேவை: உழைக்கும் மக்கள் ஒற்றுமை! பாட்டாளி மக்கள் ஒற்றுமை! கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கான ஒற்றுமை!
ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதற்கான ஒற்றுமை!

அப்படை வரிசையில் ஒன்றிணைவோம் வாரீர்!

  • எழில்மாறன்

17 COMMENTS

  1. #கொலையுண்ட ‘காதலன்’ கவினும் – வழக்கில் பெற்றோரைப் பாதுகாக்கத் துடிக்கும் ‘காதலி’ சுபாஷினி யும்#

    கவின் ஆணவக் கொலையில் சுபாஷினி காதலிக்கவே இல்லை என மாற்றி பேசியது பெரிய விஷயமாக பார்க்க முடியாது ஏனென்றால் இளவரசன் படுகொலையிலும் இன்னும் வெளியே தெரியாத பல்வேறு ஆணவ படுகொலையும் காவல் நிலையத்தில் தாய் தந்தையரே வைத்து தற்கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி என்னிடம்காதலிக்கவில்லை என்று வாக்குமூலம் வாங்குவார்கள், காவல் நிலையத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து பேசி ஆதிக்க சாதி என்றாலும் ஆதிக்க பணபலம் வந்தாலும் அங்கேயே இருவரையும் பிரித்து பையன்மீது கடத்தல் வழக்கு பதிவு செய்வார்கள் இது எழுதப்படாத சட்டம். பெண்ணின் தாய் தந்தையர் இருவரும் அரசு வேலையில் அதிலும் அனைத்து சட்டமும் திறந்த காவல்துறையில் பணிபுரிந்து கொண்டு தனது மகன் விதவிதமான கத்தி அருவாளுடன் சமூக வலைதளங்களில் பதிவிடுவது ஆதிக்க மனம் பன்மையுடன் செயல்படுவது தாய் தந்தையருக்கு எவ்வாறு தெரியாமல் இருக்கும் அதோடு ஆதிக்க சாதி மன கண்ணோட்டமே எளிமையாக கொலை செய்ய தூண்டி இருக்கிறது இவ்வாறு இந்த காதல் விவகாரத்தில் ஆணவ படுகொலை செய்வதே சாதிப் பெருமையாகவே இவர்களின் ஆதிக்க சமூக உலகத்தில் பார்க்கப்படுகிறது, எனவே இவர்கள் சிறைக்கு பயப்படுவதில்லை காட்டவே வீட்டை வித்து இரண்டு மூன்று வருடங்களில் வெயிலில் வந்து விடலாம் என்பது பெரும்பான்மையான ஆதிக்க சாதி வெறியர்களின் எண்ணமாக இருக்கிறது, எனவே ஆணவ படுகொலைக்கு எதிரான கடுமையான சட்டமே இதற்கு தீர்வு என கருதுகிறேன், இது போன்ற படுகொலைகளை விசாரிக்க சந்துரு பாப்பா மோகன் போன்ற நேர்மையான வழக்கறிஞர்கள் மூலம் விசாரிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து இக்கட்டுரையில் மூலம் இப்பிரச்சினை புரிந்து கொள்ள முடிகிறது.

    • தோழர் குறிப்பிடு அதே போல் மட்டும் இதனை சுருக்கிக் கொள்ள முடியாது; ஒரு அம்சத்தில் பெண்ணடிமைத்தனம் நிலவும்
      இந்நாட்டில் அவர்களது உணர்வு மட்டம் எந்த அளவில் இருக்கும் என்பதும் புரியக்கூடியது;
      கவின் மறைவுற்று நான்கு நாட்கள் கடந்து ஐந்தாவது நாளில் சுபாஷினி வாக்குமூலம் அளிப்பது போல வீடியோ வெளியிடுகிறார்;
      போலீசுக்கு பயந்தோ அல்லது பெற்றோரின் அச்சுறுத்தலுக்குப் பயந்தோ கவினை காதலிக்கவில்லை என்று சொல்லி இருக்கலாம் என்பதையும் கூட ஏற்போம்.
      இந்தக் காதல் விவகாரம் தனது பெற்றோருக்கு அறவே தெரியாது என்று அழுத்தம் திருத்தமாக வாதிடுகிறார் அல்லவா? அதுவும் அச்சுறுத்தலுக்கு பயந்து தானா? இவரும் ஒரு சாதாரணமாக எட்டாவது பத்தாவது பன்னிரண்டாவது படித்த பெண்மணி அல்ல. தொழில்நுட்பம் சார்ந்த சித்த மருத்துவ டாக்டர். அப்படி மானசீகமாக காதலித்தவர் தனது காதலன் வெட்டுண்டு செத்து மடிந்து கிடக்கின்ற பொழுது, ஒரு சொட்டு கண்ணீர் கூடவா வர முடியாமல் போய்விடும்? லட்சக்கணக்கில் சம்பாதித்த கவினின் குடும்பம் என்ன பாடுபடும் என்ற உணர்வு கூடவா இல்லாமல் போய்விடும்?
      அவர்கள் குடும்பத்தைப் பற்றி ஒரு வார்த்தையாவது இவரது வாக்குமூலத்தில் வெளியிட்டு இருக்கிறாரா? நீங்கள் சொல்லுவது போல எதற்கோ அஞ்சி அவர் மாறுபட்ட கருத்தை பத்திரிகைகளில் வரும்படி ஆகிவிட்டது என்றால் அதே நிலைப்பாட்டில் கடைசி வவரையிலும் இருக்க வேண்டியதுதானே? பின்பு ஏன் கவின் செத்து மடிந்து ஐந்தாவது நாளில்
      நான் கவிதை காதலித்ததுTrue தான் என ஒப்புக்கொண்டு அறிக்கை வெளியிட வேண்டும். அங்குதான் சூட்சமம் அடங்கி இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கவின் குடும்பத்தார் வெளியிட்ட கவினும் சுபாஷினியும் இணைந்திருந்த எண்ணற்ற புகைப்படங்கள் வெளியான பின்னரே இந்த வாக்குமூலத்தை வீடியோ மூலமாக வெளிப்படுத்த முன் வந்தார்…அல்லது நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார். உங்க காதலித்த சில பெண்கள் கொடுத்த காதலனுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டு அதே பாணியில் சுபாஷினியையும் இணைத்துக் கொண்டு பார்க்க வேண்டும் என்று பார்ப்பது சரியல்ல. நீங்கள் குறிப்பிடுகின்ற ஒரு உதாரணத்தை வைத்து ஒருவர் இயற்றிய
      நீதிமன்ற கவிதையை நேற்று ஊடகவியலாளர் மனுஷ்யபுத்திரன் உருக்கமாக படித்துக் காண்பித்தார். அதிலிருந்து நீங்கள் என்ன முடிவுக்கு வரலாம் என்று யோசனை செய்யுங்கள். நான் வேண்டுமென்றால் உங்களுக்கு அதை அனுப்பி வைக்கிறேன். ஒரு கட்டுரையின் மீது தாராளமாக தோழர்கள் பல்வேறு விதமாக ஆழமாக அலசி ஆராய்ந்து விமர்சிப்பதில் எனக்கு இம்மியளவும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் இப்படிப்பட்ட தாங்கிக் கொள்ள முடியாத கொடுஞசெயல்கள் தொடர்ந்து நடக்கின்ற
      பொழுது சகலவித கண்ணோட்டத்திலும் யார் யார் எந்தெந்த வகையில் குற்றம் இழைத்து இருக்கிறார்கள் என்பதனை அம்பலப்படுத்தியே ஆக வேண்டும் என்பதுதான் எனது கருத்து தோழர்.

    • “கவின ஆனவக்கொலையில் சுபாஷினி காதலிக்கவே இல்லை என்று மாறிமாறி பேசியதை பெரிய விசயமாக பார்க்க வேண்டியதில்லை” என்று எளிதாக கடந்துவிடமுடியாது ,ஏனெனில் சுபாஷினி அழைத்ததால்தான் கவின் அங்கு சென்றான் தன் தம்பியால் கவின் கொல்லப்பட்டான் இல்லையேல் கவின் உயிர் போயிருக்க வாய்ப்பே இல்லை தன்னால் யாரோ உயிர் போனால்கூட சாதாரணமனிதனுக்கும் தூக்கம் வராது ,இருவரும் காதலித்து ஒன்றாக ஊர்சுத்தி பல கேளிக்கைகளில் ஈடுபட்டு ஈருடல் ஓருயிராக வாழ்ந்த காதலர்களில் தன் காதலன் கொல்லப்பட்டபோது சிறிதுகூட கலங்காத கல் நெஞ்சம் படைத்த சுபாஸினி மாற்றி மாற்றி பேசுவது சமூக குடும்ப காவல்துறை நெருக்கடியாக இருந்தாலும் இப்படி முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் மாற்றி மாற்றி பேசுவது தன் தம்பி செய்த ஆனவக்கொலையைக்காட்டிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுஞ்செயல் தோழர்!

  2. தோழர் குறிப்பிடு அதே போல் மட்டும் இதனை சுருக்கிக் கொள்ள முடியாது; ஒரு அம்சத்தில் பெண்ணடிமைத்தனம் நிலவும்
    இந்நாட்டில் அவர்களது உணர்வு மட்டம் எந்த அளவில் இருக்கும் என்பதும் புரியக்கூடியது;
    கவின் மறைவுற்று நான்கு நாட்கள் கடந்து ஐந்தாவது நாளில் சுபாஷினி வாக்குமூலம் அளிப்பது போல வீடியோ வெளியிடுகிறார்;
    போலீசுக்கு பயந்தோ அல்லது பெற்றோரின் அச்சுறுத்தலுக்குப் பயந்தோ கவினை காதலிக்கவில்லை என்று சொல்லி இருக்கலாம் என்பதையும் கூட ஏற்போம்.
    இந்தக் காதல் விவகாரம் தனது பெற்றோருக்கு அறவே தெரியாது என்று அழுத்தம் திருத்தமாக வாதிடுகிறார் அல்லவா? அதுவும் அச்சுறுத்தலுக்கு பயந்து தானா? இவரும் ஒரு சாதாரணமாக எட்டாவது பத்தாவது பன்னிரண்டாவது படித்த பெண்மணி அல்ல. தொழில்நுட்பம் சார்ந்த சித்த மருத்துவ டாக்டர். அப்படி மானசீகமாக காதலித்தவர் தனது காதலன் வெட்டுண்டு செத்து மடிந்து கிடக்கின்ற பொழுது, ஒரு சொட்டு கண்ணீர் கூடவா வர முடியாமல் போய்விடும்? லட்சக்கணக்கில் சம்பாதித்த கவினின் குடும்பம் என்ன பாடுபடும் என்ற உணர்வு கூடவா இல்லாமல் போய்விடும்?
    அவர்கள் குடும்பத்தைப் பற்றி ஒரு வார்த்தையாவது இவரது வாக்குமூலத்தில் வெளியிட்டு இருக்கிறாரா? நீங்கள் சொல்லுவது போல எதற்கோ அஞ்சி அவர் மாறுபட்ட கருத்தை பத்திரிகைகளில் வரும்படி ஆகிவிட்டது என்றால் அதே நிலைப்பாட்டில் கடைசி வவரையிலும் இருக்க வேண்டியதுதானே? பின்பு ஏன் கவின் செத்து மடிந்து ஐந்தாவது நாளில்
    நான் கவிதை காதலித்ததுTrue தான் என ஒப்புக்கொண்டு அறிக்கை வெளியிட வேண்டும். அங்குதான் சூட்சமம் அடங்கி இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கவின் குடும்பத்தார் வெளியிட்ட கவினும் சுபாஷினியும் இணைந்திருந்த எண்ணற்ற புகைப்படங்கள் வெளியான பின்னரே இந்த வாக்குமூலத்தை வீடியோ மூலமாக வெளிப்படுத்த முன் வந்தார்…அல்லது நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார். உங்க காதலித்த சில பெண்கள் கொடுத்த காதலனுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டு அதே பாணியில் சுபாஷினியையும் இணைத்துக் கொண்டு பார்க்க வேண்டும் என்று பார்ப்பது சரியல்ல. நீங்கள் குறிப்பிடுகின்ற ஒரு உதாரணத்தை வைத்து ஒருவர் இயற்றிய
    நீதிமன்ற கவிதையை நேற்று ஊடகவியலாளர் மனுஷ்யபுத்திரன் உருக்கமாக படித்துக் காண்பித்தார். அதிலிருந்து நீங்கள் என்ன முடிவுக்கு வரலாம் என்று யோசனை செய்யுங்கள். நான் வேண்டுமென்றால் உங்களுக்கு அதை அனுப்பி வைக்கிறேன். ஒரு கட்டுரையின் மீது தாராளமாக தோழர்கள் பல்வேறு விதமாக ஆழமாக அலசி ஆராய்ந்து விமர்சிப்பதில் எனக்கு இம்மியளவும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் இப்படிப்பட்ட தாங்கிக் கொள்ள முடியாத கொடுஞசெயல்கள் தொடர்ந்து நடக்கின்ற
    பொழுது சகலவித கண்ணோட்டத்திலும் யார் யார் எந்தெந்த வகையில் குற்றம் இழைத்து இருக்கிறார்கள் என்பதனை அம்பலப்படுத்தியே ஆக வேண்டும் என்பதுதான் எனது கருத்து தோழர்.

    • தோழர் கையாளத் தெரியாமல் இரு முறை பதிவு ஏற்பட்டு விட்டது. மேலும் தோழர் பிரகாஷ் அவர்களுக்கான எனது பதிலில் எழுத்து பிழைகள் இருக்கும். நான் சிரமப்பட்டு குரல் வழியாகவே பதிவிடுவதால் தொடர்ச்சியாக இப்படிப்பட்ட தவறுகளை என்னால் இழக்காமல் இருக்க முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். திருப்தி படித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • வணக்கம் தோழர், தமிழ்நாட்டில் சாதி ஆதிக்கம் மிகுந்த மாவட்டமான திருநெல்வேலி யில் நடந்த இந்த கவின் ஆணவ படுகொலை குறித்து சுபாஷினி முதலில் தனது தாய் தந்தையரை காப்பாற்ற கவிதை காதலிக்கவில்லை என்று சொல்லிவிட்டு அவர்களுடைய காதலித்த படங்கள் வெளியானவுடன் காதலித்தது உண்மைதான் என்று தெரிவித்தார் அதற்க்கு என்னுடைய பதிவில் பெண்கள் பெரும்பாலும் தாய் தந்தையர் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியவுடன் காதலிக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள் என்று தெரிவித்திருந்த தோழர் தோழர் அதற்கு அப்படியே இந்த விஷயத்தை பார்க்க கூடாது என்று தெரிவித்து இருந்தார் அதற்கு என்னுடைய கருத்து தோழர் இது வெளியில் திரிந்த ஆணவ படுகொலை வெளியில் தெரியாமல் ஆணவ படுகொலை இல்லாமல் கூட பல்வேறு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தாய் தந்தையர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி பிரித்து வைத்திருக்கிறார்கள் பெரும்பாலும் கொங்குபெல்ட் பகுதிகளில் இதை அதிகமாக பார்க்கலாம் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்களை பிரித்து மூளை சலவை செய்யக்கூடிய ஒரு இடம் காட்டுக்கு நடுவே கருத்தை அங்கிருந்து தப்பித்து வந்த பெண் தெரிவித்திருந்தார், படித்த பெண்களாக இருப்பதால் தைரியமாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறா நான் பார்க்கிறேன், ஏனென்றால் அவருடைய தாய் தந்தையரும் படித்தவர்கள் தான் ஆயினும் அவர்களுக்கு சாதி மனப்பான்மை இருந்தது, பெரும்பாலான ஆதிக்கசாதி குடும்பங்களில் பெண்கள் படித்திருந்தாலும் அவருடைய மனம் இன்னும் அடிமைப்பட்டு தான் இருக்கிறது அவர் வாழ்கின்ற குடும்பம் உறவுகள் சமூக சூழல் அவர்களை அந்த நிலைக்கு தள்ளி இருக்கிறது, சுபாஷினி செய்தது சரி என்று நான் சொல்லவில்லை ஆனால் பெரும்பாலான ஆதிக்க சாதி ஊர்களில் மாவட்டங்களில் பெற்றோரை எதிர்த்து காதலிக்க தைரியம் இருக்கும் பெண்களுக்கு கல்யாணம் செய்வதில் தைரியம் இல்லை, கல்யாணம் செய்யும் பெண்களுக்கு காதலித்தவரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி பிரித்து விடுவார்கள் அல்லது தாய் தந்தையர் தற்கொலை செய்து கொள்வேன் என்று பிரித்து பாருங்கள் சொந்த காரர்கள் மத்தியில் எப்படி நம்ம வாழ்வது நம்மை அவமானப்படுத்துவார்கள் நம்மை ஒதுக்கி விடுவார்கள் என்று குடும்ப சூழ்நிலை கட்டி பிடித்து விடுவார்கள் இதையெல்லாம் தாண்டி விதிவிலக்காக ஒரு சில பேர் நிற்பார்கள் அது தவிர்க்க இயலாதது இந்த கண்ணோட்டத்தில் தான் நான் இந்த சுபாஷினி விஷயத்தை பார்க்கிறேன். இந்த சமூகத்தில் உள்ள ஆதிக்க சாதி வெறி மனநிலையை உடைக்காமல் சுகாசினி போன்ற பெண்களை மட்டும் மற்றும் சாட்டுவது தவறு என்று நான் பார்க்கிறேன்.

      • தோழர் இதில் ஆண் பெண் என்று பேதம் பார்த்து பெண்கள் தவறுசெய்தால் விட்டுவிடலாம் என்பதுபோல் உங்கள் பதிவு உள்ளது இது சாதாரண குற்றமல்ல தன்னை காதலித்த வரு உன்னதமான உயிரை கொலைணெய்து இரண்டு குடும்பங்களும் சுத்தமாக அழிந்தநிலை எனவே முழு பொருப்பும் அந்த பண்டைய சாறும் ஒரு விரக்தி ஒரு வேதனை ஒரு கண்ணீர்துளி ஏதும் இல்லை யார் நெறுக்கடி கொடுத்தாலும் எவளுவு நிர்பந்தம் வந்தாலும் அந்த பெண் உறுதியுடன் நின்றிருக்கவேண்டும் அப்பணி இல்லாமல் வாக்குமூலம் தருவது தனது சகோதரனைவுட தனது பெற்றோரைவிட சாதி ஆதிக்க கொலைக்கு உடந்தையாக இருப்பதாகத்தான் அந்த பெண்ணின் நிலைபாடு இருக்கிறது தோழர் எழில்மாறன் மிகச்சரியாகத்தான் கெறுப்புடுகுறார்.

  3. கட்டுரையாளரே முன்னுதாரனமாக ஒருவரை தான்(கௌசல்யா) குறிப்பிடமுடிகிறது. கௌசல்யா பக்கம் பகுத்தறிவாளர்களும், கம்யூனிஸாடுகளும் நிற்கவில்லையென்றால் அவராலும் உறுதியாக நின்றிருக்க முடியாது. பெண் இந்த ஆணாதிக்க சமூகத்தில் இந்த அளவுதான் போராட முடியும். இதுதான் சமூக எதார்த்தம்.

    பிரகாஷ் குறிப்பிட்டது போல் படித்தவர்கள் எல்லாம் உறுதியாக மனதைரியத்துடன் போராடுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறு. ஏனென்றால் கேடான பார்ப்பனிய பண்பாட்டுக்குள் பெண்கள் அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    இந்த நேரத்தில் விவாதம் அந்த பெண்ணை நோக்கி பாய்வதும் அந்த அடிப்படையில் தான் என்று நான் கருதுகிறேன். சமூகத்தை பற்றி நன்கு அறிந்த முற்போக்காளர்களுக்கு பெண் சுயமாக செயல்படுவதற்கு சுதந்திரம் இல்லை என்று தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. வருத்தமாகவும் உள்ளது.

    • கொலைக்கு காரணமே சுபாஸினிதான் தன் தம்பியினுடைய வாழ்க்கையும் போச்சு காதலன் கவினுடைய உயிரும் போச்சு முன்னுக்குபுன் முரனாய் பேசி குற்றவாளிகளை தப்புவிக்கும் சுபாஸினியை ஒதுக்கிவிட்டு பார்ப்பது சரியான பார்வை இல்லையே!

  4. நான் வெளியில் இருக்கிறேன். உங்கள் இருவருக்குமான எனது பதில் பதிவை இன்று இரவு பகிர்ந்திட முயற்சிக்கிறேன் தோழர்களே.

  5. மிகவும் சிறப்பு தோழர் சரியான விடயங்களகச் சொல்லி அரசுக்கும் சிறந்த வழிகாட்டியாக சில ஙிடயங்களை சொல்லி இருக்கிறீர்கள் இவளவு விஞ்ஞான அறிவோங்கிய காலத்திலும் இப்படி ஒரு ஆனவக்கொலை நடப்பதை ஏற்க மனம் சகிக்கவில்லை ஏழெட்டு வருடம் ஒன்றாகப்பழகி காதலித்த காதலன் கண்முன்னே கழுத்தறுத்து கொன்றபின்னும் இதயம் இளகவில்லை பண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லை எந்த நெறுக்கடி வந்தாலும் அப்பா அம்மாவை தம்பியை காப்பாற்றும் முயற்சியிலேயே அந்த பெண் உள்ளது தெரிகிறது கவின் உயிர் சம்பாத்தியம் எல்லாம் போய் அவன் குடும்பமும் நாசமாய் போனதற்கு தான் காரணமாகிவிட்டோமை என்ற காற்று உணர்வு கொஞ்சமும் இல்லையே அந்த பெண்வவிடயமாக சொன்னது அத்தனையும் உண்மை வாழ்த்துகள் தோழர்!

  6. தோழர் பிரகாஷ் அவர்களின் இரண்டு விமர்சனப் பதிவுகளுமே சாராம்சமாக சற்றேறக்குறைய ஒன்று போலவே தென்படுகிறது. பிரகாஷ் கூறுவது ஏதோ தென் மாவட்டத்தில் மட்டும் தான் இவ்வளவு ‘வீரியமிக்க’ ஆதிக்க சாதி வெறி இருப்பது போலவும், (மற்ற மாவட்டங்களில் குறைவாக இருப்பதாக புரிந்து கொள்வது போலவும்)
    அப்படிப்பட்ட சூழலில் அந்தப் பெண் சுபாஷினி போலீசினுடைய மிரட்டல்களுக்குப் பயந்தோ,
    பெற்றோரின் மிரட்டலுக்குப் பயந்தோ, அந்தப் பெண் எவ்வளவுதான் படித்திருந்தாலும் இப்படிப்பட்ட சறுக்கலுக்கு ஆளாகுவதை – ஒரு பெண் என்ற தன்மையில், தவிர்க்க
    இயலாது; முடியாது. எனவே எந்த வகையிலும் சுபாஷினியை விமர்சித்து இருக்கக் கூடாது; அதனைக் கடந்து சென்று
    இருக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தோழர் பிரகாஷின் விமர்சனத்தின் சாரமாக பார்க்கின்றேன். தோழர் சிவகாமு அவர்களும், பிரகாஷின் இந்தக் கருத்தை ஆமோதித்ததோடு கட்டுரையாளருக்கே ஒரே ஒரு கௌசல்யாவைத் தான் உதாரணம் காண்பிக்க முடிகிறது என்பதாக ஏளனத் தன்மையில் எடுத்துரைத்துள்ளார்.

    சரி. என்ன செய்வது? முற்கால பைபிளின்
    பழைய ஏற்பாட்டில் உலகம் தட்டை என்றுதான் எழுதப்பட்டிருந்தது. அது தட்டை அல்ல; உருண்டை என்று ஒரே ஒரு கலிலியோ தான் கண்டுபிடித்தான். அதற்காக மத வெறியர்கள் அந்த விஞ்ஞானியை என்ன பாடுபடுத்தினார்கள் என்பது நமக்கு தெரியாதது அல்ல. அதேபோல சூரியன் பூமியை சுற்றுவது இல்லை; பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று ஒரே ஒரு நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் தான் கண்டுபிடித்தான்; அவன் கெட்டிக்காரன்; மத வெறியர்களால் கலிலியோவுக்கு ஏற்பட்ட கதியை உணர்ந்து, தான் கண்டுபிடித்த உண்மையை எழுத்து வடிவில் ஆவணமாகத் தயாரித்து வைத்துவிட்டு மறைந்து விட்டான்.
    அவனுடைய சீடன் ஜியார்டனோ புருனோ என்ற ஒரே ஒரு நபர் தான் பிற்காலத்தில் அந்தப் பேருண்மையை உணர்ந்து
    வெளிக்கொணர்ந்து விட்டான். மதவெறியர்கள் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை மறுதலித்து அவனைத் தீயிட்டுப் பொசுக்கினார்கள். ஆனால் பிற்காலத்தில் பைபிளின் புதிய ஏற்பாட்டில் இந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகளை எல்லாம் உண்மை என வெட்கமின்றி ஏற்றுக்கொண்டு விட்டார்கள் மதவாதிகள். நடந்து போன கொடும துயரங்களுக்காக அவர்கள் மன்னிப்புக் கேட்கக் கூட முன்வரவில்லை. எனவே ஒரு தனி நபருடைய செய்கை எப்படிப்பட்டது; ஒட்டுமொத்த சமூகம் எப்படிப்பட்ட நிலையில் அதனைப் பார்க்கிறது என்று தோழர் சிவகாமு பார்ப்பதே தவறானது. அப்படி கருதுவோமேயானால் பெரும்பான்மைக்கு கட்டுப்பட்டு கலிலியோ, நிக்கோலஸ் கோபர் நிக்கஸ், ஜியார்டனோ புருனோ போன்றவர்களும் பெரும்பான்மை சமூக உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டுப் போயிருக்கலாம். வதைபட்டிருக்க வேண்டியதில்லை; உயிரை இழந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் இச்சம்பவங்கள் எல்லாம் எத்தனை நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்பதனையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்பது மட்டும் அல்ல; இதுபோல எத்தனையோ உதாரணங்களை எடுத்துப் பகரலாம். இந்த விஞ்ஞான ரீதியான உதாரணங்களை எல்லாம் இதற்கு பொருத்தக் கூடாது என்று நீங்கள் கருதி விடக்கூடாது. அப்படி கருதுவீர்களேயானால்
    அது தவறு.

    நான் இதே கவின் சுபாஷினி பிரச்சனைக்கு ‘நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் படுகொலை! என்று தான்டா அடங்கும்
    உங்கள் ஆதிக்க சாதி வெறி? மிருகங்களா!”
    என்ற ஒரு கட்டுரையை இதே தளத்தில் ஜூலை 30-ல் இதே நமது தளத்தில் படைத்திருந்தேன். கீழ வெண்மணிக் கொலைகளுக்காக நான் 2014 டிசம்பர் 25-ல்
    எழுதிய கட்டுரை கடந்த 2024 டிசம்பர் 25 இல் கூட இதே நமது தளத்தில் மீள் பதிவு செய்யப்பட்டது. அதற்கு முன்பும் கூட ஆதிக்க சாதி வெறி குறித்த எண்ணற்ற பல்வேறு கட்டுரைகளை படைத்திருக்கிறேன்.

    சரி. இப்போது ஆணவப் படுகொலையான கவினின் காதலி சுபாஷினிப் பிரச்சனைக்கு
    வரலாம். எனது ஒட்டுமொத்த கட்டுரையில் என்னமோ சுபாஷினியை மட்டுமே குறி வைத்து தாக்கி அம்பலப்படுத்தும் இழி செயலைச் செய்து விட்டது போன்ற கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்.
    ஒட்டுமொத்த கண்ணோட்டத்தில் கட்டுரையில் முழுமை எதனை உணர்த்த முற்பட்டிக்கிறது; என்னால் எவை எவை ஆழமாக விரிவடைந்த தன்மையில் விளக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லை. பரிசீலிக்கவும் முன்வரவில்லை; அவை அனைத்தையும் கடந்து சென்று விட்டீர்கள்.

    இதே பிரச்சனைக்காக இதற்கு முன் ஒரு நீண்ட கட்டுரையை வேறொரு கன்னடத்தில் படைத்திருக்கிறேன். கீழவெண்மணியில் 1968-ல் அரைப்படி நெல் கூலி உயர்த்திக்
    கேட்டதற்காக 44 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண் பெண் குழந்தைகள் என அனைவரையும் ஆதிக்க சாதி வெறியர்களும் நிலச் சுவான்ந்தார்களும் கூட்டு சேர்ந்து குடிசையில் பூட்டி வைத்து கொளுத்திய வரலாறு எல்லாம் நம் நாட்டில் தான் நடந்தேறியது. கோபாலகிருஷ்ணன் நாயுடு தலைமையிலான குற்றவாளிகள் அதிகமான நிலபுலம், கார், பங்களா போன்றவற்றை வைத்திருப்பதால் இவ்வளவு மிகப்பெரிய பணக்கார அந்தஸ்தில் இருப்பவர்கள் இப்படிப்பட்ட கொடுஞ்செயல்களை செய்திருப்பார்களா என்று இந்த ‘மாநீதிமன்றம்’ சந்தேகிக்கிறது;
    எனவே சந்தேகத்தின் பலனை எதிரிகளுக்கு சாதகமாக்கி (குறிப்பாக கோபால கிருஷ்ணன் நாயுடுவுக்கு சாதகமாக்கி) விடுதலை செய்கிறோம் என்று உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

    தேவகோட்டை அருகில் உள்ள உஞ்சனை கிராமத்தில் அனைத்து மக்களுக்குமான பொதுவான புறம்போக்கு ஏரிக்கரையில் அமையப்பெற்று இருந்த அய்யனார் கோவில் குதிரை எடுப்பு விழா 1978-களில் நிகழ்ந்தபோது ஆதிக்க சாதி வெறியர்கள் – கள்ளர்கள் தாழ்த்தப்பட்ட பள்ளர்கள் குடியிருப்பு வீடுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி, ஐந்து தலித் மக்களை கொலை செய்து முடித்தார்கள். அவ்
    வழக்கிலும் கூட குற்றவாளிகள் 23 பேருமே குற்றம் ருசுப் படுத்துவதற்கான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி (அ) நீதிமன்றம் விடுதலை செய்தது. வன்னியர் சாதித் தலைவன் ராமதாஸ் தர்மபுரி மாவட்டத்தில் தனது சதி பெண்ணை தலித் இளைஞன் காதலித்து திருமணம் செய்து கொண்டான் என்ற ஒரே ‘குற்றச் செயலுக்காக’ குடியிருப்புகளை கொளுத்தியதையும் ஆணவப் படுகொலைகளை செய்ததையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். இன்னும் வெட்கமில்லாமல் ‘தலித்துப்
    பயலுக ஜீன்ஸ் பேண்ட்களை மாட்டிக் கொண்டு, கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு, விரல்களில் மோதிரம் மாட்டிக்கொண்டு, தலைமுடிகளையெல்லாம் ஒரு மாதிரியாக ஸ்டைல் ஆக வெட்டிக்கொண்டு ஆடம்பரமாக பாவனை செய்து எம் சமுதாய இளம் பெண்களை சுண்டி இழுக்கிறார்கள்’ என்று அப்பனும் மகனும் ஆக அதாவது ராமதாஸ், அன்புமணி ராமதாஸும் தம் சாதிப் பெண்களையே இழிவுபடுத்தும் விதமாகப் பேசயதை எல்லாம் கூட நாம் கண்டோம்.

    ஆக, நெல்லையில் மட்டுமல்ல தமிழ்நாட்டின் எண்ணற்ற மாவட்டங்களில் ஆதிக்க சாதி வெறியர்களால் காதல் திருமணங்கள் நடைபெறவிடாமல் தடுப்பதும் மீறி நடந்தால் கொலை செய்வதும் தொடர்கதையாகவே நீடிக்கின்றன என்பதே உண்மை. ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டை விட பார்ப்பனிய ஆர்எஸ்எஸ் பாஜக ஆளுகின்ற வடமாநிலங்களில் இவ்வித கொடுமைகள் மிக மிக அதிகம் என்பதையும் நாம் அறிவோம்.

    இது பெரியார் பிறந்த மண்; திராவிட மாடல் அரசு – என்று பீற்றிக் கொள்ளும் தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட ஆணவப் படுகொலைகள் தொடர்வது சகிக்க முடியாதது. மேலும் பிரகாஷ் சுட்டிக்காட்டி உள்ளது போல் இப்பிரச்சனைக்காக கடுமையான சட்டங்களை உருவாக்குவதன் மூலம் இப்படிப்பட்ட ஆதிக்க சாதி ஆணவப் படுகொலைகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்தி விட முடியாது. அது ஒரு குறிப்பிட்ட அம்சம் மட்டுமே. இது தொடர்பாக நான் இந்த கட்டுரையில் மட்டுமல்ல; முந்தைய கட்டுரைகள் பலவற்றிலும் தீர்வையும், மக்களுக்கான தெளிவையும் கூட பகிர்ந்து உள்ளேன். சமூகத்தில் நலமும் இப்படிப்பட்ட காட்டுமிராண்டி செயல்களை கூட மார்க்சிய-
    லெனினிய புரட்சிகர கண்ணோட்டத்தில், இப்படிப்பட்ட நிலவுடைமை சமூகம் சார்ந்த கலாச்சார அவலங்கள் நீடிப்பதை தடுத்து நிறுத்தி முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம்.

    அண்மை காலங்களில் நடந்துட்ட ஆணவப் படுகொலையில் காதலியே காதலனுக்கு எதிராக நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியாக
    மாறி சாட்சியம் கூறியதால் வழக்கறிஞர் பா.ப. மோகன் போன்றோரின் முன்னெடுப்புகளால் ஆதிக்க சதிகாரி தலைவனுக்கே(யுவராஜ்) ஆயுள் தண்டனை வழங்கியது நீதிமன்றம். இவையெல்லாம் அரிதிலும் அரிதானது.

    அப்படிப்பட்ட பிறழ் சாட்சியாக மாறிய அண்மைக்கால உதாரணத்தை ஒட்டி கவிஞர் இசை சில வரிகளில் கவிதை ஒன்றை படைத்திருந்தார். அக்கவிதையை ஊடகவியலாளரும், எழுத்தாளருமான மனுஷிய புத்திரன், கவின்-சுபாசினிப் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும் தருணத்தில் ஆகஸ்ட் 1 அன்று வீடியோவில் பதிவிட்டார். சில விளக்கங்களை அவருக்கு உரிய நயமான பாங்கில் விளக்கிவிட்டு,
    கவிஞர் இசையின் கவிதையை அவரே படிக்கின்றார். இதோ அக்கவிதை:-

    கவிதைத் தலைப்பு:- “நீதியின் மன்றம்”

    அவள்

    முதல் முதலாக

    ஒரு கொலையை

    கண்ணெதிரே கண்டாள்!

    அலறித் துடித்தவன்

    அவள் காதலனாக இருந்தான்;

    மூவர்

    கை கால்களை ஆட்ட விடாமல் பிடித்துக் கொள்ள

    கொஞ்சம் கெட்டியான ஆப்பிளை

    அறுப்பது போல

    ஒருவன் குரல்வளையை

    நறுக்கினான்;

    அவள்

    அவர்கள் கொலையாளிகளே அல்ல என்றும்

    முதலில் அவன் தன் காதலனே அல்ல என்றும்

    நீதிமன்றத்தில் சாட்சி சொன்னபோது

    ‘பார்வையாளர்கள்’ வரிசையில் தான்

    அமர்ந்திருந்தது ‘காதல்’

    அது

    இதுபோல் எவ்வளவோ பார்த்துவிட்டது!”

    -கவிஞர் இசை.

    இந்த கவிதையின் உட்பொருள் ஒருபுறம் இருக்கட்டும்; மனுஷிய புத்திரன் இக்கவிதையைப் படித்த பாங்கு நம் அனைவருக்குமே கண்ணீரை வரவழைக்கும்.
    அதுதான் முக்கியம்.

    ஒரு பழங்காலத் திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் நாகேசும் இன்னொரு நடிகரும் ஒரு கடுமையான விவாதத்தில் பங்கேற்று இருப்பார்கள். திடீரென நாகேஷ் ஒரு பெரிய வெள்ளைச்சாலை எடுத்து பென்சிலால் ஒரு மிகச்சிறிய ‘டாட்’ (புள்ளி)
    வைத்துவிட்டு, தனது எதிரியிடம் இது என்னவென்று கேட்பார். உடனே அவன் அது ஒரு புள்ளி என்று சொல்வான். அதற்கு நாகேஷ் இப்படிக் கூறுவார்: ‘இவ்வளவு பெரிய வெள்ளைப் பேப்பரை உன்னிடம் காண்பிக்கின்றேன்; உன்னால் அதனை வெள்ளை பேப்பர் என்று சொல்ல முடியவில்லை; மாறாக கண்ணுக்கே தெரியாத சிறு புள்ளிதான் உனக்குத் தெரிகிறது’ என்று பதிலளிப்பார்.

    ஆக, கவின் ஆணவப் படுகொலையில்
    சுபாஷினியின் பங்களிப்பை அல்லது
    குறைபாட்டினை ‘புள்ளி’ அளவில் சுட்டிக் காண்பிப்பது என்பதேகூட உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பது மிகவும் வினோதமாக உள்ளது. அது மட்டுமல்ல; கட்டுரையின் முழு ஆழத்தையும் நீங்கள் புரிந்து கொண்டோராயில்லை என்றே கருதுகிறேன். மேலே இசையின் கவிதை வரிகளாகட்டும்; 2025 ஆகஸ்ட் 1-ல் வெளியான புதுமைப்பித்தனின் ‘என்னடி கிளியே!’ என்ற கவிதை வரிகளாட்டும் எதனை உணர்த்த அவைகள் படைக்கப்பட்டு இருக்கின்றன என்பதையும் நீங்கள் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிரச்சனையில் இவ்வளவு காலம் காதலித்து விட்டு, ‘போலீஸ் மிரட்டியது; பெற்றோர் அச்சுறுத்தினார்கள்; குறிப்பாக நெல்லை மாவட்ட ஆதிக்க சாதி திமிர் குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியாது; எனவே சுபாஷினியை ஒரு புள்ளி அளவுக்கு கூட விமர்சிக்கக் கூடாது…’ என்ற பாணியில் கடந்து செல்வோமேயானால், பிரச்சனையின்
    முழுமையையும் வெளிக்கொண்டு வந்தவர்களாக ஆக மாட்டோம். ஆக உங்கள் இருவரது விமர்சனம் என்பது குறுகியது, ஏற்கத்தகுந்தது அல்ல; பார்வையை விசாலப்படுத்துங்கள்; உண்மை புலப்படும்!
    இன்னும் நீங்கள் தெளிவு பெறவில்லை என்றால், தாராளமாக விவாதத்தைத் தொடருங்கள்! பரிசீலிக்கலாம்!
    நன்றி தோழர் பிரகாஷ்! நன்றி தோழர் சிவகாமு!

    • தோழர்களே, மேற்கண்ட எனது பின்னூட்டத்தில் வழக்கம்போல சில எழுத்துப் பிழைகள் இருந்தால் திருத்தி படித்துக் கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

      • தோழர் சிவகாமுவின் கருத்துப்பதிவில் ஓரிரு குறிப்பிட்ட அம்சங்களை சுட்டிக்காட்ட தவறி விட்டேன். கௌசல்யா கூட மார்க்சிய-பெரியாரிய-அம்பேத்காரிய இயக்கங்கள் பின் நிற்காவிட்டால் அவர் கூட அந்த அளவிற்கு நின்று இருக்க மாட்டார் என்று கௌசல்யாவை சிறுமைப்படுத்துகிறார். அது மிகவும் தவறான அம்சம். அவர் ஏற்கனவே உறுதியான முடிவு எடுத்து சங்கர் குடும்பத்தை சார்ந்து நிற்றார்; தனது பெற்றோரை உற்றார் உறவினர்களை வெறுத்து ஒதுக்குகினார்..
        அதன் பின்னரே நீங்கள் குறிப்பிடுகின்ற மேற்கண்ட முற்போக்கு இயக்கங்கள் அவருக்கு பின்பலமாக நின்றனர். எனவே ஒருவரின் அளப்பரிய சாதனையை கூட சிறுமைப்படுத்துவது மாபெரும் தவறு என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் உணரவில்லை என்பதாகக் கடுமையாக விமர்சிக்கிறேன்.

        மேலும் ஆணாதிக்க சமூகத்தில் இந்த அளவு தான் போராட முடியும் என்பதாக கூறுகிறார் சிவகாமு. இங்கே சுபாஷினி என்ன போராடி இருக்கிறார் என்று இந்த அளவிற்கு சிவகாமு விதந்தோதிக் கருத்துப் பகிர்கிறார் என்பதேப் புரியவில்லை. சுபாஷினி போராடவே இல்லையே! மாறாக தன் பெற்றோரை பாதுகாக்க தானே முன் நிற்கிறார்; போராடுகிறார். செத்து மண்ணாகிப் போன கவின் பற்றியோ கவினின் குடும்பத்தைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட வெளியிடவில்லையே!
        இதில் எங்கே நீங்கள் சுபாஷினியை போராளி போல உயர்த்திப் பிடிக்க முடியும்?

        ‘அந்த வகையில் சுபாஷினியை நோக்கி விவாதம் திரும்பியது இப்படிப்பட்ட முற்பாக்காளர்கள் எனக் காட்டிக்கொள்ளும் கட்டுரையாளர்களுக்கு எப்படி தெரியாமல் போனது’ என்ற பாணியில் ஏகடியம் செய்கிறார் சிவகாமு.

        ஒரு முழுமையான நீண்ட கட்டுரையில் சுபாஷினி பற்றிய பாத்திரம் என்ன என்பது ஒரு மிகச் சுருக்கமான பகுதி. ஒட்டுமொத்த கட்டுரையின் தாக்கத்தை அதனுடைய உட்பொருளை நீங்கள் முழுமையாக படிக்கவில்லை என்றே புரிய முடிகிறது. நிலவுவது
        ஆணாதிக்க சமூகம் தான். பெண்கள் உரிமை பறிக்கப்படுகிறது தான். ஆனால் மனதார காதலித்து விட்டோம் அல்லவா? எதற்காக பொய் சொல்கிறார் சுபாஷினி? அதனை நியாயப்படுத்தி சிவகாமு பேச வருகின்றாரா? நாங்கள் முற்போக்காளர்களாக இல்லை என்பதாக நீங்கள் கணித்தது போதும்.
        மகிழ்ச்சியே. ஆனால் இந்த ஆதிக்க சாதி கொடுமை குறித்து நீங்கள் ஒரு வார்த்தை கூட அதில் பதியவில்லையே ஏன்? பொதுவாக ஓரிரு வார்த்தையைப் பதிந்து விட்டு கடந்து செல்வது எப்படி நியாயம்? நீங்கள் உங்களை அறியாமலேயே ஆதிக்க சாதி வெறியை அங்கீகரிக்கின்றீர்கள் என்பது உங்களது எழுத்தின் நடையிலேயே உணர முடிகிறது என்பதையும சேர்த்துப் பரிசீலனை செய்யுங்கள். அப்பொழுதுதான் யார் முற்போக்காளர் என்பதை உறுதிப்படுத்த முடியும்..

  7. தோழர் சிவகாமுவின் கருத்துப்பதிவில் ஓரிரு குறிப்பிட்ட அம்சங்களை சுட்டிக்காட்ட தவறி விட்டேன். கௌசல்யா கூட மார்க்சிய-பெரியாரிய-அம்பேத்காரிய இயக்கங்கள் பின் நிற்காவிட்டால் அவர் கூட அந்த அளவிற்கு நின்று இருக்க மாட்டார் என்று கௌசல்யாவை சிறுமைப்படுத்துகிறார். அது மிகவும் தவறான அம்சம். அவர் ஏற்கனவே உறுதியான முடிவு எடுத்து சங்கர் குடும்பத்தை சார்ந்து நிற்றார்; தனது பெற்றோரை உற்றார் உறவினர்களை வெறுத்து ஒதுக்குகினார்..
    அதன் பின்னரே நீங்கள் குறிப்பிடுகின்ற மேற்கண்ட முற்போக்கு இயக்கங்கள் அவருக்கு பின்பலமாக நின்றனர். எனவே ஒருவரின் அளப்பரிய சாதனையை கூட சிறுமைப்படுத்துவது மாபெரும் தவறு என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் உணரவில்லை என்பதாகக் கடுமையாக விமர்சிக்கிறேன்.

    மேலும் ஆணாதிக்க சமூகத்தில் இந்த அளவு தான் போராட முடியும் என்பதாக கூறுகிறார் சிவகாமு. இங்கே சுபாஷினி என்ன போராடி இருக்கிறார் என்று இந்த அளவிற்கு சிவகாமு விதந்தோதிக் கருத்துப் பகிர்கிறார் என்பதேப் புரியவில்லை. சுபாஷினி போராடவே இல்லையே! மாறாக தன் பெற்றோரை பாதுகாக்க தானே முன் நிற்கிறார்; போராடுகிறார். செத்து மண்ணாகிப் போன கவின் பற்றியோ கவினின் குடும்பத்தைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட வெளியிடவில்லையே!
    இதில் எங்கே நீங்கள் சுபாஷினியை போராளி போல உயர்த்திப் பிடிக்க முடியும்?

    ‘அந்த வகையில் சுபாஷினியை நோக்கி விவாதம் திரும்பியது இப்படிப்பட்ட முற்பாக்காளர்கள் எனக் காட்டிக்கொள்ளும் கட்டுரையாளர்களுக்கு எப்படி தெரியாமல் போனது’ என்ற பாணியில் ஏகடியம் செய்கிறார் சிவகாமு.

    ஒரு முழுமையான நீண்ட கட்டுரையில் சுபாஷினி பற்றிய பாத்திரம் என்ன என்பது ஒரு மிகச் சுருக்கமான பகுதி. ஒட்டுமொத்த கட்டுரையின் தாக்கத்தை அதனுடைய உட்பொருளை நீங்கள் முழுமையாக படிக்கவில்லை என்றே புரிய முடிகிறது. நிலவுவது
    ஆணாதிக்க சமூகம் தான். பெண்கள் உரிமை பறிக்கப்படுகிறது தான். ஆனால் மனதார காதலித்து விட்டோம் அல்லவா? எதற்காக பொய் சொல்கிறார் சுபாஷினி? அதனை நியாயப்படுத்தி சிவகாமு பேச வருகின்றாரா? நாங்கள் முற்போக்காளர்களாக இல்லை என்பதாக நீங்கள் கணித்தது போதும்.
    மகிழ்ச்சியே. ஆனால் இந்த ஆதிக்க சாதி கொடுமை குறித்து நீங்கள் ஒரு வார்த்தை கூட அதில் பதியவில்லையே ஏன்? பொதுவாக ஓரிரு வார்த்தையைப் பதிந்து விட்டு கடந்து செல்வது எப்படி நியாயம்? நீங்கள் உங்களை அறியாமலேயே ஆதிக்க சாதி வெறியை அங்கீகரிக்கின்றீர்கள் என்பது உங்களது எழுத்தின் நடையிலேயே உணர முடிகிறது என்பதையும சேர்த்துப் பரிசீலனை செய்யுங்கள். அப்பொழுதுதான் யார் முற்போக்காளர் என்பதை உறுதிப்படுத்த முடியும்..

  8. தோழர் வணக்கம்!
    கவின் கொலைக்கு முக்கிய காரணம் சுபாஸினியேதான், தன்னால் ஒருசிறிய உயிரினமும் செத்தால்கூட மென்மையான இதயம் படைத்தவர்களுக்கு தூக்கம் வராது, அப்படி இருக்க இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து ஒன்றாக ஊர்சுத்தி பல கேளிக்கைகளில் ஈடுப்பட்ட காதலர்களில் தனக்கு துணையாக வாழ்வெல்லாம் இருப்பான் என்ற என்ற நம்பிக்கையுள்ள எந்தப்பெண்ணும் இதுபோன்ற மோசமான செயலைச்செய்யமாட்டாங்க,
    கவினும் தன் வருங்கால மனைவி அழைக்கிறாள் என்ற என்னத்தில் சென்றவனை 45தெண்டுகளாக வெட்டி சிதைத்து கொல்லப்பட்டபின்பும் கொஞ்சம்கூட எந்தவித சலனமும் இல்லாமல் பேட்டி கொடுப்பதைப்பார்த்தால்….மனசு பதர்குறது முதலில் அவனை எனக்கு தெரியாது என்றும், தனது காதல் விபரங்கள் வெளியே வந்தபின் உண்மையாக காதலித்தேன் எங்க அப்பா அம்மாவுக்கு தெரியாது அவர்களுக்கும் கொலைக்கும் சம்பந்நம் இல்லை என்று பேட்டி கொடுப்பதும் அவங்க அப்பா அம்மா தம்பி செய்த ஆனவக்கொலையைக்காட்டிலும் சுபாஸினி செய்தது நம்பிக்கைத்துரோக்க்கொலை தோழர்!

  9. தோழர் மிகவும் சிறப்பாக சொல்லிவிட்டீர்கள் உயிருக்கு உயிரியல் காதலித்த கவினை தன்பெற்றோரும் ஆதிக்கசாதிவெறியர்களும் அதிகாரத்தில் உள்ள காவலர்களுன் தூண்டுதலின் பேரில் தன்தம்பி 45இடங்களில் கூறுபோட்டு கொடிய முறையில் கொல்லப்பட்டும் கண்கலங்காத சுபாஸினி மாற்றி. மாற்றி பேசுவது ஆனவக்கொலையைக்காட்டிலும் கொடிய கொலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here