மோடியின் நண்பராய் இருந்தால் பில்லினியர்களாகிறார்கள்
எதிர்ப்பவர்கள் சிறையில் வதைபடுகிறார்கள்


ருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த ருச்சி நிறுவனம் தொழில்முறை பிரச்சனைகளால் வீழ்ந்தது. மஞ்சகடுதாசி கொடுத்தது.  பதஞ்சலி ஓடிவந்து ருச்சியை அடிமாட்டு விலைக்கு வாங்கியது. வாங்குவதற்கு வங்கிகளே கடன்களை சந்தோசமாய் தந்தார்கள். குறுகிய காலத்திலேயே வங்கிக் கடனை அடைத்துவிட்டதாக பதஞ்சலியை புகழ்கிறார்கள்.

பதஞ்சலியின் ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்க மோடி ஹெலிகாப்டரில் பறக்கிறார். ஒன்றிய அமைச்சர் யோகாவை ”வளர்க்க” ராம்தேவ்க்கு அந்தமான் அருகே தீவையே பரிசாக தருகிறார்.  இராணுவ கேண்டினில் நெல்லிக்காய்சாறு விற்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் ரேசன்கடையில் பதஞ்சலி பொருட்களை பொறுப்பாக விற்றுதருகிறார்கள்.

பதஞ்சலி ஆண்டுக்கு முப்பதாயிரம் கோடிகளுக்கும் மேலாக லாபமாக கொழிக்கிறார்கள். சர்வதேச சந்தைக்கு விரைவில் நகர இருக்கிறார்கள். ”எங்களுக்கு நடக்க தெரியாது. ஓடத்தெரியும்” என பஞ்ச் டயலாக் அடிக்கிறார்கள்.

இப்பொழுது தலைப்பை மீண்டும் படியுங்கள்.

  • சாக்ரடீஸ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here