அமேசான் காடுகளில் உள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக பூமியை வெப்பமாக்கும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை உருவாக்கும் மூலப்பகுதியாக மாறி உள்ளது என்று சென்ற மாதம் வெளியிட்ட ஆய்வில் சூழலியல் விஞ்ஞானிகள் திகிலூட்டும் வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளாக மனித குலம் காப்பாற்றி வந்த பூமியை முதலாளித்துவம் இரு நூற்றாண்டில் நாசமாக்கி விட்டது. இனி இந்த பூமியை காக்க சோசலிச பாதை தவிர மாற்று இல்லைமேலும் அவை காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சும் அளவைவிட அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மற்றும் மற்ற பசுமைக்குடில் வாயுக்களையும் உமிழ்வதாக சமீபத்திய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் மற்றும் காலநிலை நிருபர்கள் இயற்கை (Nature) இதழில் கூறியுள்ளனர்.

2010 முதல் 2018 வரை லூசினா காட்டி தலைமையில் பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சிக்கான நேஷனல் இன்ஸ்டிடியூட்   புதிய ஆய்வுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. அதன்படி அமேசான் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள மரத்தின் இலைகளின் நான்கு அடுக்குகளை ஆராய்ந்தனர். அதில் குறிப்பாக சில மைல் உயரத்தில் கார்பன்டை ஆக்சைடு மற்றும் மோனாக்சைடு விபரக்குறிப்பு அளவீடுகளை ஆய்வு நடத்தினர்.

தென்கிழக்கு அமேசான் பகுதி வளிமண்டலத்தில் உள்ள கார்பன் உற்பத்தியின் நிகர மூலமாக செயல்படுகிறது. அதுமட்டுமின்றி இங்கு வெளியேற்றப்படும் மொத்த கார்பன் உமிழ்வு மேற்குப் பகுதியை விட கிழக்கு அமேசானில் அதிகமாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சமீபத்திய பத்தாண்டுகளில் அதிக அளவில் காடழிப்பு நடவடிக்கை புவி வெப்பமயமாதல் மற்றும் ஈரப்பத அழுத்தத்திற்கு உட்பட்டது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொலராடோ மாநில பல்கலைக்கழகத்தின் வளிமண்டல அறிவியல் துறையின் பேராசிரியர் ஸ்காட் டென்னிங்,  இயற்கை இதழில்  ஒரு கட்டுரையில், “வளிமண்டலம் பற்றிய விவரங்கள்   இப்போது நிச்சயமற்ற எதிர்காலத் தன்மையை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது” என்று எழுதினார்.

மின்னஞ்சல் கேள்விகளுக்கான பதிலில், டாக்டர் டென்னிங் இந்த புதிய ஆய்வை முதல் பெரிய அளவிலான அளவீடு என்று கூறினார்- ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் மற்றும் தொலைதூர இடங்களில் உள்ள பல்வேறு உயரங்களில் இருந்து இந்த நிகழ்வு, வனப்பகுதிகளில் பாரம்பரிய அளவீட்டைத் தாண்டி அதிகப்படியான முடிவுகள் கிடைத்துள்ளன. அதில் “கிழக்கு அமேசானில் வெப்பமயமாதல் மற்றும் காடழிப்பு ஆகியவை பிராந்திய அளவில் கார்பன் மடுவை மாற்றியமைத்துள்ளன என்றும் இந்த மாற்றம் உண்மையில் வளிமண்டலத்தில் உள்ள CO2 இன் அளவில் காட்டப்படுகிறது” என்று அவர் எழுதினார்.

படிக்க:

♦  பேரழிவின் விளிம்பில் பூமி!

காடுகள் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும் அளவை விட மூன்று மடங்கு அதிகமாக உமிழ்வதாக கிடைக்கும் ஆராய்ச்சி முடிவுகள் முதல் மோசமான செய்தி என்று கூறியுள்ளார். இரண்டாவது மோசமான செய்தி என்னவெனில் காடுகள் அழிக்கப்படுவது 30% அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் கார்பன் உமிழ்வு 20% குறைவாக இருப்பதை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கிறது.

மாட்டிறைச்சி மற்றும் சோயா உற்பத்திக்காக வேண்டுமென்றே தீ வைப்பதால் ஏற்படும் கார்பன் உமிழ்வின் பங்கும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி பிரேசில் ஜனாதிபதி, மோடியின் கூட்டாளியான பாசிச ஜெய்ர் போல்சனாரோ காடழிப்பை ஊக்குவிப்பதால் ஏற்படும் கார்பன் உமிழ்வின் பங்கும் உலகளாவிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறைவான மரங்களால் குறைவான மழை மற்றும் அதிக வெப்ப நிலையையும் மீதமுள்ள காடுகளுக்கு வறண்ட காலநிலை இன்னும் மோசமாக்குகிறது. மேலும் இது காடுகளில் கட்டுப்பாடற்ற தீங்கை உருவாக்குகிறது இது மிகவும் மோசமான எதிர்மறை விளைவாக உள்ளது என்று ஆய்வு முடிவுகளை சுட்டிக் காட்டி டென்னர் கூறினார்.

அழிக்கப்படும் அமேசான் காடுகள்!

அமேசானில் இருந்து வெட்டி அழிக்கப்படும் அதிக அளவு மரங்கள், மாட்டிறைச்சி மற்றும் சோயா ஆகியவை பிரேசிலிருந்து உலக நாடுகளுக்கு அதிலும் குறிப்பாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரேசில் மற்றும் பிற நாடுகளுடனான ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் போல்சனாரோ அமேசான் காடுகளின் அழிப்பை தொடர்வார் என்று ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன. ஆகவே அமேசானை காப்பாற்ற எங்களுக்கு ஒரு உலகளாவிய ஒப்பந்தம் தேவை என்றும் கூறினார்.

பிரண்டியர்ஸ் இன் ஃபாரஸ்ட் மற்றும் குளோபல் சேஞ்ச் இதழில் வெளியிடப்பட்ட மார்ச் பகுப்பாய்விற்கு பிறகு அமேசானில் கார்பன்-டை-ஆக்சைடு மட்டுமல்ல மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, கருப்பு கார்பன் ஆவியாகும் கரிம சேர்மங்கள், ஏரோசோல்கள் ஆவியாற்றல் மற்றும் ஆல்பிடோ ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

இயற்கை காலநிலை மாற்றம் இதழில் வெளியிடப்பட்ட ஏப்ரல் ஆய்வை பிரேசில் கவனம் செலுத்துகிறது. இந்த பல்லுயிர் மற்றும் அச்சுறுத்தும் மழை  காடுகள் 9 நாடுகளை உள்ளடக்கியது. அவற்றில் மேற்கொண்ட மாறுபட்ட முறைகளைக் கொண்ட ஆய்வுகள் புதன்கிழமை வெளியிட்ட   முடிவுகளுடன் மிகவும் ஒத்து இருக்கிறது என்று  டென்னிங் கூறினார்.

ஆராய்ச்சியாளர்கள் செயற்கைக்கோளின் கண்காணிப்பை நம்பியிருந்த ஏப்ரல் ஆய்வு 2010 மற்றும் 2019 க்கு இடையில், பிரேசிலிய அமேசான் 16.6 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டது, அதே நேரத்தில் 13.9 பில்லியன் டன் மட்டுமே உறிஞ்சிக்கொண்டது. அதாவது பத்தாண்டுகளில்  அதிக CO2 உறிஞ்சப்படுவதை விட அது கிட்டத்தட்ட 20% கார்பனை வெளியிட்டது.

“நாங்கள் அதை அரைகுறையாக எதிர்பார்த்தோம், ஆனால் பிரேசிலிய அமேசான் எங்களின் கணிப்பை புரட்டிப் போட்டு விட்டது. இப்போது கார்பனின் நிகர உமிழ்ப்பான் பல மடங்க்கு அதிகரித்துள்ளது என்று உலகின் அழிவைக் காட்டும் புள்ளிவிவரங்கள் வெளி வருவது இதுவே முதல் முறை” என்று பிரான்சின் தேசிய வேளாண் நிறுவன விஞ்ஞானி மற்றும் இணை எழுத்தாளர் ஜீன்-பியர் விக்னெரான் கூறினார். இந்த ஆராய்ச்சி (INRA), எந்த நேரத்தில். “எந்த கட்டத்தில் மாறுகிறது என்று எங்களுக்குத் தெரியாது.”

பிரான்ஸ் பத்திரிக்கை கழகத்தில் இருந்து பதிவாகும்  ஆய்வு பற்றிய ஒரு அறிக்கையில், INRA குறிப்பிடும் போது “பிரேசில், 2019 இல் போல்சனாரோ ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அரசாங்கத்தின் மாற்றத்திற்குப் பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகளை பயன்பாட்டில் ஒரு கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளதைப் பார்த்தேன்” என்று லூசினா காட்டி குறிப்பிட்டார்.

மேலும் “அமேசானில் தீயை எங்களால் தடை செய்ய முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள் – அது ஒரு கார்பன் மடுவாக இருக்கலாம்” என்று சென்ற மாதம் வெளியிட்ட ஆய்வில் கூறினார், மேலும் மழைக்காடுகளின் நிலப்பரப்புகளை விவசாயத்திற்கு  அழிக்கப்படுவதால் எதிர்மறையான தாக்கத்தை உருவாக்குகிறது அதனால் காலநிலை மாற்றத்தை துரிதப்படுத்துகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

நன்றி: The wire

தமிழில். – வண்ணன்.

https://m.thewire.in/article/environment/biggest-story-right-now-humanity-has-flipped-amazon-from-carbon-sink-to-source

——– ——- —–

அன்பார்ந்த வாசகத் தோழர்களே!

இதுவே பூமிப் பந்தின் இறுதிக்காலம். உலகின் எந்த மூலை வாழும் மனித இனத்தை சார்ந்த யாருக்கும் இது தான் நிலைமை. ஆனால் அகண்ட நிலப்பகுதியில் பளபளக்கும் பங்களாக்கள் முதல் அடுக்குமாடி குடியிருப்பு வரை வீடுகட்டுவது, காடுகளை அழிக்கும் பண்ணை வீடுகள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் கண்கவர் குடியிருப்புகளைக் கட்டுவது, கரியமில வாயுவை உமிழும் பிரமாண்ட கார்ப்பரேட் தொழிற்சாலைகளை இயங்க அனுமதிப்பது என்ற அயோக்கியத்தனத்தை ஏகாதிபத்திய முதலாளித்துவம் தங்கு தடையின்றி நடத்துகிறது.

நுகர்வு கலாச்சாரம் தோற்றுவிக்கும் மதி மயக்கத்தில் பெரும்பான்மை உழைக்கும் மக்களும் இரண்டு சக்கர நான்கு சக்கர வாகங்கள் வாங்கி மகிழ்வதுடன், சூழலியல் பாதிப்பு போன்ற சிக்கல்களை கண்டுக் கொள்வது கிடையாது. ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் அழிந்து வரும் பூமியில் அதற்கு எதிரான போராட்டம் ஒன்று இல்லாமல் நடுவில் சொர்க்கம் ஒன்று இருப்பதைப் போல மயக்கம் கொள்கின்றனர். இந்த மயக்கம் தோற்றுவிக்கும் மாயைகளில் இருந்து விடுபடுவோம். சுற்றுச்சூழல் வன்முறைக்கு எதிராக போராடுவோம். பூமிப்பந்தை பாதுகாப்போம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here