குஜராத் மாநிலத்திற்கு பிறகு பார்ப்பன பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றி வரும் மாநிலமான உத்திர பிரதேசத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை ! என்று வானளாவிய புளுகு ஒன்றை அந்த மாநிலத்தின் முதல்வரும், பாசிச சன்னியாசியுமான யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையில் 2017 முதல் 2021 வரை 398 விவசாயிகளும், 731 விவசாய கூலி தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் தனது ஆய்வின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 18 சதவீதம் பேர் ஆண்கள், 72% பேர் பெண்கள் என்றும், விவசாய கூலித் தொழிலாளர்களின் 92 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் 8 சதவீதம் பேர் பெண்கள் என்றும் இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி நிலத்தை தனது சொத்துரிமையாக வைத்துள்ள விவசாயிகள் 289 பேரும், குத்தகை விவசாயிகள் 109 பேரும் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் 90களில் புகுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாதிக்க கொள்கைகள்  விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டி வருகிறது.

90களுக்கு முன்பு வரை விவசாயிகள் விவசாயத்துடன் இணைக்கப்பட்டு விவசாயம் ஒரு பண்பாடாகவும், விவசாயம் ஒரு சமூக வாழ்க்கை முறையாகவும் இருந்தது.

ஆனால் 90 களுக்குப் பிறகு விவசாயிகளின் உற்பத்தி, ஏகாதிபத்திய முதலாளித்துவ சந்தைகளின் தேவைக்கு ஏற்ப மாற்றப்பட்டதால் விவசாயம் ஒரு வியாபாரம் ஆகிவிட்டது.

இந்த கொடூரமான மாற்றத்தினால் விவசாயிகள் உற்பத்தி செலவிற்கு ஏற்ப விலை தீர்மானித்து விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல், கட்டுப்படியாகின்ற ஆதார விலையும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இதனால் ஏற்படும் கடன் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பயிர் இழப்புகள் அதிகரிக்கும்போது தற்கொலை செய்து கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்று சுட்டிக் காட்டுகிறார் அகில இந்திய கிசான் மஸ்தூர் சபாவின் செயலாளர் ஆஷிஷ் மிட்டல்.

வங்கிகள்; நாட்டை கொள்ளையடிக்கின்ற சூறையாடுகின்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி கடன் கொடுத்து ஊக்குவித்து ,அவர்களின் வா ராக் கடன்களை பாராமல் இருப்பதைப் போல விவசாயிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை,என்னும் முடிவோடு இருக்கின்றன.இன்னும் சொல்லப்போனால் வங்கிகளின் மூலம் சேமிக்கப்படும் இந்திய உழைப்பாளிகளின் பணம் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் கொழுக்கவே பயன்படுகிறது.

வங்கிகளின் மூலம் விவசாயிகளுக்கு கடன் கிடைக்காத காரணத்தினால் தனியார் கந்துவட்டி கொள்ளையர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களின் கடன் அதிகரித்துக் கொண்டே போகும்போது கட்ட முடியாத விவசாயி தற்கொலைக்கு ஆளாகிறார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலைக்கு முக்கிய காரணம், இந்த கடன் விவகாரம் தான் என்று ஆய்வு அறிக்கையில், பல்வேறு தரவுகளுடன் அம்பலப்படுத்தியுள்ளார் ‘கிசான் சுவராஜ் நெட்வொர்க் அமைப்பின் கவிதா குருகாந்தி’.

ஆனால் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை, என்று துணிச்சலாக புளுகுவதுடன் பிரச்சாரமும் செய்து வருகிறார்.

மோடி அரசின் ஊது குழல்களாக மாறியுள்ள ஊடகங்கள் அனைத்தும் இது போன்ற உண்மைகள் தெரிந்தாலும் தனது எஜமானர்களுக்கு விசுவாசமாக உண்மையை மக்களுக்கு தெரிவிப்பதில்லை.

இந்தியா ஸ்பெண்ட் என்ற நிறுவனம் இது பற்றி ஆராய்ச்சி செய்து “ஃபேக்ட் சக்கர்” என்ற இணையத்தின் மூலமாக தரவுகளை சரி பார்த்து வெளியிட்டு வருகிறது.

நாட்டின் பிரதான தொழில் விவசாயம் அதன் முதுகெலும்பு முறிக்கப்பட்டு கோடிக்கணக்கான விவசாயிகள் விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். அவர்கள் தமது வாழ்க்கைக்கான பிழைப்பு தேடி நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர்.

அங்கு துப்புரவு பணி முதல் பிரமாண்டமான தொழிற்சாலைகளில் வேலை உத்திரவாதம் அற்ற ,உயிருக்கே உத்திரவாதம் அற்ற, வேலைகளில் பாதுகாப்பற்ற, தொழிலாளியாக குறைந்த கூலிக்கு வேலையில் அமர்த்தப்படுகிறார்.

இதையும் படியுங்கள்: அதிகரிக்கும் தற்கொலைகள்; அலட்சியப்படுத்தும் மோடி அரசு!

இது வட இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டுமல்ல பீகார், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரும்பாலான விவசாயிகளின் நிலைமை இதுதான்.

பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு தழுவிய அளவில் விவசாயிகளை திரட்டுகின்ற பலம் வாய்ந்த அமைப்பு இல்லாத காரணத்தினால் விவசாயிகளையும், அவர்களின் உற்பத்தியையும் பாதுகாத்து நாட்டையும் மக்களையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் புரட்சிகரமான மாற்றம் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கண்ணின் மணிகளான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துக் கொண்டே சென்றால் அதை சகித்துக் கொண்டு பாட்டாளி வர்க்கம் அமைதியாக இருக்காது. விவசாயிகள் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பூகம்பமாக மாறி அரசியல் அதிகாரத்தில் உள்ள கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகளை வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

சண். வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here