“உண்மை ஊர் சுற்றுவதற்குள் பொய் உலகை சுற்றி வந்துவிடும்” இந்த பழமொழிக்கு ஏற்ப செயல்படுபவர்கள் இந்து மத வெறியர்கள். பொய்யின் தன்மை பொறுத்து அதன் விளைவும் அமையும்.
கடந்த மாதம் பெங்களூருவில் மகாலட்சுமி என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரை கொன்றது இஸ்லாமியர் ஒருவர் என்று சங்பரிவார் இணைய நிறுவனமான OpIndia பொய்யை பரப்பியது. ஆனால், உண்மை என்னவென்றால் கொன்றவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர் தான்.
கொலை செய்த ஒடிசாவை சேர்ந்த முக்தி ரஞ்சன் ரே மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் தானும் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அதற்குள் கொலை செய்தவர் இஸ்லாமியர் தான் என்றும் கொல்லப்பட்ட பெண்ணுடன் வேலை பார்த்த இளைஞரின் புகைப்படத்தோடு சமூக வலைதளங்களில் பரப்பியது சங்பரிவார் கும்பல்.
இப்படிப் போன்ற ஒரு பொய்யை தான் நான்கு நாட்களாக பரப்பிக் கொண்டிருக்கிறது சங்பரிவார் கும்பலும் அதன் இணைய கைக்கூலிகளும். அதனை முறியடித்த Alt News Fact Check மக்கள் அதிகாரம் இணையதளம் சார்பாக எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
000
மூன்று பேர் காவி உடையில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. சில பயனர்கள் இது ஏமாற்று வீடியோ எனக் கூறி வருகின்றனர். இந்த வீடியோவில் சிலர் இந்து மதத்தை பற்றிய அவர்களின் அறிவை சரிபார்க்க 3 பேரிடமும் கேள்விகளை எழுப்பினர். காவி உடையிலிருந்து இந்த மூன்று இந்து மத துறவிகளும் மாறுவேடமிட்ட இஸ்லாமியர்கள் என்று சமூக ஊடக பயனர்கள் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட வீடியோவை பதிவு செய்யும் நபர் காவி உடை அணிந்த மூன்று பேரை எதிர்கொண்டு “குறைந்தது ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தையாவது சொல்லுங்கள், இல்லை நாங்கள் உங்களை விட மாட்டோம்” என்று கேட்கிறார். உனக்கு எத்தனை கடவுள் பெயர்கள் தெரியும். அதற்கு மூவரும் நாங்கள் போலேநாத்தை வணங்குகிறோம் என்று பதில் அளித்தனர்.
ஒரு தெய்வத்தின் பெயரை மட்டும் அறிந்தால் அவர்கள் எப்படி உண்மையான சாதுக்களாக இருக்க முடியும் என்று கேட்க, வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தவர் அவர்களிடம் சவால் விடுகிறார். அவர்களை சுற்றி திரண்டு கொண்டிருந்த மக்கள் அவர்களை ‘பங்களாதேஷ்’ மற்றும் ‘ரோஹிங்கியா’ என்று முத்திரை குத்துவதையும், சிலர் அவர்களை அடிக்க முன்மொழிவதையும் கேட்க முடிந்தது. வீடியோவை பதிவு செய்யும் நபர் அந்த சாதுக்களில் ஒருவருக்கு உண்மையில் சல்மான் என்ற பெயரிடப்பட்டுள்ளது என்று கூட்டத்தினரிடம் கூறுகிறார். அவர் கூற்று நிரூபிக்க ஒரு அடையாள அட்டையை கூட்டத்திற்கு காட்டுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் இதனை குஜராத்தி செய்தி சேனல் Zee 24 kalak நவம்பர் 2 அன்று நடந்த சம்பவம் குறித்து குஜராத்தி மொழியில் ஒரு தலைப்புடன் ட்விட் செய்தது. “சல்மான் ஒரு சாது வேடமிட்டு பிடிபட்டார் அவரது அடையாள அட்டையை சோதனை செய்ததில் மோசடி அம்பலமானது. சூரத்தில் ஒரு சாது பிச்சை எடுக்கும் உண்மையை வெளிப்படுத்துகிறது”.
સાધુના વેશમાં સલમાનનાથ પકડાયો! સુરતમાં ભીક્ષા માગી રહેલા સાધુનું આઇડી ચેક કરાતા ફૂટ્યો ભાંડો#Gujarat #Viral #ViralVideo #Trending #TrendingNow #India #Surat pic.twitter.com/891kz7qBdG
— Zee 24 Kalak (@Zee24Kalak) November 2, 2024
இந்த டிவீட்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு அறிக்கையை வெளியிடுகிறது சங்பரிவார் பிரச்சார நிறுவனமான Opindia. அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிக்கைக்கான இணைப்பை வெளியிட்டனர். “சல்மானும் அவரது சகாக்களும் காவி உடை அணிந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். அடையாள அட்டை மூலம் அவர்களின் உண்மை அடையாளம் தெரியவந்தது. அவர்களால் எந்த ஸ்லோகத்தையும் சொல்லவோ இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் பெயரை சரியாக உச்சரிக்கவும் முடியவில்லை.”
भगवा वस्त्र पहन सलमान और उसके साथी भीख माँग रहे थे। आईडी कार्ड से उनकी असली पहचान सामने आई। वे न कोई श्लोक सुना सके और न ही हिंदू देवी-देवताओं का ठीक से नाम बता सके।#surat #Muslims https://t.co/RpzS60uCZ7
— ऑपइंडिया (@OpIndia_in) November 4, 2024
குறிப்பிட்ட இந்தி அறிக்கையை இவ்வாறு மொழிபெயர்க்கலாம்: “சமஸ்கிருத ஸ்லோகங்களை கேட்டபோது அவர் பிரார்த்தனை செய்ய தொடங்கினார். ஒரே ஒரு இந்து கடவுளின் பெயரை மட்டும் சொல்ல முடியும். சல்மான் மற்றும் கும்பல் சூரத்தில் சாது போல் காட்டி பிச்சை எடுத்தது அடையாள அட்டை மூலம் ரகசியம் தெரிய வந்தது”. OpIndia அந்த அறிக்கையில் மூன்று பேரும் ‘சாதுக்கள் போல் வேடமிட்டு சுற்றி திரிந்த முஸ்லிம்கள்’ என்றும் பின்னர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறுகிறது.
மற்றொரு சங்பரிவார் பிரச்சார நிறுவனமான சுதர்சன் நியூஸ் (@sudarshanNewsTV) இந்த சம்பவம் பற்றிய வீடியோ அறிக்கையை ட்வீட் செய்து இது பின்வரும் தலைப்புடன் பகிரப்பட்டது. குஜராத் மாநிலத்தின் சூரத்தில் ஜிகாதி சல்மானும் அவரது கும்பலும் சாதுக்களாக காட்டிக்கொண்டு பிச்சை எடுத்தனர். மூன்று ஜிகாதிகள் காவி உடை அணிந்து சாதுக்கள் போல் நடித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தியாளர் பாச்சான்யாவும் ட்வீட் செய்துள்ளார். ஹிந்தியில் உள்ள தலைப்பு பின்வருமாறு “சாதுக்கள் வேடத்தில் சிக்கிய முஸ்லிம்கள். நீங்கள் ஒரு சாது ஆக விரும்பினால் ஏன் இந்துவாக மாறக்கூடாது? சல்மான் என்ற முஸ்லிம் நபர் காவி உடை அணிந்து சாது வேடமிட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது பிடிபட்டார். இந்த சம்பவம் குஜராத்தின் சூரத்தில் நவம்பர் 3 2024 அன்று நடந்தது. அதன் பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். இது முதல் முறையல்ல சாது வேடமிட்டு வந்த முஸ்லிம்கள் இதற்கு முன் பதினாறு முறை பிடிபட்டுள்ளனர்!
साधु भेष में पकड़े गए मुस्लिम!
साधु ही बनना है तो हिन्दू क्यों नहीं बन जाते!
भगवा वस्त्र पहना हुआ मुस्लिम युवक सलमान, साधु के भेष में भीख माँगते हुए पकड़ा गया।
गुजरात के सूरत में 3 नवंबर, 2024 को ये घटना हुई जिसके बाद पुलिस ने उसे गिरफ्तार किया।
ऐसा पहली बार नहीं 16 बार हो… pic.twitter.com/3knDytJfXo
— Panchjanya (@epanchjanya) November 4, 2024
இந்த வீடியோவை பல பயனர்கள் பகிர்ந்து வைரலாக்கி உள்ளனர். மேலும் ஒரு பொய்யான செய்தியை அதாவது ‘சாதுக்கள் போல் மாறுவேடமிட்ட முஸ்லிம் ஆண்கள்’ என்ற கூற்றை உண்மையைப் போல பரப்பினர்.
உண்மை சோதனை (Fact Check)
இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை சரிபார்க்க சம்பவம் பற்றிய செய்தி அறிக்கைகளை தேடினோம். டைனிக் பாஸ்கர் குழுமத்தின் குஜராத்தின் நாளிதழான திவ்யா பாஸ்கரின் அறிக்கை நாங்கள் கண்டோம். நவம்பர் 4ஆம் தேதி கிட்ட அந்த அறிக்கை போலீசார் விசாரணையில் மூன்று பேரும் இந்துக்கள் என்றும் ஜூனாகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சூரத்தில் உள்ள அடைஜன் காவல் நிலைய ஆய்வாளர் ஆர் பி கோசியாவை மேற்கோள் காட்டி அந்த மூன்று துறவிகளும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் என புகார் அளிக்கப்பட்டதாகவும், பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். விசாரணையை தொடர்ந்து சரி பார்ப்பதற்காக அவர்களின் உண்மையான அடையாளத்தை கண்டறிய ஜூனாகத்தில் விசாரணை தொடங்கப்பட்டது. அவர்கள் அளித்த பெயர்கள் சரியானவை என்று கண்டறியப்பட்டது. ஒரு நபரின் பெயர் சல்மநாத் அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்று மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் இந்து என்று உறுதி செய்யப்பட்டது.
Alt News சர்ச்சைக்குரிய சாதுக்களின் வாக்காளர் அடையாள அட்டையை அணுகியது. கீழே உள்ள படத்தில் அந்த நபரின் பெயர் சல்மான் நாத் பர்மர் என்றும் அவரது தந்தையின் பெயர் சூராம் நாத் பர்மர் என்றும் காணலாம். பர்மர் என்ற குடும்பப் பெயர் பெரும்பாலும் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவிலிருந்து குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் பீகார் ஜார்க்கண்ட் மத்திய பிரதேசம் மற்றும் வடக்கு மகாராஷ்டிராவில் இருந்து வந்த ராஜ்புத் குலத்துடன் தொடர்புடையது.
எனவே சாதுக்கள் வேடமிட்ட மூன்று பேரும் மாறுவேடத்தில் வந்த முஸ்லிம்கள் என்ற கூற்று பொய்யானது.
துறவிகள் குறிப்பாக வீடு வீடாக பிச்சை எடுக்க செல்பவர்கள் தங்கள் மாறுவேடத்தில் இருக்கும் முஸ்லிம்கள் என்ற ஆதாரமற்ற சந்தேகத்தில் துன்புறுத்தப்படுவது இது முதல் முறையல்ல இந்த ஆண்டு ஜூலை மாதம் மீரட்டில் மூன்று சாதுக்கள் கொண்ட குழு முஸ்லிம்கள் என்று பொய்யாக முத்திரை குத்தப்பட்டது. அலைந்து திரிந்த துறவிகள் குழந்தை கடத்தல் காரர்கள் என்று பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட பிற நிகழ்வுகளும் உள்ளன.
Alt News-ல் வெளியான செய்தி
மொழியாக்கம்: மாரிமுத்து
பார்ப்பன ஆர் எஸ் எஸ் இந்துத்துவ பாசிச காவிப்படை, அவை வளர்ந்து வந்த முறையே முற்றிலும் புளுகுனித் தனமான பரப்புரைகளை கட்டவிழ்த்து விடுவதும், அதனை சிரமேற்கொண்டு சங்கிகள் கூட்டம் தத்தம் இணையதளங்கள், வாட்ஸ் அப் செய்திகள், குறுஞ்செய்திகள், முகநூல் பக்கங்கள் இன்ன பிற தத்தம் வசதிக்கேற்ற வகைகளில் இக்கேவலத்தை பரப்புவதில் கைதேர்ந்தவர்கள். அவற்றில் ஒன்றே இந்த மொழிபெயர்ப்பு கட்டுரையில் காண்பது. பார்ப்பன ஆர் எஸ் எஸ் சங்கிகள் பாஜக கூட்டம் இதை நீ பரப்புவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இவை அவர்களின் சொந்தத் தொழில் போன்றது! இவ்விதநடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அனைவரும் இரண்டு ரூபாய் கிராக்கிகள்!
மக்கள் தான் விழிப்போடு இருந்து இந்த நாசாகாரக் கூட்டத்தை முறியடிக்க வேண்டும்!
இல்லாதொழிக்க வேண்டும்!!