ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடனேயே தேர்தல் ஜனநாயக கூத்துக்க்ளும் நடக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாக்காளர்களை அடைத்து வைத்து தேவையானவற்றை கொடுப்பது, ஓட்டுக்கு பணம் கொடுப்பது, ஸ்மார்ட்வாட்ச் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொடுத்து ஓட்டு கேட்பது நடந்து வருகிறது.
இவையெல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்தே தான் நடக்கிறது. தேர்தல் என்றாலே இது இயல்பானதாகிவிட்டது. இந்த இடைத்தேர்தலினால் மக்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. இதனை விளக்கி தோழர் சரவணகுமார் பேசியுள்ள காணொளியை பாருங்கள் பகிருங்கள்