“வைதீக பார்ப்பனர்களை விட ஆபத்தானவர்கள், லெளகீக பார்ப்பனர்கள்” என்று பிறப்பால் பார்ப்பனர்களாகவும், சமூகத்தில் தன்னை அறிவாளிகள் என்று காட்டிக் கொள்வதற்கு படாத பாடுபடுகின்ற பார்ப்பனக் கும்பலை பற்றி அம்பலப்படுத்தி எழுதியது புதிய ஜனநாயகம்.

“பிறருக்கு கல்வி பெறும் உரிமையை மறுத்ததன் மூலம், தனது மேன்மையை நிலைநாட்டிக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள்” என்று வர்ண-சாதி அமைப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் புரியும் பார்ப்பனர்கள் பற்றி விமர்சித்தார் காரல் மார்க்ஸ்.

இத்தகைய பார்ப்பனர்கள் தங்களைத் தாங்களே அறிவாளிகள் என்று புகழ்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் சொரிந்துக் கொள்ள, ஆர்எஸ்எஸ் கும்பல், தங்களது அதிகாரப்பூர்வமற்ற ஏடாக செயல்பட்டு வருகின்ற துக்ளக் பத்திரிக்கையை துவங்கிய நாள், என்று ஜனவரி 14-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் ‘துக்ளக் துவக்க தினம்’ என்ற பெயரில் பயன்படுத்தி வருகிறார்கள்..

துக்ளக் ஆண்டு விழாவில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்

சோ. ராமசாமி என்ற ஐயங்கார் பார்ப்பனரும், ஜெயலலிதாவின் அடுப்பாங்கரை (kitchen cabinet) அரசியல்வாதியுமான சோ மரணமடைந்த உடன், அதுவரை முற்போக்கு வேடம் தரித்து ஆடிவந்த ‘மாலன்’ என்ற பார்ப்பனரும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளில் ஒருவரும்; டங்கல் திட்டத்தை எழுதிக் கொடுத்த பினாமி குழுவில் ஒருவருமான ‘ஆர்.எஸ் குருமூர்த்தி’, ஆகிய இருவரும் துக்ளக் இதழை கைப்பற்றினார்கள்.

திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் அரசியல் அரைவேக்காட்டுத்தன வசனங்களையும், திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்துகின்ற வகையில் ‘முன்னாள் பிறந்தவன் அண்ணன்! பின்னால் பிறந்தவன் தம்பி’ என்று அண்ணாதுரையை கிண்டல் செய்தும், ‘நான் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கிளி ஒன்றை இலவசமாக வழங்குவேன்’ என்று இலவச திட்டங்களை கொச்சைப்படுத்தி, திரைப்பட வசனங்கள் பேசித் திரிந்த அக்ரஹாரக்கழுதைதான் துக்ளக் சோ.

இந்தியாவை ஆண்டு வந்த இஸ்லாமிய மன்னர்களில் ஒருவரான முகமது பின் துக்ளக், என்பவர் பெயரை பயன்படுத்திக் கொண்டதால் இவர் ஏதோ மதச்சார்பற்ற சிந்தனை கொண்டவர் என்பதெல்லாம் கிடையாது. அப்பட்டமான பார்ப்பன வர்ணாசிரம கருத்துக்களை நாகரீகமான முறையில் திணித்து வந்த நச்சுப் பாம்பு தான் சோ.

இதையும் படியுங்கள்: பார்ப்பன பயங்கரவாதி துக்ளக் குருமூர்த்தியை நாடு கடத்து!

1970 ஆம் ஆண்டு, முதல் இதழ் வெளிவந்த போது அதன் அட்டை படத்தில் இரண்டு கழுதைகள் “சோ பத்திரிகை வெளிவந்துவிட்டதாமே, அப்படியானால் இனிமேல் நமக்கு நல்ல விருந்து தான்” என்று பேசிக் கொள்வதைப் போல வெளியிடப்பட்டது.

இந்த நையாண்டி வாசகத்தை முழுமையாக புரிந்து கொள்ளாத ஆர்எஸ்எஸ் சித்தாந்த ரசிகனும், அரை கிறுக்கனுமாகிய ரஜினி 2020 ஆம் ஆண்டு துக்ளக் பொன்விழா ஆண்டின் போது “சோவை ஆளாக்கிய இரண்டு எதிரிகளில் ஒருவர் பக்தவச்சலம், மற்றொருவர் கருணாநிதி. முரசொலியை கையில் வைத்திருந்தால் அவர் திமுககாரர். துக்ளக்கை கையில் வைத்திருந்தால் அவர் அறிவாளி” என்று பிதற்றினார்.

இதை இப்படி கூறலாம், கழுதைகள் தின்பதற்கு போட்டி போடும் துக்ளக் இதழை (உபயம் துக்ளக் சோ) 75 ஆயிரம் பேர் வாங்கி தனது அறிவை விருத்தி செய்து கொண்டு வருகிறார்கள் என்றால் அவர்களின் அறிவு வளர்ச்சியை பற்றி என்னவென்று சொல்வது.

இதையும் படியுங்கள்: துக்ளக்கை கிழித்தெறிவோம்! மலம் துடைக்க பயன்படுத்துவோம்!

சோ ராமசாமிக்கு பிறகு துக்ளக்கை நடத்தி வரும் ஆர் எஸ் குருமூர்த்தி என்ற கும்பகோணத்து பார்ப்பனர் பற்றி துக்ளக் சோ பிதற்றியது இதுதான் “குருமூர்த்தியின் பொருளாதார அறிவு பலருக்கு நாட்டில் இல்லை. அறிவாளின்னு நான் யாரையும் ஏற்றுக் கொள்வதில்லை” என்று குருமூர்த்தியின் அறிவு பற்றி சிலாகித்துக் கொண்டார்.

இந்த குருமூர்த்தி அவ்வப்போது தமிழகத்தின் அரசியலில் தனது கருத்துக்களை பேசுவதன் மூலம் அனைவருக்கும் மேலான அறிவாளி என்பதை காட்டிக் கொள்ள முயற்சித்து வருகிறார். நமக்கு ஒன்று மட்டும் புரியவில்லை பிறப்பால் பார்ப்பனர்கள் என்பதாலேயே அவர்கள் எப்படி அறிவாளிகள் ஆகி விடுகிறார்கள் என்று? ஆனால் தைரியமாக அடித்து பேசுகிறார்கள். இந்தக் கருத்தைத் தான் லெளகீக பார்ப்பனர்கள் திட்டமிட்டு மீண்டும் மீண்டும் பதிய வைக்க முயற்சி செய்கிறார்கள்.

2020 துக்ளக் பொன்விழா ஆண்டில் குருமூர்த்தி “கழுதைகள் எண்ணிக்கை நாட்டில் குறைந்து கொண்டே வருவது வருத்தம் அளிக்கிறது” என்று அரசியல் கட்சிகளில் ஈடுபடுகின்ற அனைவரையும் பற்றியும் பார்ப்பன கொழுப்பில் நக்கல் அடித்தார்.

தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சி செய்து வந்தாலும், துக்ளக் இதழானது ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழா என்ற பெயரில் ஜனவரி 14ஆம் தேதி ஆர் எஸ் எஸ் ரசிக குஞ்சுகளை ஒன்றிணைப்பதற்கு பயன்படுத்திக் கொள்கிறது.

துக்ளக் வாசகர்களுக்கு பதில் என்ற போர்வையில் ஜே என் யூவில், ABVP குண்டர்கள் நடத்திய வன்முறை பற்றி பதில் அளித்த குருமூர்த்தி ஜே என் யூ வை இழுத்து மூட வேண்டும், அது தேசவிரோதிகளின் கூடாரம் என்றும், பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமானது, அதனை இடதுசாரிகள் இரண்டு மதங்களுக்கு இடையே சர்ச்சையை உருவாக்குகின்ற வகையில் செய்து விட்டார்கள் என்றும், திராவிட இயக்கத்தினால் தமிழர்களுக்கு பின்னடைவு என்றும் பலவிதமாக உளறிக் கொண்டிருந்தார்.

தற்போது இந்த ஆண்டு ஜனவரி 14 அன்று, துக்ளக் 53 ஆவது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி ( பொதுவாக ஆடிட்டர் தொழில் என்பது உண்மை கணக்கை மறைத்து பொய் கணக்கை எழுதுவதற்கு உதவுகின்ற மோசடித்தனமான தொழில் என்பதை அனைவரும் அறிவார்கள். இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம்) “ திராவிடத்தை தொட்டுக்கொண்டு தமிழை வைத்து கருணாநிதி அரசியல் நடத்தினார். முதல்வர் ஸ்டாலின் திராவிடம், திராவிட மாடல் என்ற சக்கர வியூகத்தில் நுழைந்திருக்கிறார். இப்படிப் பேசுவது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும்.” என்று திமுக முன்வைக்கின்ற திராவிட மாடல் என்பதை நக்கல் செய்து பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஆர் எஸ் எஸ் கும்பலைச் சேர்ந்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பற்றி பேசும்போது, “சட்டமன்றத்தில் ஆளுநர் மரபை மீறவில்லை” என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தையும் அவர்களே சொல்லிக் கொள்ளக்கூடிய மரபுகளையும் தூக்கி அடிக்கும் வகையில் காலில் போட்டு மிதித்த ஆளுநர் ரவியின், திமிர்த்தனத்தை அங்கீகரிக்கும் வகையில் பேசித் திரிகிறார் ஆடிட்டர் குருமூர்த்தி.

இத்தகைய அரைவேக்காட்டை தான் ஆடிட்டர் என்ற மோசடி தொழிலை படித்து முடித்த காரணத்தினால் குருமூர்த்தி தமிழகத்தில் மிகச் சிறந்த அறிவாளி என்று புளகாங்கிதம் அடைந்தார் துக்ளக் சோ.

இவருக்கு போட்டியாக இந்திய ஒன்றியத்தின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், “பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களால் உலக அரங்கில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் கிடைத்து வருகிறது” என்று பேசி உள்ளார்.

உலக அரங்கில்; இந்தியாவில் வெறுப்புணர்ச்சியை தூண்டுகின்ற ஆட்சி நடந்து வருகிறது, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே போகிறது என்று ஆக்ஸ்பாம் அறிக்கையும், அம்பானி, அதானி போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகளின் சொத்துக்குவிப்பு பற்றி ‘ப்ளூம் பெர்க்’ அறிக்கையும் வெளியிட்டப்பட்டு வருகின்ற சூழலில் கூச்சநாச்சம் இன்றி புளுகுகின்றார்.

பார்ப்பனர்கள் தனது சொந்த நலனுக்காக இரட்டை நாக்கில் பேசுபவர்கள் என்பதை குருமூர்த்தி மீண்டும் நிரூபித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி “தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சி தலைவராக உள்ள அண்ணாமலை இந்தி திணிப்பை எதிர்ப்போம்” என்று பேசியதை கண்டித்து பேசினார்.

இந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு அண்ட புளுகுகளின் மூலம் பிரபலம் அடைந்துள்ள அண்ணாமலையை பற்றி அதே வாயால்தற்போது 2023 ஆண்டு விழாவில் “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இது அண்ணாமலை வளர்ந்து வருகிறார் என்பதையே காட்டுகிறது. இளைஞர்கள் அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக இளைஞர்கள் அரசியலுக்கு வருவது நல்லது” என்று வியந்து பேசுகிறார்.

இதுவும் கூட தனது குருநாதரும், துக்ளக் இதழின் பங்குகளை வாங்கி தன்னால் ஏமாற்றப்பட்டவருமான சோ ராமசாமியின் கருத்துக்கு எதிரானது.

அதாவது “மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆனால் அரசியல் ஈடுபாடு இருக்கக் கூடாது. அதற்காக நேரத்தை செலவிடக்கூடாது. அரசியலில் நுழைந்து சம்பாதிக்க முடியும், அரசியல் ஒரு வியாபாரமாக இருப்பதால் மாணவர்களும் அதில் ஈடுபாடு காட்டுகிறார்களோ என்னவோ, இதை தவிர்க்காவிட்டால் மாணவர்கள் எதிர்காலத்தில் கஷ்டப்படுவார்கள்” என்பதுதான் மாணவர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி சோ என்ற லெளகீக பார்ப்பனரின் கருத்தாகும்.

தற்போது ஆடிட்டர் குருமூர்த்தி மாணவர்கள், இளைஞர்களை அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார். இப்படி எடுத்துக் கொண்ட கொள்கைக்கு விரோதமாக இரட்டை நாக்கில் பேசுவது பார்ப்பனர்களுக்கு கைவந்த கலை.

தனக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்கிறார்கள் என்றவுடன் ஹைகோர்ட்டை கூந்தல் என்று ஆத்திரம் பொங்க விமர்சித்தார் ஹெச் ராஜா. அது மட்டும் இன்றி ஆளுநர் மீது கை வைத்தால் ராணுவம் தயாராக இருக்கிறது என்று வெறிக் கூச்சல் போட்டார்.

மற்றொரு பார்ப்பன தரகு அரசியல்வாதியான சுப்பிரமணியன் சாமி அடிக்கடி இதுபோல சாமி ஆடுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். “பார்ப்பனர்கள் திருடினாலும், கொலை குற்றம் புரிந்தாலும், தவறு இழைத்தாலோ அதற்கு தண்டனை கிடையாது. அதிகபட்சம் தலைமுடியை மொட்டை அடித்தால் போதும் என்பது மனு தர்மத்தின் வாதம்.

அந்த மனுதர்மத்தை நியாயப்படுத்தி பேசுகின்ற துக்ளக் சோ வகையறாக்கள், ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டுள்ள பார்ப்பனர்கள், ஹெச்.ராஜா, சுப்பிரமணியன் சாமி போன்ற திமிர் பிடித்த பார்ப்பனர்கள் போன்ற அனைவரும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாக்களில் ஏதோ ஒரு வகையில் ஒன்று கூடுகிறார்கள்.

 

இவர்கள் அனைவரும் பார்ப்பன இந்திய தேசியத்தை, இந்து ,ராஷ்டிரமாக மாற்றத்துடிக்கின்ற வகையிலும், பிறரை இழிவாக கொச்சைப்படுத்துகின்ற வகையில் பேசுவதிலும் தயக்கம் காட்டுவதில்லை. அதே சமயத்தில் அரைவேக்காட்டு அறிவு ஜீவிகள், முதலாளித்துவ பொருளியலை படித்த அதிகாரிகள் போன்றவர்களின் தயாரிப்புகளை பட்ஜெட்டுகள் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் என்றும் தன்னை முன்னிறுத்தி பீற்றிக் கொள்வதில் முன்வைப்பதில் இவர்கள் கூச்சப்படுவதில்லை, வெட்கப்படுவதும் இல்லை.

ஆனால் துக்ளக் வாசகர்களாகவும், ஆர்எஸ்எஸ் பாஜக கூட்டத்தில் சங்கிகள் என்ற பட்டத்துடன் செயல்படுகின்ற ‘சூத்திரர்கள்’ இதைப்பற்றி அசிங்கப்படுவதில்லை என்பதுதான் நாம் இடித்துரைக்க வேண்டிய செய்தியாகும்.

  • சண். வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here