சீரியஸா பேசி நீ சிரிப்பேத்தாத!
~
‘ நாட்டின் சுதந்திரம் 25 ஆண்டுகளை நிறைவு செய்தபோது நமது சொந்த காலில் நிற்பதற்கு ஏராளமானவற்றை நாம் செய்திருக்க வேண்டும் . அதன் பிறகு காலம் மிகவும் கடந்து விட்டது .

நாடு ஏராளமான நேரத்தை வீணாக்கியுள்ளது. இதற்கிடையில் இரண்டு தலைமுறைகள் கடந்து விட்டன. எனவே இரண்டு நிமிடங்களைக் கூட நாம் வீணாக்கக் கூடாது! ‘

நேற்று கான்பூர் ஐஐடி மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது க.கா உணர்ச்சிவயப்பட்டான்.

இனி, ரெண்டே ரெண்டு நிமிடத்தைக்கூட வேஸ்ட் பண்ணக்கூடாது!
2022 க்கான சபதம் எடுத்தான் .

அடுத்த வினாடி ..

‘அமுக்கு டுமுக்கு
அமால் டுமால்’

தேவகானம் அவன் காதில் விழுந்தது.

அசையும் பொருட்களனைத்தையும்
ஒரு கணம் freez செய்யவைத்த பாடல்.

‘ ஹேய் ஜலபுல ஜங்கு
டேய் டம டும டங்கு
தக் லைப்ல கிங்கு
டான் செட்டிங்கு ‘

இந்த பாட்டை
பிரதமர் கேட்க வேண்டும் ! தோன்றியது.

மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசும்போது –

‘தற்சார்பு இந்தியா என்பது எவரையும் சார்ந்திருக்காத முழுமையான சுதந்திர வடிவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்’
என்கிறார் பிரதமர் மோடி .

இதைதான் ரோகேஷூம் அனிருத்தும் ,

‘ ஹேய் ஜினுக்குனா ஜிங்கு
அவர் ஏஜ் யோ யெங்கு
அனல் பறக்கனும் பங்கு
உன் ஃபிட்டிங்கு!’

இளைஞர்களுக்கு புரியும்படி சொல்கிறார்கள்.

ரோகேஷ் வேறு யாருமல்லர்.
ஆலுமா டோலுமா, டங்கமாரி ஊதாரி போன்ற காவிய வரிகளைத் தந்த கவிஞர்.

‘ நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்க்கையில் சவால்கள் இருக்கும் . அவற்றிலிருந்து தப்பி ஓடுகின்றவர்கள் அவற்றுக்கு பலியாகி விடுவார்கள் .
ஆனால் சவால்களை நீங்கள் எதிர்கொண்டால் நீங்கள் வேட்டையாடுபவராகவும், சவால்கள் வேட்டையாடப் படுபவையாகவும் மாறும்! என்கிறார் பிரதமர் .

தாடி வளர வளர தாகூர் போலவே பேசுகிறார். பாவம், மாணவர்கள்தாம். கொட்டாவி விடுகிறார்கள்.

‘சில்லா வுடு
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு
அரியர் அதிகம் உனக்கு
பட் லைப்ல ஜெயிச்சா
நீதான் பா டான்னு!’

எவ்வளவு சிம்ப்பிளா
சொல்கிறார் சீனா கானா.

பாராளுமன்றத்தில் பாதி எம்பிக்கள் தூங்குகிறார்கள். மீதி பேர் பல்டி அடிக்கிறார்கள். தண்டால் எடுக்கிறார்கள். உபி முதல்வருக்கு பசு மூத்திரப் பெருமை பேசவே நேரம் போதவில்லை.

கொரோனா பாதிப்பால் ஆன் லைன் கிளாஸ். attend பண்ண ஒரு ஆண்ட்ராய்ட் ஃபோன் இல்லாமல் அழிந்தது இந்திய மாணவர் வாழ்வு.

‘ இரண்டு நிமிடங்களைக் கூட
நாம் வீணாக்கக் கூடாது ‘

ஐஐடியில் வேதம் ஓதுகிறார் டான்.

‘ஒழுங்கேத்தாத கடுப்பேத்தாத
ஸீரியஸா பேசி நீ சிரிப்பேத்தாத!’
parody கதகளி ஆடுகிறார்
நம்ம டான் சீனா கானா!

  • கரிகாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here