கண்ணை மறைக்கும் காவிப் புழுதி ஒலி வடிவில்!

கார்ப்பரேட் - காவி பாசிசம் ஏறித்தாக்கி வருகின்ற சூழலில் பாட்டாளி வர்க்கத்திற்கு மற்றுமொரு ஆயுதமாக இந்த நூல் பயன்படும் என்று நம்புகிறோம்.

2

 

மக்கள் கலை இலக்கியக் கழகம் கண்ணை மறைக்கும் காவிப் புழுதி நூலை வெளியிடும் போது இந்தியாவில் பார்ப்பனக் கும்பல் ஆட்சி அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றவில்லை. மறுகாலனியாக்கம் என்ற அரசியல், பொருளாதார, பண்பாட்டு கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என்றால் ஏகாதிபத்தியத்திற்கு நம்பகமான அடியாள் கட்சி ஒன்று தேவை என்ற நிலைமையில் அதற்குப் பொருத்தமான கைக்கூலி பாரதிய ஜனதா கட்சிதான் என்பதையும் மக்களுக்கு உணர்த்தியது. ஆர் எஸ் எஸ் பாஜக கும்பல் இந்தியாவை சூழ்ந்திருக்கும் மிகப்பெரிய அபாயம் என்பதை மக்கள் கலை இலக்கியக் கழகம் உணர்ந்து பாட்டாளி வர்க்கத்திற்கு எச்சரித்தது.

திராவிட இயக்கங்கள் ஒன்று மாறி ஒன்று பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல் அரசியலில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்போது தேர்தல் அரசியலுக்கு வெளியில் தமிழக மக்களை அரசியல் ரீதியாக பார்ப்பனியத்திற்கு எதிராக அணி திரட்டுகின்ற போர்க்குணத்தை மக்கள் கலை இலக்கிய கழகம் தொடர்ந்து செய்து கொண்டு வந்தது.

இந்த வகையில் இந்த வெளியீடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
எனவே பல்வேறு வேலை சுமைகளின் காரணமாக படிக்கின்ற சிரமம் இன்றி ஆடியோ வடிவில் கேட்கின்ற வகையில் இந்த நூலை வெளியிடுகிறோம்.
கார்ப்பரேட் – காவி பாசிசம் ஏறித்தாக்கி வருகின்ற சூழலில் பாட்டாளி வர்க்கத்திற்கு மற்றுமொரு ஆயுதமாக இந்த நூல் பயன்படும் என்று நம்புகிறோம். நீங்கள் கேட்பது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களிடம் சென்று சேருவதற்கு உதவுங்கள் பரப்புங்கள் என்று அன்புடன் கோருகிறோம்.

ஆசிரியர் குழு.
மக்கள் அதிகாரம்.

2 COMMENTS

  1. சிறப்பான முயற்சி!
    நாங்கள் யோசித்ததும் இதுதான்.
    நூல்களை நாமே வாசித்து பதிவு செய்து வீட்டில் ஒலிக்க செய்தால் குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் கேட்கவும்,புரிந்துகொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தோம்.

    வாசிப்பு பழக்கம் குறைந்து வரும் சூழலில் இப்படி அரசியல் புரிதலை உருவாக்கும் அனைத்து விதமான புத்தககங்கள் ஒலி வடிவில் வருவது பயனுள்ளதாக இருக்கும்.
    இந்த யோசனையை சொன்ன,அமுல்படுத்திய தோழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! பாராட்டுக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here