செப்- 28 மாவீரன் பகத்சிங் பிறந்த நாளில் உறுதியோற்போம் | கருத்தரங்கம்

செப்- 28 மாவீரன் பகத்சிங் பிறந்த நாளில் உறுதியோற்போம்!

மாநில பல்கலைக்கழகங்களை செல்லாக்காசாக்கவரும் VBSA மசோதவை கிழித்தெறிவோம்!
கல்லூரி- பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கத் தேர்தலை நடத்திட போராடுவோம்!

கருத்தரங்கம்! 27-09-2026 மாலை 5 மணி சென்னை.


மாணவர்களே பெற்றோர்களே!

கடந்த 2014 ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது பாசிச மோடி அரசு. பல்வேறு தரப்பு மக்களின்  எதிர்ப்புகளையும் மீறி, தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ கொண்டு வந்து மொத்த கல்வித் துறையையும் கார்ப்பரேட் – காவிமயமாக்கும் வேலைகளை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக VBSA சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் துடிக்கிறது. மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமலே இந்தச் சட்டத்தை திணிக்கப் பார்க்கிறது பாசிச மோடி அரசு

தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ள இச்சட்ட மசோதா மூலம் பல்வேறு உயர்கல்விப் பிரிவுகளுக்காக இயங்கிவரும் பல்கலைக்கழக மானியக்குழு UGC, அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் AICTE, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் NCTE ஆகிய அமைப்புகள் கலைக்கப்பட்டு வி.பி.எஸ்.ஏ  (விக்சித் பாரத்சிக்க்ஷா ஆதிஷ்டான்) என்ற கல்வியாளர்களே இல்லாத 12 பேர் கொண்ட ஒரே அமைப்பின் கீழ் உயர்கல்வியைக் கொண்டு வரப்பார்க்கிறது பாஜக அரசு.

இந்தச் சட்டத்தின்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அனைத்தும் உயர் கல்வி நிறுவனங்கள் என்ற வரையறைக்குள் வரும். இதன் மூலம் பல்கலைக் கழகங்களுக்குரிய மதிப்பை, அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. அடுத்தபடியாக, மாநில பல்கலைக் கழகங்களுக்கான கொள்கை முடிவுகளையும்,  பாடத்திட்டங்களையும், கல்வித் தரத்தையும் நிர்ணயிக்கும் உரிமையையும் முழுமையாக கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் ஒரேநாடு – ஒரே கல்விக் கொள்கை – ஒரே மொழி தமிழ்நாட்டு கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் திணிக்கப்படும்.  குறிப்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தகுதி, திறமை என்று நீட் தேர்வைத் திணித்து ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வியையும் உயிரையும் பறிக்கின்றது. மேலும் VBSA சட்டத்தின் மூலம் BA, B.COM, B.SC  போன்ற பட்படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வைக் கொண்டுவர போகின்றது பாசிச மோடி அரசு.  ஒரு தேர்வைக் கூட நேர்மையாக நடத்த முடியாமல் நீட் தேர்வில் மோசடி, ஊழல், முறைகேடு என்று இவர்களின் முகமுடி கிழிந்துத் தொங்குகின்றது என்பது தனிக்கதை.

உயர் கல்வியில் தரத்தை மேம்படுத்த இந்த சட்டத்தைக் கொண்டு வருவதாக கூறும் மோடி அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி அளிப்பது பற்றி இச்சட்ட மசோதாவில் எதுவும் கூறவில்லை. இதன் மூலம், மோடி அரசு வந்த பிறகு வெட்டிச்சுருக்கப்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுக்கான UGC நிதியும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தேசியக் கல்விக் கொள்கையின் மாதிரிப் பள்ளியான PMSHRI பள்ளிகளை அனுமதித்தால்தான் சட்டப்படி தரவேண்டிய, தமிழ்நாட்டுக்கு உரிமையான கல்வி நிதியை வழங்க முடியும் என்று ஒன்றிய அரசு மிரட்டுகிறது. ரூ.5,109 கோடி நிதியை தராமல் தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வி மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. அதேபோல், தற்போது பல்கலைகழகங்களுக்கும் நிதி வழங்காமல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இது உயர் கல்வியை கார்ப்பரேட்மயமாக்கவே வழிவகுக்கும்.

பொதுப்பட்டியலில் கல்வி இருந்தாலும் மாநில அரசு உரிமையை மதிக்காமல்  தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகின்றது பாசிச பாஜக அரசு  மேலும் தமிழ்நாட்டில்  CBSC பள்ளிகளை தொடங்குவதற்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து பாடத்திட்டத்திலும் மும்மொழி கொள்கையை திணித்து சமஸ்கிருத வகுப்பை கட்டாயம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்துபல்கலைக்கழக துணைவேந்தர் நியமனக்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை நுழைத்து விட்டது பாசிச பாஜக அரசு.

பாசிச பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம், மேகாலயா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களே இந்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பைத்  தெரிவித்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் நடக்கும் தவெக அரசு வாய்மூடி மவுனமாக வேடிக்கைப் பார்க்கிறது. அதையும் தாண்டி நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களை ஒடுக்குவது, மேலும் பள்ளி கல்லூரிகளில் இடதுசாரி மாணவர் அமைப்பை சார்ந்தவர்கள் போராடக் கூடாது அப்படிப் போராடினால் அவர்களைகா கண்காணிக்க வேண்டும் என்று சுற்றிக்கை விடுவது என மாணவர்களின்  ஜனநாயக உரிமைகளை நசுக்கப்பார்க்கிறது. கல்வித் துறையின் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவது அவசியமாகிறது. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் மாணவர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற குரலை ஓங்கி எழுப்ப வேண்டியுள்ளது. மாநில உரிமைகளைப் பறிக்கும், மாணவர்களின் கல்வியை கேள்விகுள்ளாக்கும் ஒன்றிய மோடி அரசுடன்  ‘இணக்கமாக” செய்லபடப்போவதாக அறிவிக்கிறது தவெக அரசு. இந்த அடிமைத்தனத்தை நாம் ஏற்கக்கூடாது. அன்று நாட்டை அடிமைப்படுத்திச் சுரண்டிய காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராக இளைஞனான பகத்சிங்கும் அவரின் தோழர்களும் போராடினார்கள் இன்று மாணவர்களின் கல்வி உரிமை, மாநிலத்தின் உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்து தமிழகத்தில் பெரும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்போம். பகத்சிங் கனவுகண்ட ஏற்றத்தாழ்வுகளற்ற, ஜனநாயக நாட்டைப் படைக்க ஓரணியில் திரள்வோம்.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – புதுவை– 9500792976.

1 COMMENT

  1. பாசஸ மோடி அரசின் மாநிலங்களின் உரிமையையும் மக்களின் உரிமையையும் மாணவர்களின் உரிமையையும் பறிக்கும் வி பி எஸ் ஏ சட்ட மசோதாவை கிழித்தெறிவோம் மாபெரும் மாணவர் எழுச்சி உருவாக்குவோம் தொடர்ந்து போராடுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here