
ஏப்ரல் 22: பாட்டாளி வர்க்க ஆசான் மாமேதை லெனின் பிறந்த நாளில் வீறுகொண்டு எழுகிறது பெண்கள் விடுதலை முன்னணி!
- சமூக விடுதலை இன்றி பெண் விடுதலை சாத்தியம் இல்லை.
- பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க- பாலியல்- சமூக ஒடுக்கு முறைகளை பாதுகாக்கின்ற சட்டங்களை கிழித்தெறிவோம்! ஜனநாயக கூட்டரசை நிறுவி சமத்துவமான சட்டங்களாக திருத்தி எழுதுவோம்!
- கல்வி முதல் பொருளாதார மீட்டுவது வரை பெண்களுக்கு சம உரிமை கொடுத்து சுயமரியாதையுடன் வாழ வைக்கும் புதிய ஜனநாயக சமூகத்தை படைப்போம்.
- பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் மதங்கள், குறிப்பாக பார்ப்பன (இந்து) மதத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுவோம்!
பெண்கள் விடுதலை முன்னணி- தமிழ்நாடு.
தொடர்புக்கு : 6385802748.
இந்தியாவில் 49 சதவீதம் உள்ள பெண்கள் பங்கு பெறாத எந்த ஒரு இயக்கமும் எந்த ஒரு போராட்டமும் எந்த ஒரு புரட்சியும் வெற்றி பெறாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.
பெண்களின் மீதான ஆணாதிக்க வெறியாட்டங்கள், மத ரீதியிலான ஒடுக்கு முறைகள், பிற்போக்கு பழக்க வழக்கங்கள் போன்றவற்றை எதிர்த்து முறியடிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்ற சூழலில் நடத்த பத்து ஆண்டுகளாக இந்திய ஒன்றிய அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக பெண்களின் மீதான ஒடுக்கு முறைகளை அதிகரித்துள்ளது.
பார்ப்பன இந்து மதத்தின் கொடுங்கோன்மையின் கீழ் பெண்களை மீண்டும் புதைகுழிக்குள் தள்ளுவதற்கு சனாதன மீட்பு என்ற கொள்கையையும் இந்து பண்பாடு என்ற போர்வையில் பார்ப்பன பண்பாட்டை திணிக்கின்ற திட்டத்தையும் கொண்டு செயல்படுகிறது.
இந்த சூழலில் பெண்களுக்கான அமைப்பு வரலாற்று முக்கியத்துவத்தை பெறுகிறது.
தமிழகத்தில் உள்ள முற்போக்கு, ஜனநாயக சிந்தனை கொண்ட அனைவரையும் போராட்ட களத்தில் இணைத்துக் கொள்ள அறை கூவி அழைக்கிறது பெண்கள் விடுதலை முன்னணி தமிழ்நாடு.
மீண்டும் பெண்கள் விடுதலை முன்னணி வீறு கொண்டு எழுந்துள்ளது தமிழகத்தில் ஆணாதிக்க சமூகத்தை விழ்த்தி பெண் விடுதலையை சாதிக்க தமிழகத்தில் களத்தில் உறுதியுடன் இறங்கி உள்ளது வாழ்த்துக்கள்