10 நாட்களில் இரண்டாவது இறப்புச்செய்தி.

முதல் மனிதர் இறப்பு எம்மை பாதித்தது, எனினும் அவரது வாழ்வு அவருக்கு மட்டுமே ஆனது.

வாழ்நாள் முழுவதும் தனக்காய் வாழ்ந்து தெருமுனையின் மறுபக்கம் வாழ் மனிதர்கள் அறியா சாவு அன்றாடம் நிகழ்கிறது.

அது நாம் அறிந்தும் அறியாமலும், நம்மை கடந்து போகிறது.

பிறருக்காக வாழும் தன்னலம் அறியா மனிதர்களின் பிரிவு மலையை விட கனமான உன்னத வாழ்வாகிறது.

ஐயா என்று விளிப்பது உயர்தமிழ் குடியின் மரபுதான் எனினும் அதன் மெய்ப்பொருளை எமக்கு உணர்த்திய மா மனிதனே!

அரசு பணி, வயது மூப்பு என்று பொதுவாழ்க்கையில் இருந்து விலகுவதற்கு பல தரமான இலக்கியங்கள் உயிருடன் உலாவும் போது தங்களின் மலையை ஒத்த பணி எமது நிழலாடுகிறது.

மாணவர்கள் கல்வி உரிமைக்காய் பெற்றோர்களின் சுயமரியாதைக்காய் பொதுமக்களின் உரிமை போராட்டங்களுக்காய் காலநேரம் பாராது காலடித் தடம் பதித்த நின் பணிகள் எமக்கு முன்னே திசை காட்டுகிறது.

தங்களின் அனுபவம் எமது வயது எனினும் இளையவர் என பாராத, சமத்துவம் பேணிய உயர்ந்த மானுட நெறி யாரிடம் எமக்கு இனி வாய்க்கும்.

இறப்பு எதிர்பார்த்த ஒன்று என ஆறுதல் கொள்ள இயலவில்லை. ஏனென்றால் பிரதிபலன் பார்க்காமல் சமூகத்திற்கு உழைக்கின்ற மனிதர்கள் மிகவும் குறைவு.

இந்த இடைவெளியை இட்டு நிரப்ப தங்கள் பெயரால் உறுதி ஏற்கிறோம்.

சென்று வாருங்கள் ஐயா!

  • இளஞ்செழியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here