🔴 நேரலை | இன்னும் எத்தனை ரோஹித் வெமுலாக்கள் சாக வேண்டும்? அரங்கக்கூட்டம்

1

1 COMMENT

  1. ஒன்றிய அரசின் அரைகுறையான யு.சி.ஜி.-யின் புதிய சமத்துவ விதிகளுக்கும் தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் செய்கை உச்சிக் குடுமி
    சார்ந்த EWS மிகச் சிறுபான்மை யினருக்கே சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி, அருதிப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கக்களாம் பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட -பழங்குடியின மக்களுக்கு பட்டை நாமம் சாற்றியுள்ளது ஒன்றிய அரசு.

    தொட்டிலையும் ஆட்டி விட்டுக்கொண்டு, பிள்ளையையும் கிள்ளி விடும் கதையாக அச்செய்கையைத் தான் RSS – பாஜக –
    இந்துத்துவ பாசிச சக்திகள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. ஏழை எளிய உழைக்கும் மக்களின் உயர்கல்விக்கு முற்றிலுமாக வேட்டு வைக்க திட்டமிடுகின்றன.

    இப்படிப்பட்ட பிரத்தியேகமான தருணத்தில் தமிழ்நாட்டின் “புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி” சார்பாக சென்னையில் 08-02-2026 மாலை நடத்தப்பட்ட அரங்கக் கூட்டம்

    “யு ஜி சி யின் புதிய சமத்துவ விதிகளுக்குத தடை!

    இன்னும் எத்தனை ரோஹித் வெமுலாக்கள் சாக வேண்டும்?” –

    – என்ற அரங்கக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஆளுமைகள் தத்தம் கண்ணோட்டத்தில் பரந்து விரிந்து ஒன்றிய அரசின் – உச்சநீதிமன்றத்தின் –
    ஆர்எஸ்எஸ் இந்துத்துவ சக்திகளின் முகத்திரைகளை நன்றாகவே கிழித்து காண்பித்தார்கள். அரங்கு நிறைந்து பங்கேற்று இருந்த கூட்டத்தினர் துவக்கம் முதல் இறுதி வரை உரை வீச்சுக்களை
    பொறுமையாக அவதானித்து உள்வாங்கியதும், தேவைப்பட்ட நேரங்களில் எல்லாம் கர ஒலி எழுப்பி போராட்ட எழுச்சிக்கு ஆட்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை பறைசாற்றும் விதமாகவும் அமைந்திருந்தது.

    இந்தியாவிலேயே முதன் முறையாக இப்ப பிரச்சனைக்காக போராட்டக் களம் காண அனைவரும் முன்வர வேண்டும் என்ற விதையை தமிழ்நாட்டில் “புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி” முன்னெடுப்பு செய்துள்ளது. அவர்களை பாராட்டுவோம்! வாழ்த்துவோம்!அவர்களுடன் கரம் கோர்த்து மேலும் மேலும் வீதிகளில் இறங்கி போர்ப் பரணி பாடுவோம்! வெற்றி பெறுவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here