புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 2வது மாநில மாநாடு!
அன்பார்ந்த தொழிலாளர்களே !
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் 2-வது மாநில மாநாடு சென்னையில் 10.08.2025 தேதியன்று நடைபெற்றது. கீழ்கண்ட நிகழ்ச்சி நிரல் திட்டமிடப்பட்டு காலை 10 மணிக்கு தியாகிகளுக்கு வீர வணக்கத்தோடு துவங்கிய முதல் அமர்வில்,
1. அமைப்பு விதிகள் மற்றும் கொள்கை அறிக்கை திருத்தம்.
2. மாநில குழு மற்றும் மாவட்ட குழு வேலை திட்டங்கள் பற்றிய பரிசீலனை.
3. கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த மேற்கொள்ளப்பட்ட அரசியல் இயக்கங்கள்.
4. ஊடகக்குழு அறிக்கை விவாதித்தல்.
5. மாநில நிதி அறிக்கை வாசித்தல்
மாநில மாநாட்டின் ஒப்புதலோடு தலைமை குழுவாக தோழர் விதேந்தர், தோழர் மகேந்திரன் மற்றும் லோகநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டு மேற்கூறிய நிகழ்ச்சி நிரல் விவாதிக்கப்பட்டது.
முதல் அமர்வின் இறுதியாக மாநில பொருளாளர் தோழர் ஜெயராமன் மாநில நிதி அறிக்கை வாசித்தார், அதனை மாநாட்டில் ஏகமனதாக ஏற்றுகொள்ளப்பட்டது. பிறகு, அனைவரும் உணவு அருந்தினர்.
இரண்டாவது அமர்வில், சிறப்பு குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்களின் மேற்பார்வையில்,
1. புதிய மாநில நிர்வாக குழு தேர்ந்தெடுப்பது.
2. வாழ்த்துரை
3. ஏற்புரை
4. தீர்மானங்கள்
என திட்டமிடப்பட்டு நடைபெற்றது.
தமிழ்நாடு – புதுச்சேரி தழுவிய மாநில பொதுக்குமு உறுப்பினர்களுக்கு மாநில நிர்வாககுழு பதவிக்கு போட்டியிடும் பதவிகள் முன் மொழியப்பட்டது.
அதனடிப்படையில், தேர்தல் குழு முன் மொழிந்த பதவிகளுக்கு விண்ணப்ப படிவத்தை போட்டியிடுபவர்கள் பெற்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிறப்பு உறுப்பினராகளான தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு போட்டியிட்ட தோழர்களை பொதுக்குழு உறுப்பினர் முன் மற்றும் வழி மொழிய வேண்டும். அதனடிப்படையில், தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்ற 5 பதவிகளுக்கு வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆதலால், போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனை ஆதரித்து மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கரவொலி மூலமாக தங்கள் ஒப்புதலை தெரிவித்தனர்.
அதனடிப்படையில், கீழ்கண்ட வேட்பாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் நிர்வாக குழுவாக பொறுப்பேற்று கொண்டனர்.
1. தலைவர்: தோழர் இல. பழனி
2. துணைத் தலைவர் 1: தோழர் ம.சி. சுதேஷ் குமார்
3. துணைத் தலைவர் 2: தோழர் மகேந்திரன்
4. பொதுச்செயலாளர்: தோழர் லோகநாதன்
5. இணைச் செயலாளர் 1: தோழர் இரா.சதீஷ்
6. இணைச் செயலாளர் 2: தோழர் விகந்தர்
7. பொருளாளர்: தோழர் விஜயகுமார்.
பொறுப்பெடுத்துக்கொண்ட நிர்வாகக்குழு தோழர்களின் ஏற்புரையை பொதுக்குழு ஏற்றுக்கொண்டது.
பு.ஜ.தொ.மு முன்னாள் மாநில தலைவர் தோழர் அ.முகுந்தன் மற்றும் தோழமை
அமைப்பின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். அதனையடுத்து பொதுச் செயலாளரால் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.







புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய மாநில நிர்வாகிகளுக்கு எமது புரட்சிகரமான வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறேன்.
அரசியலில் முன்முயற்சி; தொழிற்சங்கங்களை கட்டமைப்பதில் முன் முயற்சி; பாட்டாளி வர்க்க விடுதலைக்கு தொழிலாளர்களை அணிவகுப்பதில் முன் முயற்சி… என்பன போன்ற அனைத்துவித புரட்சிகர நடவடிக்கைகளில் புதிய மாநில நிர்வாகிகள் உறுதியேற்று செயல்படுவீர்கள்
என்ற உறுதியான நம்பிக்கையுடன் மீண்டும் உங்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.