கர்நாடக மாநிலத்தில் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலா கோவில்(மஞ்சுநாதர்) என்பது மிகவும் ‘பிரசித்தி பெற்றதாக’ விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதன் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கும் தலைமை பொறுப்பில் இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வீரேந்திர ஹெக்டே ஆவார். இந்தக் கோவிலுக்கு பல லட்சம் கோடி சொத்துக்கள் பல மோசடி வழிகளிலும், பக்தியின் பெயரிலும் குவிந்து கிடக்கின்றது.

இக்கோயில் தொடர்பான அதிர வைக்கும் சம்பவங்கள், அண்மைக் காலத்தில் வெளிவந்தவுடன் ‘நமது மக்கள் அதிகாரம்’ தளத்தில் தெளிவான கட்டுரை ஒன்று ஏற்கனவே வெளியானது.

சாரம் இதுதான்:

‘அக்கோவிலில் பணியாற்றிய துப்புரவு பணியாளர், கோவில் நிர்வாகம் எண்ணற்ற இளம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, பின்பு கொலை செய்து புதைத்துள்ளதாகவும், இதில் எண்ணற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் கொலை செய்யப்பட்டு கோவில் வளாகங்களில் மற்றும் ஆற்றுப்படுகைகளில் புதைக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில் 98 சதவீதம் பேர் ‘இந்து’க்கள் தான் என்றும் இதற்கு மூல காரணம் பாஜக ஆர் எஸ் எஸ் இந்துத்துவ காவிக் கூட்டத்தின் பின்புலம் கூடுதலாக இருக்கிறது என்றும், தானே நூற்றுக்கணக்கான பிணங்களை எரித்திருக்
கிறேன் அல்லது அடக்கம் செய்திருக்
கிறேன் என்றும்’ இந்தக் கொடுமையை சகிக்க மாட்டமையால் தான், தான் பணியிலிருந்து வெளியேறி விட்டதாகவும் துப்புரவுப் பணியாளர் வெளிப்படுத்திய கொடூரமான தகவல்கள் ஏற்கனவே வெளியே வந்துவிட்டன.

தற்போது இதனை மறுபடியும் வெளியிடுவதற்கான காரணம், கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையான அரசாங்கம், தர்மஸ்தலாவின் ஒட்டுமொத்த
நிகழ்வுகளையும் துப்பறிய குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற – காவல்துறை சார்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) காவல்துறை உயர் அதிகாரி (டிஜிபி-அந்தஸ்தில்) பிரணோவ் மொஹந்தி தலைமையில் அமைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

சிறப்பு புலனாய்வு படை அதிகாரி அனுசேத் முன்னிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தர்மசாலாவின் நேத்ராவதி நதி ஓரத்தில் மனித உடல்கள் தோண்டி எடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. இப்பணியில் 25-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாஜக -வின் ‘மோடி’வித்தை:

இப்படி தர்மஸ்தலாவின் கோரக் கொலைகள் அம்பலமாகி கொண்டிருக்கக் கூடிய வேலையில், இப்பணிக்கான புலனாய்வுக் குழு (SIT) தலைவர் டிஜிபி பிரணோவ் மொஹந்தியை மோடி அரசு கர்நாடகாவில் இருந்து மாறுதல் செய்து ஒன்றியப் பணிக்கு இழுத்துக் கொண்டுள்ளது.

தர்மஸ்தலாவின் பாஜக சார்பு ‘செல்வாக்கு மிக்க’ மாநிலங்களவை உறுப்பினர் வீரேந்திர ஹெக்டே மற்றும் சங்பரிவார் கூட்டத்தைக் காப்பாற்றும் நோக்கிலேயே, இவ்வித மாறுதல் நடவடிக்கையை மேற்கொண்டு புலன் விசாரணையை முடக்கிப் போட எத்தனித்துள்ளது ஒன்றிய மோடி அரசு என்பதில் துளி அளவும் ஐயமில்லை.

இவ்வித சூழலில், புலனாய்வு குழுவின் புதிய தலைவராக மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஓரிரு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து விட்டாலே வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கின்ற நயினார்கள், அண்ணாமலைகள், அர்ஜுன் சம்பத்துகள், தமிழிசை – வானதிகள், எதிர்க்கட்சிகள் என்று சொல்லக்கூடிய எடப்பாடிகள், விஜய்கள், சீமான்கள் இன்ன பிற அசிங்கம் பிடித்த கூட்டம் வாயில் கொழுக்கட்டையை ஒதக்கிக் கொண்டு துண்டுகளால் பொத்திக் கொண்டிருக்கின்றன.

படிக்க: 

 தர்மஸ்தலா: பெண்களை விழுங்கும் ஹெக்டேவின் பேரரசு!

 தர்மஸ்தலா நடத்தப்பட்ட பாலியல் படுகொலைகள் | தோழர் வெங்கட்

எனவே, கர்நாடகா அரசாங்கம் மற்றும் காவல்துறை இவ்விடயத்தில் எள்ளின் முனையளவும் பின் வாங்காமல் தர்மஸ்தலா – மஞ்சுநாதர் கோயில் கொடுமைகள், கொள்ளைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். அனைத்து சொத்துக்களையும் அரசுடமையாக்க வேண்டும். கோவிலை பூட்டி சீல் வைக்க வேண்டும். குற்றவாளிகள் எந்த உச்சாணிக் கொம்பில் இருந்தாலும் அனைவரையும் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை உட்பட அதிகபட்ச தண்டனைகளை வழங்கியே ஆக வேண்டும்.

தமிழ்நாட்டில் கோவை ஈஷா மையம் நடத்தும் பொறுக்கியும் இந்த வகையை சேர்ந்தவன் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தர்மஸ்தலா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போல் கோவை ஈஷா மையம் மீதும் அதனை நடத்தும் மோடி மற்றும் சங்பரிவார் கூட்டத்தின் பின்புலம் கொண்டவனுமான ஜக்கி வாசுதேவ் மீதும் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். ஏனெனில் இவன் கோவை ஈஷா மையத்தில் மின் மயானமே வைத்திருக்கிறான். எண்ணற்றோரை கொன்று புதைத்துள்ளான் எனப் பரவிய செய்திகள் முடக்கப்பட்டுவிட்டன.

இந்து மதத்தின் பெயரை பயன்படுத்தி ‘இந்து மத’ மக்களையே கொலை செய்து புதைப்பதுதான் தர்மஸ்தாலாவாக இருந்தாலும் சரி; ஈஷா மையமாக இருந்தாலும் சரி; நாடு முழுமைக்கும் இயங்கும் இவ்வித கொலை பட்டறைகளின் தொழிலாக உள்ளது. எனவே அரசாங்கங்கள் சம்பந்தப்பட்ட அதிகார வர்க்கம் இதில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களைப் பாதுகாக்க வேண்டும். அனைத்து தனியார் மடங்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் அரசாக முன்வந்து எடுக்க மக்களும் களப் போராட்டங்களை முன்னெடுத்து நீதி பெற முயற்சிக்க வேண்டும்.

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here