ந்தியாவை நான்கு குஜராத்திகள் ஆள்கிறார்கள். பிரதமர்  மோடி, அமித்ஷா ஆகிய இரண்டு பேர் நாட்டை  விற்கிறார்கள். அம்பானி, அதானி ஆகிய இரண்டு பேர் அதை வாங்குகிறார்கள்” என எழுத்தாளர் அருந்ததிராய் குறிப்பிட்டார்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கொடுத்த வாக்குறுதிகளான ஆதார விலை, விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ், இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, என எதையும் மோடி அரசு அமல்படுத்தாமல் துரோகம் இழைத்துள்ளது. பேராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்தவர்கள் பா.ஜ.க ஒன்றிய அமைச்சர் மற்றும் அவரது மகன். மோடி அதைக்குறித்து வாய் திறக்கவில்லை.

ஆங்கிலேயனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து, பென்சன் வாங்கி உயிர் பிழைத்தவர், காந்தி கொலை வழக்கின் குற்றவாளி, என்பதை திரித்து சாவர்க்கர் சுதந்திர போராட்ட தியாகி என ஒன்றிய மோடி அரசு விளம்பரம் செய்கிறது.

மீண்டும் வர்ணாசிரம மனுதர்மத்தை புதுப்பித்து பார்ப்பனீய இந்து ராஷ்டிராவை ‘2025-க்குள் உருவாக்க ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கூட்டம் மூர்க்கமாக செயல்பட்டு வருகிறது. மாநில உரிமைகளை பறித்து பல்வேறு தேசிய இனங்களின் மொழி, கலாச்சாரம் பண்பாடு, தனித்தன்மை ஆகியவற்றை சிதைக்க முயல்கிறது.

அயோத்தியை தொடர்ந்து காசி, மதுரா மசூதிகளை குறிவைத்து வன்முறையை ஏற்படுத்த முயல்கிறது. சி.ஏ.ஏ. , என்.ஆர்.சி மூலம் இசுலாமியர்களின் குடியுரிமையை பறித்து அகதிகளாக்க முயன்றது. இஸ்லாமியர்களை கொலை செய்வோம் என சாமியார்கள் வெளிப்படையாக பேசுவது , இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை, மாட்டுகறி விற்க தடை, ஜெய் அனுமான், ஜெய்ஸ்ரீராம் கோசம் போடச்சொல்லி வன்முறை ஏற்படுத்துவது இவைகள் நாடு முழுவதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டது. இதற்கு எதிராக போராடும் இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இடிப்பது என பெரும் அபாயத்தை நோக்கி இந்தியா செல்கிறது.

மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு  எதிராக எழுதினார்கள், பேசினார்கள் என்பதற்காக அறிவுத்துறையினர் ஆனந்த் தெல்தும்டே, கௌதம் நவ்லகா, ரோனா வில்சன் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்டவர்கள் ஊபா சட்டத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.  இதில் பாதிரியார் ஸ்டேன் சுவாமி சிறையிலேயே உயிரிழந்தார். ‘பெகாசஸ்’ என்ற இஸ்ரேல் உளவு மென்பொருள் மூலம் மோடி அரசு போலீயாக சாட்சியத்தை உருவாக்கி இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது நிரூபிக்கபட்ட பின்னரும் உச்சநீதின்றம் பிணை வழங்க மறுக்கிறது.

தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்கட்சிகளை அச்சுறுத்தி,பிளவுபடுத்தி பல ஆயிரம் கோடியில் குதிரை பேரம் பேசி, சி.பி.ஐ அமலாக்கத்துறையை ஏவி கடிக்க விட்டு பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை பா.ஜ.க கைபற்றி உள்ளது. அவ்வாறு இயலாத மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் கொள்கை உடைய ஆளுநரை அமர்த்தி மாநில அரசுகளின் சட்ட திட்டங்களை முடக்குவது, போட்டி அரசாங்கத்தை நடத்துவது என செய்து வருகிறது. துலக்கமான உதாரணமாக நிற்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

அனைவரும் வாரீர்!! மாநாட்டு நிதி தாரீர்!

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9597138959

2 COMMENTS

  1. DMK க்கு வால் பிடித்து சென்றுவிட்டு இந்த கதறல் தேவையா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here