ஜே என் யு.(JNU) என்ற பெயரை கேட்டாலே ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பலுக்கு அச்சம் தான்.
அது இடதுசாரிகளின் சித்தாந்த தலைமையகமாக விளங்குகிறது என்று அலறுகிறார்கள்.
சிவப்பு என்றாலே அரசுக்கு எப்போதும் பயம்! பயம் தான்! அரசுக்கு மட்டுமல்ல சிவப்பைக் கண்டால் தனது வாழ்வு பறிபோய்விடும் என்று அஞ்சி நடுங்குகின்ற ஆளும் வர்க்கத்திலிருந்து, ஆளும் வர்க்கத்தின் நிழலில் அண்டி பிழைப்பு நடத்த துணிகின்ற படித்த வர்க்கம் வரை அனைவருக்கும் அச்சுறுத்தல் தான்.
இதையும் படியுங்கள்: செல்லாத கவர்னருக்கு செலவு கோடி கணக்கு | மகஇக பாடல்
கார்ப்பரேட்-காவி பாசிசம் ஏறித் தாக்குகின்ற நாளில் இருந்து ஜேஎன்யு ஆசாதி, ஆசாதி என்ற விடுதலையின் குரலாய் ஒலிக்கிறது.
பாசிச ஆர்எஸ்எஸ் கும்பலின் மாணவர் குண்டர் படையான ஏபிவிபி யின் தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாத வீரம் செறிந்த மரபு ஜேஎன்யு மாணவர்களிடம் உள்ளது.
படிக்கும்போதே கேரியரிசம் பேசும் மாணவர்கள், படித்து முடித்தவுடன் சொந்த வாழ்க்கையில் மூழ்கி திளைக்கும் இளைஞர்களை போராட்டக் களத்திற்கு அழைக்கும் ஜேஎன்யு இந்தியாவின் சொத்து.
அதை விளக்கும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புதிய பாடல்.
கேளுங்கள்! பரப்புங்கள்!