மக்கள் கலை இலக்கிய கழகம்

தமிழ்நாடு

பத்திரிக்கை செய்தி

மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் 9 வது மாநில மாநாடு 14.12.2021 அன்று திருச்சியில் நடைபெற்றது. அதில் 7 பேர்களைக்கொண்ட புதிய மாநில செயற்குழு தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து மாநில பொதுச்செயலாளராக தோழர் கோவனும், மாநில இணைப்பொதுச்செயலாளராக தோழர். இராவணனும், மாநிலப் பொருளாளராக தோழர். சித்தார்த்தனும் தேர்வு செய்யப்பட்டனர். இதனையொட்டி புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நோக்கிலும், ம.க.இ.கவின் அரசியல் நிலைப்பாட்டை தீர்மானங்களாக அறிவிக்கும் நோக்கிலும் மாலை கருத்தரங்கம் நடத்தப்பட்டது. முன்னாள் மாநில இணைப்பொதுச்செயலாளரும், புதிய மாநில செயற்குழுவின் உறுப்பினருமான தோழர்.காளியப்பன் தலைமையேற்று நடத்தினார்.

மாநில செயற்குழு உறுப்பினரான தோழர். சத்யா அனைவரையும் பாராட்டியும் வரவேற்றும் பேசினார். அதனைத்தொடர்ந்து மாநாட்டில் தேர்வுசெய்யப்பட்ட புதிய நிர்வாகிகளை மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். வாணி அறிமுகம் செய்துவைத்தார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ராஜூ, மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் தோழர். வாஞ்சிநாதன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநிலப்பொதுச்செயலாளர் தோழர்.லோகநாதன், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநிலப்பொதுச்செயலாளர் தோழர், அன்பு, ஆகியோர் மாநாட்டையும்,புதியநிர்வாகிகளையும் வாழ்த்திப்பேசினர்.

புதிதாய் தேர்வு செய்யப்பட்ட மாநிலப்பொதுச்செயலாளர் தொழர் கோவன் ஏற்புரை வழங்கினார் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.

அதனைத்தொடர்ந்து கருத்துரை இந்திய கம்யூனிஸ்டு ட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர். இந்திரஜித் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தோழர் நந்தலாவா தோழர். ஓவியர்மருது, சென்னைப்பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத்தலைவர். பேராசிரியர் வீ. அரசு ஆகியோர் கருத்துரை வழங்கினர் இறுதியாக ம.க.இ.க கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. ம.க.இ.கவின் திருச்சிமாவட்ட செயலாளர் தோழர். ஜீவா நன்றியுரையாற்றி மாநாடு முடிவுற்றது.

பல்வேறு அரசியல் அமைப்புகள், இயக்கங்கள், மற்றும் தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாநாட்டின் கருத்தரங்கத்தில் பங்கேற்றனர். அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் இறுதிவரை அமர்ந்து கவனித்தனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தோழர்.காளியப்பன் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

அவைகள்

1. இந்தியாவில் மோடி தலைமையிலான பாசிச ஆட்சியை தங்களின் உறுதியான ஓராண்டுகால போராட்டத்தின் மூலமாக, 700க்கு மேற்பட்டோரின் உயிர்த்தியாகத்தை விலையாக்கிப் பணியவைத்த, வர்க்க ஒற்றுமையின் அடையாளமாய் திகழ்ந்த, வீரஞ்செறிந்த விவசாயிகளின் போராட்டத்தை இம்மாநாடு வாழ்த்துகிறது.

2. ஒன்றிய அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத பாசிசக் கொள்கைகளை விமாசிக்கின்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூகசெயல்பாட்டாளர்கள்,போராடும் மக்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் போடப்பட்ட உபா. 124A, போன்ற கொடிய வழக்குகளை எதிர்த்துப்போராடி முறியடிக்க இம்மாநாடு உறுதியேற்கிறது.

3. கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் தலைமுறை தலை முறையாய் உழைத்து உருவாக்கிய நாட்டின் வளங்கள், மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அம்பானி அநா உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக அழித்திடும், அனைத்து துறைகளையும் கார்ப்பொரேட்டுகளின் கைகளுக்கு தாரைவார்த்திடும் மோடியின் தலைமையிலான பாசிச ஆட்சியை வீழ்த்திட இம்மாநாடு உறுதியேற்கிறது.

4. ஒரேநாடு, ஒரேமொழி, ஒரேதேர்தல், நீட் திணிப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, இந்தி சமஸ்கிருத திணிப்பு மின்சக்தி, ஜல்சக்தி, அணைப்பாதுகாப்பு மசோதா, என மாநிலங்களின் அனைத்து உரிமைகளையும் பறிக்கின்ற மோடி அரசின் அதிகாரக்குவிப்பு பாசிச நடவடிக்கைகளை எதிர்த்துப்போராடி தேசிய இனங்களின் உரிமைகளைப்பாதுகாக்க போராடும் என இந்த மாநாடு உறுதி ஏற்கிறது.

5. கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தி ஒரு ஜனநாயக கூட்டரசை நிறுவிட அனைத்து ஜனநாயக முற்போக்கு இடதுசாரி இயக்கங்களோடும், ஒன்றிணைந்து போராட இம் மாநாடு உறுதியேற்கிறது.

தோழமையுடன்….

கோவன்
மாநிலப்பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக்கழகம்,
தமிழ்நாடு.

கீழே PDF வடிவில்

மக்கள்_கலை_இலக்கியக்_கழகம்_report

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here