இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 02-ஆம் தேதி நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதாக அறிக்கையின் மூலம்அறிவித்தார். அறிக்கையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் தனது கட்சியின் இலக்கு என்றார். ஊடகங்கள் அனைத்தும் விஜய் சொல்லும் மாற்றம் என்னவென சில வாரங்களுக்கு பேசும் பொருளாக ஆக்கியது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் விஜய் கட்சி பற்றிய விவாதம் மக்களிடம் மறைந்து போனது. பிறகு கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் அக். 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு மாநாட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மாநாட்டுக்கு ஆளும் திமுக அரசு பல்வேறு தடைகளை உருவாக்குகிறது என பார்ப்பன ஆதரவு ஊடகங்கள் பூதாகரமாக எழுதியதால் மீண்டும் விஜய் கட்சியும், அவரது அரசியல் பிரவேசமும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
கொள்கை – கோட்பாடு இல்லாத மற்றொரு ஆளும் வர்க்க அரசியல் கோமாளி!
1988-ஆம் ஆண்டில் நடிக்க தொடங்கிய விஜய் கடந்த 30 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து தற்போது முழுநேர அரசியல்வாதியாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார். இத்தனை ஆண்டுகளில் மக்கள் நலன் சார்ந்து அரசியல் பேசாத விஜய், உழைக்கும் மக்கள் மீது அரசும், ஆட்சியாளர்களும் நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக எந்த சிறு எதிர்ப்பையும் காட்டாமல் மௌனம் சம்மதமே என இருந்து வந்தார் “ரீல்” ஹீரோ. அதேபோல், நாட்டின் இயற்கை வளங்களை, மக்களின் உழைப்பை லாப வெறியோடு சூறையாடும் கார்ப்பரேட் சுரண்டல் பற்றி நடிகராக இருந்தபோது மட்டுமல்ல, கட்சி தொடங்கிய பிறகும் பேசவில்லை. ஆளும் வர்க்கத்தையோ, கார்ப்பரேட் சுரண்டலையோ எதிர்க்காமல் கள்ளமெளனம் சாதித்த விஜயின் அரசியல் பிரவேசம் மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் தரப் போவதில்லை.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியபோது தனது அறிவிப்பில் “தமிழகத்தில் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சிதிருத்தங்களை கொண்டுவர விஜய் மக்கள் இயக்கம் என்ற ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது’ என்று கூறியிருந்தார். அதாவது, தற்போது நிலவுகின்ற சமூக, அரசியல் பொருளாதாரத்தில் மக்கள் நலன்களுக்கான மாற்றங்களைக் கொண்டு வருவதற்காகக் கட்சி தொடங்கவில்லை. வெறும் சீர்திருத்தங்களை கொண்டுவரவும், தனது விஜய் மக்கள் இயக்க அமைப்பிற்கு அரசியல் அதிகாரம் பெறுவதற்காகவும் கட்சி தொடங்கியதாக கூறுகிறார். அறிக்கையின் மற்றொரு இடத்தில் மக்கள் விரும்பும் அடிப்படை அரசியலை மாற்றப்போவதாக தெரிவிக்கிறார். அதாவது இருக்கின்ற கட்டமைப்புக்குள்ளே சீர்திருத்தம் செய்யப் போகிறாரா? அல்லது அடிப்படை அரசியலில் மாற்றம் செய்யப் போகிறாரா? என்ற தெளிவில்லாமலேயே ‘முட்டை பரோட்டாவாக’ தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கி உள்ளார்.
சுருங்கச் சொன்னால், எந்தக் கொள்கையும், கோட்பாடும் இல்லாமல் எம்.ஜி.ஆர், விஜயகாந்த், சீமான், சரத்குமார், கமல் போன்ற அரசியல் அரைவேக்காடுகள் பாசிச கோமாளிகள் வரிசையில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் ‘இளைய தளபதி’ விஜய்,
அறிக்கையில் அரசியலும்! அரசியலற்ற நடைமுறையும்!
விஜய் கட்சி தொடங்கும்போது வெளியிட்ட அறிக்கையில், மாநில உரிமை பறிப்பு, மத அரசியல், ஊழல் என அரசியல் பேசுகிறார். அம்பேத்கர், பெரியார், காமராஜர் வழியில் செயல்படப்போவதாக அறிவிக்கிறார். அம்பேத்கார், பெரியாருக்கும். காமராஜருக்கும் இடையில் அரசியலில் இருந்த வேறுபாட்டைக் கூட அறியாத தற்குறிதான் இந்த விஜய். இது ஒருபுறமிருக்க அவர்களின் நடைமுறையில் துளியும் விஜயிடம் இல்லை. அதாவது அரசியலில் ஒரு சிறு துரும்பையும் அசைத்தது இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.
மாநில உரிமை பற்றிய அவரது திடீர் கரிசனம் தனது அரசியல் ஆதாயத்திற்காக சேர்க்கப்பட்ட வரிகளே. ஒன்றிய பாசிச பாஜக அரசு. தமிழகத்தில் ஆளுநரை கொண்டு மாநில உரிமைகளில் தலையிட்டபோதும், ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநில பங்கு தராதது, நீட் திணிப்பும், பல மசோதாவிற்கு ஒப்புதல் தராதது. பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் நியமனம், தமிழ்மொழி புறக்கணிப்பு, மாநிலத்தின் பெயரை தமிழகம் என சுருக்க முயற்சி, தமிழக வரலாற்று திரிபு என தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படும் போதும், வாயே திறக்காமல் அமைதியாக இருந்த விஜய்யும் அவரது விஜய் மக்கள் இயக்கமும் கட்சி தொடங்கியவுடன் மாநில உரிமைபற்றி பேசுவது போலித்தனமானது. சந்தர்ப்பவாதமானது.
ஏற்கனவே அவரிடம் மாநில உரிமைகள் பறிப்பு பற்றிய சமூக அக்கறை இருந்ததில்லை. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு சினிமாவில் நடித்தார். அந்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்கக் கட்சி தொடங்கிவிட்டு, மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதற்கு எதிராகவே கட்சி தொடங்குவதாக நன்றாக நடிக்கிறார்.
காமராஜர், பெரியார். அம்பேத்கர் ஆகியோரின் வழியில் செயல்படப்போவதாக கூறும் விஜய், பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய பிறகு, ஏப்ரல் மாதம் அம்பேத்கர் பிறந்த நாளில் அம்பேத்கர் கொள்கைகள் பற்றி எதுவும் பேசவில்லை. ஜூலை மாதம் காமராஜர் பிறந்த நாளின்போதும் எதுவும் செய்யவில்லை. மாநாடு அறிவிப்பிற்குப் பிறகு, திடீரென பெரியார் பிறந்தநாளில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து “பெரியார் காட்டிய சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்” என பரபரப்பை உருவாக்கினார்.
இசை வெளியீட்டு விழா, சினிமா துவக்க விழா, விருது வாங்கும் விழா மேடைகளில் பலமுறை பேசியுள்ள விஜய் ரசிகர்களுக்கு அமெச்சூர் பாணியிலான குட்டிக்கதை சொல்வதைத் தவிர அம்பேத்கர் – பெரியார்பற்றி பேசியதே இல்லை. மே மாதம் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் மட்டுமே அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை படியுங்கள் என பேசினார். வேறு எங்கும் எப்போதும் பெரியார் அம்பேத்கர்பற்றி பேசாத விஜய் தனது ரசிகர்களிடம் அரசியலற்ற குட்டிக் கதைகளை சொல்வதே கொள்கைக் கோட்பாடு என நினைத்துவிட்டார் போலிருக்கிறது.
தமிழக அரசியல் “ஊழல் மலிந்த அரசியல் கலாசாரமும், மதம் சார்ந்த பிளவு அரசியலும் நமது முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது” என கூறும் விஜய் திரைத்துறையில் உள்ள ஊழலை என்றுமே கண்டித்தது இல்லை. திரைத்துறை என்பது கலைத்துறை என்ற தன்மை இழந்து கார்ப்பரேட் வணிகமாக பரிணமித்து கருப்பு பணத்தின் மூலம் ஊழல் செய்யும் துறையாகவே உள்ளது. கருப்பு பணத்தை வெள்ளையாக்க சினிமா எடுப்பதும், அதிக அளவில் கருப்பு பணம் புழங்கும் இடமாக உள்ளது. அந்த வகையில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட், சுபாஷ்கரனின் லைகா போன்ற திரைத்துறை கார்ப்பரேட்டுகளுடன் இணைந்து ரசிகர்களின் அடிமடியை சுரண்டும் நாயகனாக, திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக இருப்பதால் விஜய்யும் ஊழலின் ஓர் அங்கமாகவே இருக்கிறார். விஜய்யின் ஊழலுக்கு எதிரான வரிகள் என்பது பணத்தை கொள்ளையடிக்கும் திருடனே திருடர்களால்தான் நாம் பாதிக்கப்படுகிறோம் என பாடம் எடுப்பதுபோல் உள்ளது.
அதேபோல், கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை வாங்கினார். ஆனால் காருக்கு நுழைவு வரி செலுத்தவில்லை. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட பிறகே வரி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகராக இருக்கும்பொழுதே வருமானத்தை மறைத்தவர். நுழைவு வரி கட்டாமல் ஏமாற்றியவர் அரசியல்வாதியானால் எதையும் செய்வார் என புரியாத அளவிற்கு முட்டாள்கள் அல்ல தமிழக மக்கள்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறானதா?
இந்தியா போன்ற நாடுகளில் 18 வயது நிறைவுபெற்ற எவரும் அரசியலுக்கு வரலாம் என்பதால் வழக்குரைஞர், மருத்துவர். பொறியாளர் உள்ளிட்ட மற்ற பிற தொழில் செய்பவர்கள் அரசியலுக்கு ஏற்றுக்கொள்ளும்போது வருவதை சினிமாக்காரர்கள் மட்டும் அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பதாக சிலர் நினைத்துக் கொள்கின்றனர்.
நடிகர்கள் தவிர மற்றவர்கள் ஏதாவது ஒரு அரசியல் இயக்கத்தோடு தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு கணிசமான காலம் அரசியல் அனுபவத்தோடு பதவிக்கு வருகிறார்கள். ஆனால், நடிகர்களோ சினிமாவில் இருந்து ஓய்வு பெறும்வரை அதன் சொகுசுகளை அனுபவித்துவிட்டு, சினிமாவில் இருந்து ஓய்வு பெறும்போது திடீரென்று அரசியலில் குதித்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள மக்கள் மீது கரிசனம் கொண்டவர்களாக நடிக்கிறார்கள். தாங்கள் அரசியலில் குதிக்கும் நாள் வரை மக்களைப் பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினைக்காகவும் குரல் கொடுப்பதோ. போராடுவதோ இல்லை.
மாறாக ரசிகர் மன்றம் மூலமாகவோ அல்லது மக்கள் இயக்கம் என மாற்றிக் கொண்டோ, மக்களுக்கு சில உதவிகளை-தேவைகளை செய்வதும், புயல் மழை போன்ற பேரிடர் காலங்களில் உணவு பொட்டலங்களும், அரசுக்கு நிதி தருவதுமே போதுமான தகுதி என நடிகர்கள் கருதுகின்றனர். மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு குரலெழுப்புவது, அடிப்படை வாழ்வியல் மாற்றத்திற்காக, நலன்களுக்காக போராடுவது அவசியமில்லை என நினைக்கின்றனர். இதில், விஜய்யும் விதிவிலக்கல்ல என்பதை அவரின் கடந்த கால நடவடிக்கைகள் நிரூபிக்கிறது. தங்களது ஆதாயத்திற்காக மக்களை ஏமாற்றும் ‘அரசியல் நடிகர்கள்’ அரசியலுக்கு வருவதை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.
பாசிசத்திற்கு உதவும் விஜய்யின் அரசியல் பிரவேசம்!
தமிழ்நாட்டின் இளம் தலைமுறையினர் மத்தியில் விட்டேத்திதனமான சிந்தனையையே விஜய்யின் படங்கள் உருவாக்கி உள்ளன. எனவேதான் நாட்டில் மக்களை பாதிக்கும் பல பிரச்சனைகள் இருக்கும்பொழுது அவற்றைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் அஜித் ரசிகர்களே தங்களது எதிரி 61687 முகநூலிலும்-நேரிலும் சண்டையிட்டு வந்தனர்.
விஜய் சினிமாவில் பேசும் வசனத்துக்கு அவர் சொந்தக்காரர் இல்லை. நடிப்பிற்காக பணம் வாங்கிக்கொண்டு பேசியவை. இதனை புரிந்துகொள்ளாமல் சினிமாவில் பணம் வாங்கிக்கொண்டு விஜய் பேசிய வீர வசனங்கள் எல்லாம் விஜய்யின் சொந்தமான கருத்து என நினைத்துக்கொண்டு கனவில் வாழ்கின்றனர் அவரது ரசிகர்கள். இதனால் ஒட்டுமொத்தச் சமுதாயத்துக்கும் வழிகாட்டும் தலைவனாக விஜய்யை சித்தரிக்கின்றனர்.
இன்றைய கார்ப்பரேட் – காவி பாசிச சூழலில் வேலையின்மை, விலைவாசி உயர்வு. வறுமை ஆகியவற்றிற்கு மேலும் மேலும் ஆட்படுத்தப்பட்டு கோபத்திற்கும், துடிப்பிற்கும் ஆளாகிவரும் இளைய தலைமுறையினரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பாசிசம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இளைஞர்களை பாசிசத்திற்கு எதிரான அரசியல் அமைப்புகளில் அணிதிரட்ட வேண்டியது அவசியம்.
தமிழகத்தில் உள்ள இளைஞர்களை பாசிச எதிர்ப்பு அரசியலை நோக்கி வரவிடாமல் தடுத்து, விட்டேத்திகளாக மாற்றி கார்ப்பரேட்- காவி பாசிசத்தின் அடியாள் படையாக மாற்றவே விஜய்யின் அரசியல் பிரவேசம் உதவும். இதன் மூலம் மறைமுகமாக பாசிசத்திற்கு விஜய்யின் கட்சி துணை நிற்கும் என்கிற அபாயமும் உணர்ந்து தமிழ்நாட்டு இளைஞர்களை பாதுகாப்போம்.
புதிய ஜனநாயகம் (மா.லெ)
2024 அக்டோபர் மாத இதழ்
- விஜயன்.
சிறப்பு .
விஜயனின், தமிழக வெற்றி கழகம் துவங்கும் நடிகர் விஜய் பற்றிய சரியான அம்பலப்படுத்தும் செருப்படி கொடுக்கும் கட்டுரை இது! விஜய் நடிக்க துவங்கிய 1988 முதல் நாளது தேதி வரை திரைத்துறையில் அரைகுறை ஆபாச உடைகளுடன் பிரவேசித்து நடித்த நடிகைகளுடன் இவரும் ஆபாசமாக இணைந்து நடித்து குத்தாட்டம் போட்டு சீரழிவு கலாச்சாரங்களை தமிழ்நாட்டின் இளசுகள் மனத்தில் நஞ்சை விதைத்தவர் தான் இந்த விஜய். திரைத்துறையில் வெள்ளைப் பணம் கால் பங்கு கருப்பு பணம் முக்கால் பங்கு எனக் கோடி கோடியாய் சுருட்டியவர் தான் இந்த விஜய்! இவர் ஊழல் பற்றி பேசுவதும் மக்கள் நலன் சார்ந்து ‘அரசியல்’ கருத்துக்கள் வெளியிடுவதும் சினிமா பாணியிலான கூத்தாடி கோமாளித்தனங்களை அன்றி வேறு எதுவும் இல்லை. அரசியலில் ஆனா ஆவன்னா கூட தெரியாத இந்த கழிசடை, திரைத்துறையில் ஓய்வு பெற்றதும் தான் சேர்த்து வைத்த கருப்பு பணத்தை வெள்ளையாக்கி பாதுகாத்துக் கொள்ளவும், அரசியலில் நுழைவதன் மூலமாக இன்னும் எத்தனையோ கோடிகளை சூறையாடுவதற்குமே அவர் அரசியலில் தடம் பதிக்கிறார். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்த போது சாத்தான்குளத்தில் பெனிக்ஸ், ஜெயராஜ் போன்றவர்கள் போலீசாரால் காவல் நிலையத்தில் குற்றமே புரியாத அந்த அப்பாவிகளை அடித்தே கொலை செய்த போது, பல்வேறு லாக்கப் படுகொலைகள் நடந்தேறும் பொழுது, முற்போக்கு பேசுபவர்கள், மூடநம்பிக்கை உழைப்பாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் இவர்களை எல்லாம் ஊபா ஆள் தூக்கி சட்டத்தின் கீழ் சட்டத்தின் கீழ் கைது செய்து சித்திரவதை செய்யும் பொழுது, சங்கி பாசிச மதவெறி கூட்டம் துப்பாக்கியாலேயே சுட்டு வீழ்த்தப்படும் பொழுதும், விவசாயிகள் தொழிலாளர்கள் இப்படியாக ஒட்டுமொத்த உழைக்கும் மக்கள் தத்தம் கோரிக்கைகளுக்காக போராட்டக் களம் கண்டு சிறை ஏகிய காலகட்டத்திலும், இதுபோன்ற எண்ணற்ற மக்கள் பிரச்சனைகளில் துறும்பு அளவு கூட அசைந்து கொடுக்காதவர், கருத்துக்களை வெளியிடாதவர், போராட முன் வராதவர்…
இனி திரைத்துறையில் தமது மவுசு எடுபடாது; குறிப்பிட்ட வயதினை கடந்து விட்டோம் சேர்த்த சொத்தினை பாதுகாப்போம் மேலும் அரசியல் ஈடுபட்டு இன்னும் கொள்ளை அடிப்போம் என்ற குழியை தவிர மற்ற வகையில் பெரியார் அம்பேத்கர் காமராஜர் போன்றோரை தூக்கிப் பிடித்துக் கொண்டு ஏதோ இவர்தான் தமிழ் மக்களுக்கு விடியலை தேடிக் கொடுக்கப் போவது போன்ற ஒரு பொய் மாயாஜாலத்தை தோற்றுவிக்க முடிந்துள்ளார் இந்த கேடுகெட்ட நடிகர் விஜய்! இதற்கு இவர் அப்பன் சந்திரசேகரும் கரம் உயர்த்தி மகனை எப்படியாவது தமிழ்நாட்டில் முதலமைச்சராக அமர வைத்து அதன் பிறகு கண் மூடி விட விரும்பி கருத்துக்களை பேட்டிகளை வெளியிட்டு வருகிறார்! அப்பனும் மகனும் கனவு காண வேண்டாம்! உறுதியாக ஏமாந்து போவீர்கள்!
தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக இளித்த வாயிலாக நீடித்திருப்பர் என்ற உங்களது எண்ணம் இனியும் எடுபடாது! இருப்பினும் தமிழ்நாட்டு மக்களே, இப்படிப்பட்ட பொறுக்கி நடிகர் அரசியல்வாதிகள் வளர்வதற்கு துளியும் இடம் கொடுத்து விடக்கூடாது! குறிப்பாக உழைக்கும் மக்கள் இப்படிப்பட்ட போக்கிரிகளிடம் வெகு தூரம் விலகியே இருக்க வேண்டும்! இதுதான் தோழர் விஜயனின் இக்கட்டுரையின் வாயிலாக நான் தெரிவிக்க விரும்பும் சிறிய அளவிலான கருத்து!
தோழர்களே, எனது கண் பார்வை குறைபாடு பலருக்குத் தெரிந்ததே! மிகவும் சிரமப்பட்டே சிறு சிறு கருத்துக்களை பதிவிடுகிறேன். அந்த வகையில் மேலே காணும் எனது பின்னூட்டம் பதிவில் கூட எழுத்துப் பிழைகள், வார்த்தை பிழைகள் தென்படுகின்றன. அன்பு கூர்ந்து சரிப்படுத்தி வாசிக்கவும்.
தவறுகளுக்கு வருந்துகிறேன்.