புழுவே, வணக்கம் !

“அற்பப்புழுவே” என உனை
யாருமினிப் பழிக்கமுடியாது.
கண்டுபிடித்துவிட்டார்கள் :
உயிர்காக்கும் ஹீமோகுளோபினை
மனிதனுக்கும் எல்லா உயிர்களுக்கும்
புழு கொடுத்துவிடும்.

” ஐயோ ரத்தம் நெறைய போயிருச்சே! ”
பதறிக்கதறும் மனிதஜீவிகளுக்கு
புழு அற்புதச் சுகமளிக்கிறதென்றால்
நம்பமுடியவில்லை என்பீரேல்
கவி பீட்டர் சொல்வான் :
” இக்கினியூண்டு புழுவில் — இது
மாமருந்து.அத்தனைக்கும் சேர்த்து
‘அற்பப் புழு’வுக்கும் முகம் கொடுத்த
அறிவியலாளருக்கு வணக்கம்! ”

புழுவுக்குப் பெயர் : கடல்புழு;
தலைவா,சூப்பர் ஸ்டார் பெயரல்ல,
முப்பத்துமுக்கோடித் தேவர்களின் பெயரல்ல,
தனி ஒரு பெயரல்ல கூவிவிற்க ( கொண்டாட ),
அது
கடலின் உயிரான புழு — கடல்புழு
அவ்வளவே அவ்வளவு !

  • பீட்டர்

அடிகுறிப்புகள்

1.அறிவியலாளர் பெயர்கள் கிரிகோரி ரேய்மாண்ட் மற்றும் குவென் ஹெரால்ட். இருவரும் உயிரியல் ஆய்வாளர்கள்.

2. அப்புழுவின் உயிரியல் பெயர் அரேனிகோலா மெரீனா. கடல் வாழ்வியலில் மக்கள் வழங்கும் பெயர் ” தூண்டில் இரை பெரிய கடற்புழு (lugworm) .”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here