கர்நாடகாவில் நடைபெற்ற தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஊர்வலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் பங்களிப்புடன் சிறந்த முறையில் நடைபெற்றது.

மோடி அரசு கொண்டு வந்துள்ள 44 சட்டங்களை ஒன்றாக்கி 4 தொகுப்புகள் மாற்றுகின்ற தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்கின்ற சதித் தனங்களை அம்பலப் படுத்துகின்ற வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
தமிழகத்திலிருந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி யைச் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் இதில் கலந்து கொண்டனர். இது பற்றி வெளிவந்துள்ள சிறிய காணொளியை இத்துடன் வெளியிடுகிறோம்.
மொழி, இனம் தாண்டி வர்க்க உணர்வுடன் ஒன்று சேர்ந்துள்ள தொழிலாளி வர்க்கத்தின் அணி வரிசையானது, நாளை அமையப் போகின்ற ஜனநாயக கூட்டரசை பற்றிய நம்பிக்கையை நமக்கு ஊட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here