
ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படையின் மாணவர் பிரிவான ஏபிவிபி நாடு முழுவதும் உள்ள உயர் பல்கலைக்கழகங்களில் ஆதிக்கச் சாதி வெறியாட்டத்தை நடத்துவது; பட்டியலின மாணவர்கள் மற்றும் பழங்குடிகள் மீது தாக்குதல்களை நடத்துவது; இடதுசாரி மாணவர்கள் மீது கொலை வெறியாட்டம் நடத்துவது மற்றும் ஜனநாயக ரீதியாகவும், ஆர்எஸ்எஸ் – பாஜக சங்பரிவார கும்பலுக்கு எதிராக பேசுகின்ற, பிரச்சாரம் செய்கின்ற பேராசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது; அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்று பாசிச பயங்கரவாத வெறியாட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தேர்தல் மூலமாக இடதுசாரி மற்றும் அம்பேத்கரிய அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படும் போது ஏபிவிபி குண்டர் படையினர் அதற்கு எதிராக கலகத்தில் இறங்குகின்றனர்.
ஜேஎன்யூ வளாகத்தில் இந்தியாவின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் குறிப்பாக ஆர்எஸ்எஸ் – பாஜக நடத்துகின்ற கார்ப்பரேட் மற்றும் காவி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரங்கள் நடத்தினாலோ அல்லது ஊர்வலங்கள் நடத்தினாலோ ஏபிவிபி குண்டர் படையினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
இந்த ஆண்டு தேர்தலில் ஜே.என்.யூ-வில் சென்ற ஆண்டைக் காட்டிலும் ஒரு சில பதவிகளில் அதிகமாக வெற்றி பெற்றுள்ள காரணத்தினால் பதவி மற்றும் அதிகார போதை தலைக்கேறி சக மாணவர்கள் என்று பாராமல் சித்தாந்த ரீதியிலான எதிரிகள் மற்றும் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற கொடூரமான பிரிவினைவாத கண்ணோட்டத்துடன் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் உச்சகட்டமாக கடந்த அக்டோபர் 18ஆம் தேதி அன்று ஜேஎன்யூஎஸ்யு மாணவர் அமைப்பைச் சார்ந்த தலைவர் நிதீஷ் குமார் என்பவரை கொடூரமாக தாக்கியது மட்டுமின்றி அவரது சாதிய பின்னணியை வைத்து கொடுமைப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை கண்டித்து ஜேஎன்யு வளாகத்தில் ஊர்வலமாக சென்ற மாணவர்களில் முன்னணியாளர்களான 28 பேரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. ஜே.என்.யூ வளாகத்தில் அமைதியற்ற நிலைமை நிலவுகிறது.
அக்டோபர் மாத நடுப்பகுதியில், ஏபிவிபி பெண் நிர்வாகி ஒருவர், டெல்லி பல்கலைக்கழக டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் கல்லூரியில் ஒரு பேராசிரியரை போலீசார் முன்னிலையிலேயே வெறித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் காணொளியாக வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பல்கலைக்கழகம் ஒரு குழுவை அமைத்தது.
இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட பேராசிரியர் சுஜித் குமார் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க:
♦ JNU என்றாலே காவிகளுக்கு கலக்கம் ஒலிக்குது! | மகஇக பாடல்
♦ மாணவர்கள் அடிப்படை உரிமைக்காக களத்தில் புமாஇமு!
ஏபிவிபி சார்ந்த மாணவர்கள் மீது மேற்படி தாக்குதலுக்கு உள்ளான பேராசிரியர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்தை ஆதரித்து ஏபிவிபி குண்டர் படையினர். மாணவரின் நடவடிக்கைகள் “அரசியல் சார்புக்கு எதிரான தன்னிச்சையான எதிர்வினை” என்று கூறியுள்ளது.
தெற்காசிய பல்கலைக்கழகம் (SAU) : 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உணவு மெனு தகராறு தொடர்பாக ABVP மற்றும் SFI இடையே மோதல் ஏற்பட்டது. அதே பல்கலைக்கழகத்தில் (SAU) முதலாமாண்டு பி.டெக். மாணவியை ஒரு பாதுகாவலர் உட்பட ஏபிவிபி மாணவர் மாணவர் குண்டர் படையை சார்ந்த நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய இடதுசாரி மற்றும் காங்கிரசு மாணவர் அமைப்பின் மீது ஏபிவிபி குண்டர் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம் (HPU) : 2025 அக்டோபரில் ABVP மற்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) இரண்டுக்கும் இடையில் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
2014 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசாங்கத்தை ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச பயங்கரவாத கும்பல் கைப்பற்றிய காலம் முதல் உயர் பல்கலைக்கழகங்களில் குறிப்பாக ஜேஎன்யூ மற்றும் ஐஐடி நிறுவனங்கள் ஐஐஎம் நிறுவனங்கள், உயர்கல்வி பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளாத இடதுசாரிகள், அம்பேத்கரிய, ஜனநாயக சக்திகள் அனைவர் மீதும் தாக்குதல்களை நடத்துவது பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நடத்துவது; தனது அதிகாரத்தை பயன்படுத்தி பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குவது; பின்பு அதனை மறைப்பது என்று பாசிச பயங்கரவாதத்தின் உச்சத்திற்கே ஏபிவிபி என்ற மாணவர் குண்டர் படை சென்று கொண்டுள்ளது.
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) பல பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் தடை செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு போராட துவங்கி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள், அம்பேத்கரிய இயக்கங்கள். ஆகியவற்றின் மாணவர் அமைப்புகள் ஒன்றுபட்டு பாசிச பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்கின்ற அளவிற்கு தயாராக வேண்டும் என்பதும் அதற்கு முதற்கட்டமாக ஆர்எஸ்எஸ் குண்டர் படையினர் ஷாகாக்களில் சென்று பயிற்சி பெறுவதைப் போல மாணவர் அமைப்புகள் தற்காப்பு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
“ஆர்எஸ்எஸ் என்ற பயங்கரவாத அமைப்பை தடை செய்!” என்று போராடுகின்ற போதே உடனடியாக “ஏபிவிபி என்ற மாணவர் குண்டர் படை அமைப்பை தடை செய்!” என்று கூறி மாணவர்கள் மத்தியில் ஒரு எழுச்சி உருவாக வேண்டும். கல்வியை கற்றுக் கொள்வது மட்டுமல்ல சமூகத்தை பாதுகாப்பதற்கு பொருத்தமான சமூக சூழலை உருவாக்குகின்ற போராட்டத்தில் முன்னிலையில் நிற்க வேண்டும்.
- தமிழ்ச்செல்வன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி







சனதான கருத்துக்களை உயர்த்தி பிடித்து, பெண்கள் மீது வன்முறையை ஏவும் கல்வியை பிற்போக்கத்தனத்திற்கு கொண்டு செல்ல காவிமயமாக மாற்ற துடிக்கும் ஆர் எஸ் எஸ் பிஜேபி கும்பல்களுக்கு துணையாக பிற்போக்கு சிந்தனை கொண்ட மாணவர் படை தான் ஏபிவிபி .
இடதுசாரி முற்போக்கு சிந்தனை கொண்ட மாணவர் அமைப்புகளாக நாம் ஒன்றுபட்டு இவர்களை வீழ்த்த வேண்டும்.