தாய்  நாவல் – விலை ரூ. 150 மட்டுமே!

சிய இலக்கியங்கள் உலகப்புகழ் பெற்றவை.  அவற்றில் மிக முக்கியமான ஒன்று மார்க்சிம் கார்க்கி  எழுதிய “தாய்”  நாவல். ரசியாவில் கொந்தளிப்பான காலம் 1905. ரசிய தொழிலாளர்களும் இளைஞர்களும் மார்க்சிய விவாதங்களை பரந்த அளவில் நடத்த தொடங்கிய காலம். அந்த காலகட்டத்தில் எழுதி, இன்றைக்கும் உலகத்தின் பல மொழிகளில்  மொழிமாற்றம் செய்யப்பட்டு வாசகர்களால் படிக்கப்படுவதுதான் இதன் சிறப்பு.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து… மூன்று நாட்களில் படித்து முடித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

இந்த நாவல்  இரண்டு பாகங்கள் உடையது. நாவலின் 578 பக்கங்களில், முதல் பாகம் 273 பக்கங்கள் கொண்டது. மீதி இரண்டாம் பகுதிக்கானவை.

தொழிலாளர்களும், விவசாயிகளும் இணைந்து சமுக மாற்றத்தில் செயலாற்றவேண்டும் என்ற அடிப்படையில்… தொழிலாளர்களின் துயர வாழ்க்கை, தொழிலாளர்களை அமைப்பாக்குவது குறித்து முதல் பாகத்திலும், விவசாயிகளின் வாழ்க்கை, விவசாயிகளை அமைப்பாக்குவது குறித்து இரண்டாம் பாகத்திலும் அருமையாக எழுதியிருப்பார் கார்க்கி.

“நாவல்” தொ.மு.சி. ரகுநாதன் மொழிபெயர்ப்பு சிறப்பானது.  நாவலின் உள்ளடக்கத்தில் ஈர்க்கப்பட்டு, கலைஞர் கருணாநிதி அவருடைய கைவண்ணத்தில் மொழிபெயர்ப்பு செய்தார்.

இப்பொழுது இந்த பதிவு குறிப்பாக எதற்கு என்றால்…. பொதுவாக இந்த நாவலை சில பதிப்பகங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். விலை ரூ. 350, ரூ. 400 என விற்கிறார்கள்.  நேற்று புத்தக திருவிழாவில் கடை எண் : 158ல்  தாய் நாவலை கெட்டி அட்டையில் தரமான வடிவத்தில் ரூ. 150க்கு பார்த்ததும் பெரிய ஆச்சர்யம்.  திருமணத்தில் புத்தகங்களை பரிசாக கொடுக்கும் வழக்கம் இருப்பதால், ஐந்து புத்தகங்கள் வாங்கிக்கொண்டேன்.

எப்படி உங்களால் இவ்வளவு குறைவாய் கொண்டு வரமுடிகிறது என கேட்டதற்கு…ஸ்டாலில் இருந்த தோழர் இதற்கான விளக்கம் தந்தார்.

”நாங்கள் பதிப்பகத்தை தொழில் முறையில் நடத்துகிறவர்கள் இல்லை.  ”சீர் வாசகர் வட்டம்” என்ற பெயரில் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.  புத்தகங்களை கூட்டாக படிக்கிறோம். விவாதிக்கிறோம்.  அதன் வழியாக சிறந்த புத்தகங்களை தேர்வு செய்கிறோம்.  சமூக அக்கறை கொண்டவர்களிடம் நன்கொடைகள் பெறுகிறோம்.  தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளில் இருந்தும் 119 நன்கொடையாளர்கள் இதற்காக உதவியிருக்கிறார்கள். இந்த புத்தகத்தின் இறுதி பக்கங்களில்  உதவியர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறோம்.

நாங்கள் இதை ஒரு இயக்கமாக கொண்டு செல்கிறோம். ஆகையால் இதன் பதிப்பில், விற்பனையில் ஈடுபடும் எங்கள் தோழர்கள் சம்பளம் என எதையும் பெற்றுக்கொள்வதில்லை. இப்படி குறைவான விலைக்கு கொண்டு வருவதால், சில ஆயிரம் புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே விரைவாக விற்பது நடக்கிறது. இப்படி ஒரே நேரத்தில் சில ஆயிரம் புத்தகங்கள் பதிப்பதால் புத்தகத்தின் அடக்க விலை நிறைய குறைகிறது.

கடந்த காலங்களில் தந்தை பெரியாரின் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்தை மலிவு பதிப்பாக கொண்டு வந்தோம்.  இதுவரை 4 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறோம். கடந்த ஆண்டு புதுமைப்பித்தன் சிறுகதைகளை தொகுப்பாக மலிவு பதிப்பாக கொண்டு வந்தோம்.  அதன் தொடர்ச்சியில் இந்த ஆண்டு மார்க்சிம் கார்க்கியின் ”தாய்” நாவலை கொண்டு வந்திருக்கிறோம்” என்றார்.

”நல்ல காரியத்தை செய்கிறீர்கள். தொடர்ந்து உற்சாகமாய் செயல்படுங்கள்” என வாழ்த்துகளை தெரிவித்து விடைபெற்றோம்.

ஆசிரியர் : மாக்சிம் கார்க்கி

தமிழில் : தொ.மு.சி. ரகுநாதன்

பக்கங்கள் : 578

விலை : ரூ.150

பின்குறிப்பு : சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்பவர்கள் கடை எண் 158-ல் வாங்குங்கள்.

போக வாய்ப்பில்லாதவர்கள் கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்.

9566331195, 9600652285, 9865252105.

000

சென்னை புத்தக கண்காட்சியில் எனது பங்களிப்பும் அனுபவமும்

சென்னை நந்தனத்தில் நடந்து வரும் 46வது புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று வெளியீட்டகம் அமைத்துள்ள புத்தக அங்காடியில் (ஸ்டால் எண் 660, 661)

நான் முதலில் வாசகர்களை அழைக்கும் வரவேற்பாளராக மட்டுமே செயல்பட்டேன். வாசகர்களின் தேடலுடன் என்னை ஒப்பிடும் பொழுது… கடலலையில் சுண்டு விரலை நனைத்தது போல தான், என் மனம் வேதனையும், வெட்கமும் கொண்டது.

அதனால்.. எல்லா நூல்களையும் தொட்டு சரி பார்த்து விட வேண்டும் என்று ஒவ்வொரு நூலையும் எடுத்து எந்த பதிப்பகம்? எழுதியது யார்? என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலை அடுக்குவது போல பார்த்து, பார்த்து சற்று நிம்மதி அடைந்தேன். முதல் நாள் முடிவில் திருப்தி இல்லாமல் வெளியேறினேன்.

வாசகர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவதாகவே வருகின்றனர். 80% சதவீதம் பேர் பொழுதுபோக்குகளுடன் கூடிய அறிவு தேடலில் இருக்கின்றனர். முதலில் பொழுதுபோக்கு பின்னர் அறிவுதேடல்..

அதில் சுய அறிவுக்காகவும் தனது பொருளாதார- பொழுதுபோக்கு அம்சங்கள் என்ற வகையில் நூல்களை தேடுகின்றனர்.

10% மக்கள் மட்டுமே அனைத்து மக்களின் நலனுக்கான- சமூக நலன் சார்ந்த நூல்களை தேர்வு செய்கின்றனர். 5% பேர் தற்போதைய தேவைகளில் இருந்து தேடுகின்றனர். மீதி 5%பேர் மனம் போன போக்கில் வாங்குகின்றனர்.

மொத்தத்தில் நடுத்தர மக்களும் முதலாளித்துவ அறிவு ஜீவிகளையும், மார்க்சியவாதிகளையும், பெரியாரிஸ்டுகளையும், அம்பேத்கர்வாதிகளையும் ஒன்றுடன் ஒன்று கலக்க செய்து சிறிய அளவிலான அறிவு சார் தேடலை உருவாக்கியுள்ளன.

அதில் களம் கண்ட அனைத்து முற்போக்கு   நூல்களின் பதிப்பகத்தார்க்கு நமது நன்றியினை உரித்தாக்கி கொள்வோம்.

கார்ப்பரேட் காவி பாசிசம் வேகம் எடுக்கிறது, நாம் தவழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் முறியடிக்க நினைத்தால் மட்டும் போதாது..

மார்க்சிய – லெனினிய, அம்பேத்கரிய, பெரியாரிய கொள்கைகளை கொண்டு மக்களை அமைப்பாக்கி நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே தேவையாக உள்ளது.

இளைஞர்களே ! மாணவ மாணவிகளே!

பொதுமக்களே* *அனைவரும் வருக!💐💐💐 சென்னை புத்தக கண்காட்சிக்கு

 ரா.ஆனந்தராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here