முன்னாள் அரசு அதிகாரிகள் இன்னாள் கார்ப்பரேட்டுகள்!

2014 மற்றும் 2016-க்கு இடையில், அவர் Competition Commission of India மூத்த அதிகாரியாக பணிபுரிந்தார் என்று அவரது LinkedIn பக்கம் தெரிவிக்கிறது.

இந்திய கொள்கைசார் தலைவராக மோடியின் சிந்தனை குழாம் முன்னாள் அதிகாரியை கூகுள் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் மக்களது வரிப்பணத்தில் லட்சக்கணக்கான ரூபாய் வருமானத்தை பெற்று உல்லாச, மேட்டுக்குடி வாழ்க்கை வாழ்ந்து வந்த அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னர் கார்ப்பரேட்டுகளின் காலை நக்க தொடங்கியுள்ளனர்.

ஒவ்வொரு துறையிலும் 30, 35 ஆண்டுகள் பதவியில் இருக்கும் அதிகாரவர்க்க, ஊழல் பெருச்சாளிகள் அந்தத்துறையில் உள்ள விபரங்கள் அனைத்தையும் தரவுகளாக அறிந்து கொண்டிருப்பார்கள்.

எனவே அவர்களை பயன்படுத்தி ஒவ்வொரு துறையையும் முழுங்குவதற்கு பொருத்தமான நபர்களை கார்ப்பரேட்டுகள் அதிக விலை கொடுத்து, அதாவது அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தி கொள்கிறது.

நேற்றுவரை மக்களின் வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் நாட்டின் மீதோ மக்களின் மீது சிறிதும் அக்கறை இன்றி காசு கிடைத்தால் போதும் என்று கார்ப்பரேட்டுகளின் காலடியில் சேவை செய்வதற்கு கிளம்பியுள்ளனர்.

இவை அனைத்தையும் நமது கணக்கில் குறித்து வைத்துக் கொள்வோம். தக்க சமயத்தில் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்.

திருச்செங்கோடன்.

***

Alphabet Inc-இன் கூகுள், இந்தியாவிற்கான புதிய பொதுக்கொள்கைத் தலைவராக அர்ச்சனா குலாட்டி என்பவரை சமீபத்தில் நியமித்துள்ளது. அவர் பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனைக் குழாமான NITI ஆயோக் மற்றும் Competition Commission of India என்ற இந்திய அரசின் கண்காணிப்பு அமைப்பிலும் பணிபுரிந்தவர்.

கடுமையான தரவு மற்றும் தனியுரிமை ஒழுங்குமுறை மற்றும் நிறுவனங்களுக்கிடையேயான போட்டி தொடர்பான சட்டபூர்வ விசாரணை ஆகியவற்றுடன் போராடும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களால் பல இந்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஒரு மாதிரிதான் கூகிளின் தற்போதைய அர்ச்சனா குலாட்டியின் நியமனமும். குலாட்டி நீண்டகால இந்திய அரசு ஊழியர் மற்றும் NITI ஆயோக்கில் டிஜிட்டல் தகவல் தொடர்புக்கான இணைச் செயலாளராக மார்ச் 2021 வரை பணிபுரிந்தவர்.

அதற்கு முன், 2014 மற்றும் 2016-க்கு இடையில், அவர் Competition Commission of India மூத்த அதிகாரியாக பணிபுரிந்தார் என்று அவரது LinkedIn பக்கம் தெரிவிக்கிறது.

அர்ச்சனா குலாட்டியின் நியமனம் இன்றையதினம் வரைக்கும் பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை என்ற நிலையில் கூகிள் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸுக்கு இத்தகவலை உறுதிப்படுத்தினாலும் விரிவாக விளக்க மறுத்துவிட்டார். குலாட்டியைத் தொடர்பு கொண்டு இது குறித்து கருத்து கேட்டபோதும் அவர் உடனடியாக பதிலளிக்கவில்லை.

இந்திய அரசின் Competition Commission of India தற்போது கூகுளின் ஸ்மார்ட் டிவிகள், அதன் ஆண்ட்ராய்டு இயங்குதளம், மற்றும் அதன் பண பரிவர்த்தனை செய்யும் வசதி ஆகியவற்றின் வணிக நடத்தையை கண்காணித்து வருகிறது.

கடந்த ஆண்டு, Meta Platforms Inc, இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களில் பல ஆண்டுகள் பணியாற்றியவரான ராஜீவ் அகர்வால் என்பவரை தனது கொள்கைசார் தலைவராகப் பணியமர்த்தியது.

மற்றொரு முன்னாள் மத்திய அரசு மற்றும் இந்திய வணிகக் கண்காணிப்பு அமைப்பின் அதிகாரியான ஆனந்த் ஜா 2019-இல் வால்மார்ட்டின் இந்தியாவிற்கான கொள்கை அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.

தமிழில்: செந்தழல்

ஆங்கில மூலக்கட்டுரை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here