நன்றி கெட்ட ஜென்மமே!
(குறைத்த பிராணியை சொல்லவில்லை! கடித்த உன்னை தான்.)
கொரோனா பெருந்தொற்றில்
என்னென்ன சொன்னாய்???
காய்கறி- மளிகை.
ஆம்புலன்ஸ்- துப்புரவு…
மருத்துவமனை- எரிவாயு:
சேவை எல்லாம் வக்கணையாய் பெற்றுக் கொண்டு,
கோடான கோடி நன்றி சொன்னாய்!
நன்றி கெட்ட ஜென்மமே!
என்னென்ன செய்தாய்* …..
முகத்தை மூடிக்கொண்டு
ஒளிந்து கொண்டாய்.
உன் உயிர் ,
உன் குடும்பம் ,
உன் உடமை.. அத்தனையும் பாதுகாத்துக் கொடுத்த
உழைக்கும் மக்களின்
உழைப்பு எல்லாம் சுரணையின்றி பெற்றுக் கொண்டாய்…
உன் உறவே தொடாத ….
உயிரற்ற பிணத்தை ,
தன் இன்னுயிரை
பணயம் வைத்து
தொட்டு அடக்கம்
செய்த உழைப்பை,
நானமின்றி பயன்படுத்திக் கொண்டாய்…
ஆனால் இன்று
சாதிவெறி
மதவெறி
தலைக்கு ஏறி
ஆட்டம் போடுகின்றாய்!
நன்றி கெட்ட ஜென்மமே!
அன்று ..
உன்னைக் காப்பாற்றாத ,
ஜெய் ஸ்ரீ ராமை சொல்ல – சொல்லி அடித்தே கொன்றாய்…
படிக்கும் பேனாவுக்கு பதில்
உயிர் குடிக்கும் அறிவாளை புத்தகப் பையில் திணிக்கின்றாய்…
எதிரி(எந்த) நாடும்
செய்ய கூசும் …
குடித் தண்ணீரில் மலம் கலக்கிறாய்….
என் அண்ணனின் நண்பன்
எனக்கும் அண்ணன்
என்றே எண்ணிய
இளம் பெண்ணை
நிர்வாணமாக்கி ஊர்வலம் சென்றாய்….
எத்தனை தான் சொல்ல..
உன் நன்றி கெட்ட தனத்திற்கு!
உன் திமிர் ஒடுக்க..
சாதி,மத,இன, மொழி,நிற வெறியடக்க…
இன்னும் ஒரு பெருந்தொற்றும்,
கூடவே பூகம்பமும்,
உடனே வரட்டும்!
உடனே வரட்டும்!
இல்லை என்றாலும்…
பாட்டாளி வர்க்க புரட்சி ஒன்று
அதனை நிகழ்த்தியே காட்டும்.!
- மன்னன்