
நாள் முழுவதும் ‘வாள் வாள்’ என்று கத்திக் கொண்டே இருக்கும் ஒரு ‘பிராணி’ சீமான் என்பது தமிழ் மக்கள் அனைவரும் அறிந்ததே! (சில விவரம் அறியாத ‘தம்பி’களைத் தவிர!)
தமிழ்நாட்டின் தன்னிகரற்ற மாவீரனாகவும், ஈழத்துப் பிரபாகரனுடன் மிக ஒட்டி உறவாடி (அவருடன் ஆமைக்கறி உள்பட எண்ணற்ற கறிகளை தின்றதையும் சேர்த்து) போர்படைத் தளபதியாய் உருவெடுத்து விட்ட – பல்வேறு விடயங்களை தமிழ்நாட்டு மக்களின் செவிகள் கிழியும் வகையில் ஓங்கி உயர்ந்த குரலில் பொய்களை தொடர்ச்சியாக புளுகித் தள்ளிய வண்ணம் இருக்கிறார் என்பதனை நாம் நன்றாகவே அறிவோம்.
இந்த ஆளை தமிழ் மக்கள் பாஜக- வின் ‘B Team’ என்று வரையறுத்துக் கூறிய போதும், சங்கி என்று பிரகடனப்படுத்திய போதும், இந்த ‘தன்மான சிங்கத்திற்கு’ வந்த கோபத்திற்கு அளவே இல்லை. ஆம், நா.த.க. பொதுக் கூட்டம் ஒன்றில், நெற்றி எலும்பு கழுத்து எலும்பு புடைக்க ஓலமிட்டார்!
‘யாரைப் பார்த்தடா சங்கி எனச் சொன்னாய்; நீ சங்கியா? நான் சங்கியாடா? உங்களை செருப்பாலே அடிப்பேன் டா…!’ என ஆவேசமாக, தான் காலில் போட்டிருந்த செருப்பை உயர்த்திக் காண்பித்தார்! அவ்வளவு ‘அறிவு முதிர்ச்சி உடையவர்’ இவர்!?
சினிமா கதாநாயகன் த.வெ.க. தலைவன் விஜய் கட்சி துவங்கியதும் இதே சீமான் அந்த நடிகனுக்கு வலை வீசிப் பார்த்தார். அந்த நடிகனோ வேறு மாதிரி உளறி விட்டுப் போன பிறகு, ‘ச்சீ ச்சீ… இந்தப் பழம் புளிக்கும்…’ என்ற நரியின் கதை போல மாறிக்கொண்டு உளரத் தொடங்கினார் இந்த மெத்தப் படித்த மேதாவி சீமான்.
என்ன செய்வது? நாள்தோறும் நாதக கூடாரம் காலியாகிக் கொண்டிருக்கக் கூடிய சூழலை எவ்வளவு காலம் தான் தாங்கிக் கொள்ள முடியும் இந்தப் பிராணியால்? யோசித்து யோசித்துப் பார்த்துவிட்டு கடைசியாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி, இந்த பிராணியை அழைத்து ‘வேட்டையன்’ படத்திற்கு சீமான் பாராட்டு தெரிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்ள அழைத்ததாக ரீல் விட்டுக்கொண்டு உள்ளே போய் வேப்ப இலை அடித்திருக்கிறார் சீமான். தனது எடுபிடியும் காய்ந்துபோன மட்டையுமான சாட்டை ‘ரஜினி சார், அண்ணன் சீமான் மீது வைத்துள்ள பற்றுதல் காரணமாகவே அழைத்து அவரது உயர்ந்த மனோபாவத்தை அண்ணனிடம் காண்பித்து நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்’ என்ற பாணியில் இவர் ஒரு ரீல் விட்டார்.
பக்கா ஆர் எஸ் எஸ் காரனும் – மண்டைக்காடு மதக் கலவரத்திற்கு பக்கபலமாக நின்றவர்களில் ஒருவனுமான – ரவீந்திரன் துரைசாமியோ, ‘சீமான் என்னை அணுகி, அண்ணனைப் (ரஜினியை) பார்க்க வேண்டும்; நீங்கள் தான் அதற்கு முற்றும் முழுதாக முன்னெடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி எனக்கு உதவ வேண்டும் – என்று கோரினார்; அதன் அடிப்படையிலேயே ரஜினியிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி சீமானை ரஜினியை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தேன்; அந்த உரையாடலில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன்…’ என்ற பாணியில் உண்மையைப் போட்டு உடைத்து எறிந்து விட்டார். தற்போது சீமானின் ஏகோபித்த வழிகாட்டி ஆர்.எஸ்.எஸ். இரவீந்திரன் துரைச்சாமி என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது!
இந்த ‘மடைச் சாம்பிராணி’ இரவீந்திரன் துரைசாமி (நாடார்) தமது பேட்டியில், “நான் தற்போது தன்னம்பிக்கை பெற்றிருப்பதற்கு காரணம் ஆர் எஸ் எஸ் இயக்கம்; நான் உத்வேகம் பெற்றிருப்பது காரணம் ஆர் எஸ் எஸ் இயக்கம்; எதிலும் முன் நின்று ஃபைட் செய்யக் கற்றுக் கொடுத்திருப்பது ஆர் எஸ் எஸ் இயக்கம்; இவ்வறாக இந்து நாடார் சமுதாய மக்களை இன்றைக்கு உயர்த்தி விட்டதற்கு மூல காரணம் ஆர்.எஸ்.எஸ் இயக்கம்; அதற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் மண்டைக்காடு கலவர சம்பவத்திற்கு முன் வரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் – மருத்துவப் பட்டப் படிப்புகளில் நாகர்கோவில் போன்ற மாவட்டங்களில் கிறித்தவ நாடார்கள் தான் அதிக இடங்களைப் பெற்றிருந்தனர். அய்யா தானுலிங்க நாடார் இந்து மத தலைவராக தலைமையேற்று தீவிர நடவடிக்கைகளில் இறங்கிய பின்னர் தான் – மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் தான் தற்போது இந்து நாடார்கள், கிறிஸ்தவ நாடார்களை விட எம்பிபிஎஸ், பி டி எஸ் மருத்துவப் பணியிடங்களில் பல மடங்கு உயர்ந்து நிற்கின்றனர்.
இவற்றுக்கு எல்லாம் ஆர்எஸ்எஸ் தான் காரணம். நான் துணிந்து சொல்கிறேன். இவற்றை ஜார்ஜ் பொன்னையா பார்த்துக் கொள்ளலாம்; ஜார்ஜ் கெஸ்தர் பார்த்துக் கொள்ளலாம்; எம்பி தேவசகாயம் பார்த்துக் கொள்ளலாம்; காவியா? கருப்பா? என்ற நூல் வெளியிட்ட லஜபதி ராய் பார்த்துக் கொள்ளலாம்! உறுதியாகக் கூறுகிறேன் இந்த நாற்பது ஆண்டுகளில் அய்யா தானுலிங்க நாடார் இந்து மதத்திற்காகவும் ஆர்எஸ்எஸ் காகவும் உழைத்த உழைப்பு தான் இன்று மண்டைக்காடு கலவரத்திற்குப் பிறகு அப்பகுதியில் இந்து நாடார் பெருமக்கள் இவ்வளவு உயர்ந்திருப்பதற்கு காரணமாகி இருக்கிறது என்பதனை நான் உறுதியாகக் கூறுவேன்….” என்ற பாணியில் அறிவு கடுகள வேணும் இல்லாமல் உளரிக் கொட்டியிருக்கிறார்.
இந்தியா எங்கனும், இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் நாடார்கள் மட்டுமல்ல; பட்டியலின மக்கள் முதல் எண்ணற்ற சாதியினர் கிருத்துவ மதம், மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாறவே செய்தனர். காரணம் இந்து மதத்தில் இருந்த 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பார்ப்பனிய நால்வர்ண ‘கோட்பாடு’களும் மனுதர்ம – பகவத் கீதை இன்ன பிற புராண இதிகாச குப்பைகளின் படி உருவாக்கப்பட்ட சாதியப் படிநிலைகளும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருந்த கடுமையான அடக்குமுறைகளுமே காரணம் என்பதனை இந்தப் பரதேசி இரவீந்திரன் துரைசாமிக்குத் தெரிய வாய்ப்பில்லை.
படிக்க: சீமான் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது
தென் மாவட்டங்களில் குறிப்பாக நாடார் சமூகப் பெண்கள் திருவாதாங்கூர் சமஸ்தான கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தில் பார்ப்பனிய கொடுங்கோன்மை காரணமாக மேல் சீலை கூட போட அனுமதி மறுக்கப்பட்டு ‘முளைகள்’ வெளியே தெரியும் படியே நடமாடச் செய்ததும், மீறினால் ‘முளை வரி’ போடுவதும் நடைமுறையில் இருந்ததா? இல்லையா? இந்தக் கொடுங்கோன்மைக்கு அன்றைய பார்ப்பனியம் பரிணாம வளர்ச்சியில் இன்றைய ஆர்எஸ்எஸ் இயக்கம் காரணமாக விளங்கின என்பதனை இந்த இரவீந்திரன் துரைசாமி என்ற மர மண்டைக்கு புரியுமா? புரியாதா?
இந்த அவல நிலையைப் போக்க ‘தோல் சீலை போராட்டம்’ அறிவித்து கள மாடியவர் ஐயா வைகுண்டர், கேரளப் பெரியவர் நாராயண குரு என்பதெல்லாம் இந்த பிழைப்புவாதி இரவீந்திரன் துரைசாமிக்கு எப்படி தெரியும்?
அவர்களின் போராட்டத்திற்குப் பின்னர் தானே தென்பகுதியின் நாடார் சமூக மக்கள் தோல் சீலை போடும் உரிமையைப் பெற்றார்கள்! மறுக்க முடியுமா இந்த இரவீந்திரனால்? ஏன் சீமானால் கூட!
மருத்துவப் படிப்பு மட்டுமல்ல; ஒன்றிய அளவில் இருக்கும் உயர்ந்த பணியிடங்கள் – பெரும் பதவிகள் அனைத்திலும் வெள்ளைக்காரன் காலத்தில் 98 விழுக்காடுகள் பார்ப்பனர்கள் தானே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள். இன்று வரையிலும் கூட பார்ப்பனர்களுடைய எண்ணிக்கை 3 – 5 சதவீதத்திற்கு ள் இருக்கும்போது அதற்கு மாறாக அனைத்துப் பதவிகளிலும் 40, 50 சதவீதத்திலும், மிகச் சில முக்கிய பணி இடங்களில் 80, 90 சதவீதத்திலும் பார்ப்பனர்கள் தான் கோலோச்சுகிறார்கள் என்பது இந்த இரவீந்திரனுக்குத் தெரியுமா? தெரியாதா?
படிக்க: நாடார் வரலாறு கறுப்பா? காவியா?
ஆக, நாடார் சமூக மக்களிலேயே கிறிஸ்தவ நாடார், இந்து நாடார் என்று மட்டும் தனித்து பிரிப்பதும், அதில் இந்து நாடார் மட்டுமே உயர்வடைய வேண்டும் என்று சிந்திப்பதும் எவ்வளவு முட்டாள்தனமான கீழ்த்தரமான எண்ணவோட்டம் என்பதனை சிந்தித்துப் பார்ப்பதற்கு கூட இந்த இரவீந்திரனுக்குத் துளியளவு தகுதியும் இல்லாமற் போய் விட்டது.
இன்றைக்கு நாடார் சமூகம் மட்டுமல்ல; பிற்படுத்தப்பட்ட- மிகவும் பிற்படுத்தப்பட்ட- பட்டியலின – பழங்குடியின- சிறுபான்மை இன மக்கள் ஓரளவு (இரவீந்திரன் துரைச்சாமி குறிப்பிட்டுச் சொல்கின்ற) பணியிடங்களில் உயர் பதவிகளில் அடைந்திருக்க முடிகிறது என்றால் அதற்கு மூலவேர் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், நீதி கட்சி, தந்தை பெரியார், அவரைத் தொடர்ந்த உண்மையான திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கங்கள் – இவர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு கடும் உழைப்பு அடங்கி உள்ளது என்பதனை இந்த முண்டம் இரவீந்திரன் துரைசாமிக்கு தெரியவே தெரியாது. அதிலும் குறிப்பாக, தனது சாதி மக்கள் மட்டும் அதிலும் குறிப்பாக இந்து நாடார் சாதி மக்கள் மட்டும் உயர்வு அடைந்தால் போதும் என்ற மனப்போக்கு எவ்வளவு கடைந்தெடுத்த முட்டாள்தனம் வாய்ந்தது என்பதனை அவர் சிறிதும் வெட்கமில்லாமல் பிரடனப்படுத்துகிறார் என்றால் ஆர் எஸ் எஸ் இயக்கம் எவ்வளவு தூரத்திற்கு இப்படிப்பட்ட ஜென்மங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது தமிழ்நாட்டில் என்பதனை மக்கள் உணர வேண்டும். இது பெரும் ஆபத்து!
செபஸ்தியன் சைமன் சீமானும் நாடார்; இரவீந்திரன் துரைச்சாமியும் நாடார். அந்த மையப் புள்ளியில் இணைந்து தான், நடிகர் ரஜினியை சந்தித்து இருக்கிறார்கள்; ‘சங்கி மயமாகி’ இருக்கிறார்கள் – என்பதனை தமிழ்நாட்டு மக்கள் ஆழமாக உணரத் தலைப்பட வேண்டும்! நாம் சாதி ஒழிப்பை முன்னெடுக்க முனையும் பொழுது, அனைத்து மக்களுக்கு இடையிலான சாதி மத வேறுபாடுகளைக் கடந்த வர்க்க ஒற்றுமையை நிலைநாட்ட முற்படும்பொழுது இப்படிப்பட்ட இழிவான ஆர்எஸ்எஸ் காவி மயமாக்கலை வேரறுக்க வேண்டிய பாரிய கடமை நம் முன் இருக்கிறது என்பதனை அவசியம் தமிழ் மக்கள் உணர வேண்டும்.
படிக்க: எனது அனுபவத்தில் சங்கிகள் என்போர் | தினகரன் செல்லையா
காவிப் பாசிச இருள் இந்திய நாட்டை சூழ்ந்து வரும் வேளையில் தமிழ்நாடு இதுவரை அவர்களுக்கு பெருமளவில் கால் பதிக்க இடம் அளிக்காமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படிப்பட்ட ஈனர்களின் ‘காவி’ய செயற்பாடுகள் தமிழ்நாட்டில் அவர்கள் இன்னும் சற்று கூடுதலாகக் கால் பதிக்க களம் இறங்குவார்கள் என்பதனை கணக்கிற் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் – குறிப்பாக உழைக்கும் மக்கள் சாதி மத வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து போராடி முறியடிக்க வேண்டிய கடமை நம் முன் பெரும் அளவில் காத்துக் கிடக்கிறது என்பதை உணர்வோம்! களம் காணுவோம்!
இதே சீமான் இதற்கு முன்பு அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி அரசியலுக்கு வரப்போகின்ற சூழல் நிலவுவதாக உணர்ந்த காலக்கட்டத்தில் ‘ரஜினி மராட்டியன், கன்னடத்துக்காரன்… எவன் எவனோ வந்து தமிழ்நாட்டில் கட்சி தொடங்க தமிழ் தேசம் என்ன இளித்தவாய் தேசமா…’ என்று பொங்கி எழுந்து வீரவசனம் பேசியதையும் நாம் மறந்து விட முடியாது. இப்போது ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என உறுதி ஆனதும், ரஜினியின் மிச்ச சொச்ச ரசிகர்கள் பட்டாளத்தை இழுத்தாவது தமக்கு ஏற்பட்ட சரிவை சரிக் கட்ட முடியுமா என எத்தனிக்கிறார் இந்த சீமான்!
ஏற்கனவே, ரவீந்திரன் துரைசாமியும் ஒரு சங்கி; ரஜினியும் ஒரு சங்கி; தற்போது மூன்றாவது சங்கியான சீமான் அவர்களோடு ஒன்றிணைந்து இருப்பது நமக்கு வினோதமான செய்தி அல்ல! எதிர்பார்த்ததுதான்!
ஆனால், ரஜினியைச் சந்தித்துவிட்டு காரில் பயணப்பட்ட இந்த ‘மாவீரன்’ சீமானிடம் ஊடகவியலாளர்கள், ‘சங்கிகளோடு சேர்ந்து கொண்டு விட்டீர்களே, அப்படி என்றால் முன்பு நீங்கள் மறுத்துப் பேசிய கருத்துக்கு மாறாக தற்போது சங்கி என்பதனை ஏற்றுக் கொள்கின்றீர்களா?’… என்ற பாணியில் கேள்வி எழுப்பிய போது, அவருக்கு ஒன்றுமே தெரியாத பச்சைக் குழந்தை போல ‘சங்கி என்றால் என்ன? சங்கி என்றால் தோழன்! தோழன் என்றால் சங்கி! சங்கி என்பது இழிவானது ஒன்றுமில்லை யே…’ – என்ற பாணியில் இழிவாகப் பதில் கூறுகிறார் இந்த சீமான்!
ஆக, தமிழ் பெரும்பான்மை மக்கள் சீமானை பற்றி நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனினும் அவருடன் ஒட்டிக் கொண்டிருக்க கூடிய இன்னும் சில அப்பாவித் ‘தம்பிகள்’ ‘அண்ணனின்’ யோக்கியதாம்சத்தை உணர முற்படல் வேண்டும். உடனே அண்ணனுக்கு மாற்று நடிகர் விஜய் என்று நுழைந்து விடக்கூடாது; அது சாக்கடைக்குப் பயந்து மலத் தொட்டியில் விழுவதற்கு சமமாகிவிடும். எனவே நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார அரசியல் பிரச்சனைகள் என்னென்ன அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதனை எல்லாம் தீர்க்கமாக உணர்ந்து செயல்படக்கூடிய இயக்கங்களை கண்டறிந்து அவர்களோடு அய்க்கியப்படல் வேண்டும். கூடாரத்தை விட்டு வெளியேறும் தம்பிகளின் வேறு எந்த முடிவும் வீண் முடிவாகவே அமையும்.
நேற்று ஒன்று பேசுவதும்; இன்றொன்று பேசுவதும்; நாளை ஒன்று பேசுவதும் – முழுக்க முழுக்க பொய் பேசுவது ஒன்றை மட்டுமே லட்சியமாகக் கொண்டுள்ள இந்த இழி குணம் படைத்த சீமானிடம் அனைத்து தமிழ் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
ஆம், பார்ப்பன – ஆர் எஸ் எஸ் – பாஜக – இந்துத்துவா – காவிப் பாசிசம் ஏற்கனவே தலை தூக்கி உள்ள நிலையில் இப்படிப்பட்ட இழிகுணம் படைத்த பிழைப்புவாதிகளின் செயற்பாடுகள், சங்கிகள் கால் ஊன்றுவதற்கு வழிவகுக்கும்!
அந்த அடிப்படையில் இந்த புளுகுனி சங்கிகள் கூட்டத்தை தமிழ் மண்ணில் இருந்து ஒரு சேரத் துடைத்தெறிய அனைவருமே முற்படல் வேண்டும்.
- எழில்மாறன்







சீமான் போன்ற ஆர்.எஸ்.எஸ் அல்லக்கைகள் எப்போதுமே நேரடியாக தங்களை சங்கி என அறிவித்து கொள்வதில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறி தமிழ் தேசியம் போனி ஆகாததன் விளைவு அம்பலப்பட்டு போயுள்ளான் சீமான் என்பதை காரண காரியங்களுடன் கட்டுரை ஆசிரியர் விளக்கியுள்ளது சிறப்பு.