ஆண்டவன் சொத்தை கொள்ளை அடித்த பார்ப்பன அர்ச்சகர் செந்தில் பட்டர் அவர்களை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
கண்டன அறிக்கை
தேதி : 17.09.2025
தென்தமிழகத்தின் புகழ்பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் தலைமை அர்ச்சகர் செந்தில் சிவாச்சாரியார் என்பவர் பல லட்சம் மதிப்புள்ள வெள்ளி தங்கம் போன்ற நகைகளை கொள்ளை அடித்துள்ளார்.
கடவுளுக்கே விபூதி அடித்து கொள்ளையடித்து உள்ளார்கள்.
செந்தில் பட்டர் என்பவர் அவருடைய குடும்ப பாரம்பரியம் உள்ளவர்கள் ஏற்கனவே சில பேர் இது போன்று நடந்துள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.
உலகப்புகழ் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசை முத்தாரம்மன் திருக்கோயிலில் உள்ள மூத்த அர்ச்சகர் முத்து சுப்பிரமணிய பட்டர் என்ற ஹரிஷ்பட்டருடைய சொந்த தாய்மாமா (அம்மாவின் உடன் பிறந்த சகோதரர்) செந்தில் பட்டர் அவர்களும், முத்தாரம்மன் திருக்கோயில் ஹரிஷ்பட்டர் முத்தாரம்மன் திருக்கோயிலில் வேலை பார்க்கும் சக ஊழியரான செயல் அலுவலரின் ஓட்டுநரை கூலிப்படை வைத்து தாக்கி அவர் மேல் F.I.R பதியப்பட்டு திருநெல்வேலி பாளை மத்திய சிறைச்சாலை 5 நாட்கள் போலீஸ் காவல் சிறை வைக்கப்பட்டு அவர் மேல் திருக்கோயில் சார்பாக துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சஸ்பென்ட் தொடர்ந்து வருகிறது. தற்போது வருகின்ற 23.09.25 தசரா திருவிழா ஆரம்பமாகிறது தற்போது வரை முத்தாரம்மன் திருக்கோயிலில் நிரந்தர அர்ச்சகர் இல்லை. மேலும் தற்போது ஹரிஷ்பட்டர் அவரின் தந்தை ராஜாபட்டர் உடன் பிறந்த தம்பி ஐயப்ப பட்டர் தான் தற்காலிக அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பட்டர் என்பவர் இது போன்ற திருட்டு பொருட்களை சேர்த்து எங்கு எடுத்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை கொள்ளை அடித்து உள்ளார்கள் கடவுளுக்காக பத்தி ஆன்மீகத்தோடு பொதுமக்கள் கொடுக்கும் காணிக்கைகளையும் நகைகளையும் கொள்ளையடிப்பது என்பது கடவுளுக்கு செய்யும் துரோகம் என்பது கூட தெரியவில்லை ஆனால் அவர்கள் இப்படி செய்வது என்பது ஆன்மீக சமூகத்திற்கும் பக்திக்கும் ஒரு கெட்ட பெயரை உருவாக்குகிறார்கள்
ஒரு அர்ச்சகருக்கான தகுதியை கூட அவர்களுக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் கடவுள் நம்பிக்கை இவர்களுக்கு இருக்கிறதா என்பது இறைவனுக்கே வெளிச்சம். கடவுள் நம்பிக்கை உடைய எந்த பக்தனும் கோயில்களில் திருடமாட்டார்கள்.
தமிழக கோயில்களில் நீதிபதி ஏ கே ராஜன் அவர்கள் ஆய்வு செய்து அறிக்கை பார்ப்பன அர்ச்சகர்கள் அவர்களுடைய தகுதி திறமை அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி அவர் முழுமையான அறிக்கை 2006 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
இந்த அறிக்கையில் பார்ப்பன அச்சகர்கள் பூஜை செய்யும் முறைகளிலும் தகுதியற்றவர்கள் முறையான படிப்பும் அவர் படிக்கவில்லை பரம்பர முறையில் தான் அர்ச்சகராக தற்போது வரை உள்ளார்கள். ஸ்மார்த்த பிராமணர்கள் கருவறையில் பூஜை செய்ய கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இன்று பெரும்பான்மையான கோயில்களில் பூஜை செய்து வருகிறார்கள்.
கோயில்களில் சமத்துவம் சமூகநீதி உருவாக்க வேண்டும் என்பதற்கான முயற்சியை தமிழ்நாடு அரசு திராவிட முன்னேற்ற கழக அரசு தொடர்ந்து போராடிக் கொண்டுதான் வருகிறது.
இங்கிருக்கும் இந்து அமைப்புகளான இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பிஜேபி, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளும் பார்ப்பன அர்ச்சகர் சங்கங்களும் காசி விஸ்வநாதர் கோயில் ஆகம கோயில் இந்த கோயில்களில் அர்ச்சகர்களாக பணிபுரியும் செந்தில் பட்டர் இவர்களை எதிர்த்து ஏன் குரல் கொடுக்கவில்லை இவர்கள் தமிழகத்தில் பார்ப்பன அரசியல் செய்யும் கூத்தை இந்து அமைப்புகள் ஆதரித்து கொண்டு தான் வருகிறது. இதற்கான ஒரு போராட்டமோ ஆர்ப்பாட்டமோ, அரசிடம் கொடுப்பதோ வழக்கு போடுவதோ எந்தவித நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் எனபது தான் உண்மை.
ஆனால் தமிழ்நாடு அரசு கோயில்களில் சமத்தும் சமூக நீதி உருவாக்குவதற்கு தந்தை பெரியாருடைய கொள்கை நெஞ்சில் தைத்த முல்லை நீக்குவதற்கான தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கருவறையில் பூஜை செய்வதற்கு அவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு முறையான தமிழ் முறைப்படியான பூஜை முறைகளிலும் ஆகம முறைப்படியான பூஜை முறைகளையும் சைவ, வைணவ முறைப்படி அனைத்து வழிபாட்டு முறைகளையும் கற்றுத் தந்து அதை தகுதி படைத்து முறையான ஒரு ஆகம கோவில்களில் பூஜை செய்வதற்கு அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளார்கள்.
படிக்க:
♦ குமார வயலூரில் தொடங்கிய போராட்டம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வரை ஓயாது!
♦ அனைத்து சாதி அர்ச்சகர் ரத்து! சனாதனமே இனி ஆட்சிமுறை!
இவர்கள் ஆகம கோயில் கருவறையில் பூஜை செய்யக்கூடாது என்று இவர்கள் பல எதிர்ப்புகளும் நீதிமன்ற வழக்குகளும் போராட்டங்களும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் இந்து அமைப்புகள் ஆன மத்திய பிஜேபி அரசு ஆதரவுடன் பார்ப்பன அர்ச்சகர்கள்சங்கங்கள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றன.
முறையான தகுதியோடு உள்ள அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர்கள் இன்று நாங்கள் பயிற்சி முடித்து பல ஆண்டுகளாக நடுத்தெருவில் நிற்கிறோம்
தமிழ்நாடு அரசு திராவிட முன்னேற்ற கழக அரசு 2021 ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆகம ஆகம அல்லாத கோயில்களில் பணியாமர்த்தப்பட்டார்கள் பணியமர்த்தப்பட்ட மாணவர்கள் ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டன
இந்தப் பிரச்சனையில் இந்து அமைப்புகளான இவர்கள் ஏன் எங்களை தகுதியோடு உள்ள மாணவர்களை பூஜை செய்வதற்கு அனுமதி மறுக்கிறார்கள் பணி செய்ய விடாமல் பிரச்சனைகளை செய்கிறார்கள். கொலை மிரட்டலும் விட்டார்கள் சில மாணவர்களுக்கு மறைமுகமான தாக்குதலும் நடைபெற்றன அதைத் தாண்டி தற்போது வரை பூஜை செய்து வருகிறார்கள்.
தந்தை பெரியார் சொல்வார் கோயில் கருவறையில் பார்ப்பான் மட்டும்தான் பூஜை செய்ய வேண்டும் என்று இருக்கக்கூடாது சூத்திரன் மற்ற சாதியினர் தகுதியோடு உள்ளே போய் அவர்களும் பூஜை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அந்தக் கோரிக்கை இன்று வரை தொடர்ந்து போராடி வருகிறது திமுகவும் தமிழ்நாடு அரசும் திராவிட இயக்கங்களும் அம்பேத்கர் இயக்கங்களும் கம்யூனிஸ்ட் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் அனைவரும் சேர்ந்து தொடச்ச போராடிக் கொண்டுதான் வருகிறது.
கோயில் கருவறையில் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவர்கள் உயர் பதவிக்கு செல்கிறார்கள்
பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தகுதி இல்லாதவர்களை கோயில்களில் பூஜை செய்து வருகிறார்கள்.
முறையாக படித்து தகுதி பெற்று தமிழ்நாடு அரசு சிறந்த தகுதியை எங்களுக்கு வழங்கி நாங்கள் முறையாக படித்து ஆகம கோவில்களில் பூஜை செய்வதற்கான அனைத்து தகுதிகளும் இருந்து எங்களால் உள்ளே செல்ல முடியவில்லை இதை முட்டுக்கட்டை போடுவது இங்க இருக்கும் பார்ப்பன அச்சகையில் சங்கமும் இந்து அமைப்புகளும் தான்.
தற்பொழுது தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலிலும், குலசை முத்தாரம்மன் திருக்கோயில்களிலும் பணியாற்றிய அர்ச்சகங்கள் இரண்டு பேருமே நிரந்தர பணி நீக்க வேண்டும் அவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன அர்ச்சகர்கள் ஏற்கனவே நிறைய கோயில்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன அவர்கள் பக்தி ஆன்மீகத்தோடு வேலை செய்கிறார்களா என்பது தெரியவில்லை கீழே நான் அதற்கான புகைப்படங்கள் சிலது பதிவிடுகிறேன் பாருங்கள்.
அதில் முத்தாரம்மன் திருக்கோயில் ஹரிஷ்பட்டர்( மத்தியில்) ஒரு புறம் செந்தில் பட்டரும், மறுபுறம் அவருடைய அக்கா கணவர் பிரசித்திபெற்ற சங்கரன்கோவில் அர்ச்சகர் ஆகியோரோடு சேர்ந்து 2023 ஆம் ஆண்டு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவில் எடுத்த புகைப்படத்தையும் பதிவிடுகிறேன் பாருங்கள் சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு இருக்கும் அவர்தான் செந்தில் பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் இப்படி செய்வார்களா என்பது தெரியவில்லை இவர்கள் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள் நல்ல ஒழுக்கமுடையவர்கள் என்று சொல்கிறார்கள்
சில பேர் ஆனால் நான் அனைவரையும் ஒழுக்கமற்றவர்கள் சொல்லவில்லை ஆனாலும் இதுபோன்ற தமிழ்நாட்டில் ஏராளமான கோயில்களில் பார்ப்பனர் அட்டூழியங்களை நீங்கள் அனைத்து ஊடகங்களும் செய்திகளிலும் பார்க்கலாம் ஆனால் இவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
தமிழ்நாடு அரசு பார்ப்பன அர்ச்சகர்களின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டுங்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பார்ப்பன அர்ச்சகர்களின் படிப்பு தகுதி திறமை ஒழுக்கம் பற்றி ஆய்வு செய்து தகுதியற்றவர்களை உடனடியாக நீக்குங்கள்.
பார்ப்பன அர்ச்சகர்கள் மரபு பழக்க வழக்கம் என்ற முறையில் இருக்கும் பரம்பரை உள்ள அர்ச்சகர்களை நீக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயிலும் தமிழ்நாட்டில் உள்ள பொது மக்களுக்கு சொந்தமானது ஆனால் அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள் சில கோயில்களை அதை மீட்க வேண்டும்.
கோயிலுக்கு வரும் பார்ப்பன அர்ச்சர்கள் தற்பொழுது ஆகம கோவில்களில் அவர்கள் தான் பூஜை செய்து வருகிறார்கள் அந்தக் கோயில் உள்ள அர்ச்சகர்கள் ஆகும் முறைப்படி பூஜை செய்தார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் அவர்களை ஆகமீரில் நடந்தால் உடனடியாக அவர்களை அர்ச்சகர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இந்த தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் தூத்துக்குடியில் உள்ள முத்தாரம்மன் திருக்கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் அவர்களுடைய இரண்டு பேருமே மிகவும் நெருங்கிய உறவினர்கள் அவர்கள் தான் இந்த திருட்டை நடத்தியுள்ளார்கள் இவர்களின் அர்ச்சகர் பதவி நிரந்தரமாக நீக்க வேண்டும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழக அரசு கொண்டுவந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பயிற்சி முடித்த மாணவர்களை ஆகம கோவில்களில் இதுபோன்ற அனைத்து திருக்கோயில்களில் எங்களை பணியமர்த்த வேண்டும்.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம்
பதிவு எண் : 189/2009
90474 00485






