முன்னாள் ஏபிவிபி தலைவர் சுப்பையா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர் எஸ் எஸ்-பாஜக கூட்டத்தில் உள்ள, உண்மை நிலையை அறிய விரும்பாத, மனம் பிறழ்ந்த கும்பலில் ஒருவரான சுப்பையா செய்த காரியங்கள் அனைத்தும் படு கேவலமானவை.
இவனைப் போன்றவர்கள் தலைமை தாங்கிய மாணவர் அமைப்பு எந்த லட்சணத்தில் இருந்திருக்கும் என்பதற்கு ஏபிவிபி தற்போது நடந்து கொள்ளும் முறையே சாட்சியாக உள்ளது. இந்த இடத்தில் “இந்து கடவுளர்களின்” யோக்கியதை ஒப்பிட்டுப் பார்த்தால் சுப்பையாக்கள் செய்வதில் எந்த தவறும் இல்லை என்ற முடிவிற்கு தான் சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்கள் வந்துசேர்வார்கள்.
பெண்கள் குளிக்கும் போது ஆடையை தூக்கிக்கொண்டு ஓடிய கண்ணன் என்ற போக்கிரி செய்த செயல்கள் கிருஷ்ண லீலை என்று வர்ணிக்கப்படுகிறது. மனைவி உயிருடன் இருக்கும் போதே தலையில் வைப்பாட்டியை வைத்துக்கொண்ட சிவனின் ஒழுக்கத்தைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
இந்துக் கடவுளர்களின் யோக்கியதையை அம்பலப்படுத்தினால் இந்துக்களின் நம்பிக்கையின் மீது கேள்வி எழுப்புகிறார்கள் என்று ஆர் எஸ் எஸ் மடை மாற்றுகிறது. இத்தகைய கிரிமினல் கூட்டம் இன்னும் பல ராகவன்களையும், சுப்பையாக்களையும் உருவாக்குவதற்கு முன்பாக விழித்துக் கொள்வோம்.
சனாதனம், ஹிந்து தர்மம் என்ற பெயரில் இது போன்ற கழிசடை கலாச்சாரத்தை நம் தலையில் கட்டுவதற்கு முன்பாக கார்ப்பரேட்-காவி கும்பலை முற்றாக வீழ்த்துவோம்!