சமத்துவமான இந்தியாவைப் படைக்க பகத்சிங் பாதையில் அணிதிரள்வோம்!
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் நினைவு கருத்தரங்கம்
மார்ச்-29,2026, ஞாயிறு
சென்னைப் பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.
அன்பார்ந்த மாணவர்களே! இளைஞர்களே!
மார்ச் 23, 1931 – ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பகத்சிங்கையும் அவரது தோழர்கள் சுகதேவ், ராஜகுருவையும் தூக்கிலிட்டுக் கொன்ற நாள்.தங்கள் இளம் வயதிலேயே தூக்கு மேடையை முத்தமிட்ட அவர்கள் பிரிட்டன் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அன்றைய இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தனர்.
பகத்சிங் சுதந்திரத்தை வெறும் “ஆங்கிலேயர் போய் இந்திய ஆட்சி வருவது” என்று பார்க்கவில்லை. இந்திய சமூகத்தில் வேரூன்றி கிடக்கும் சாதி ஒடுக்குமுறை, மதவெறி, சுரண்டல், வறுமை ஆகியவற்றை முற்றிலும் அழித்து சமத்துவமான, சோசலிச அடிப்படையிலான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது கனவு, லட்சியம்.ஆனால் இன்று இந்திய நாடு அந்த இலட்சியங்களுக்கே நேர்மாறான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
பாசிச மோடி தலைமையிலான ஆட்சிக் காலத்தில், நாட்டின் இயற்கை வளங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. .பொருளாதார ஏற்றத்தாழ்வும், வேலையின்மை பிரச்சினையும், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும், கல்வி நிறுவனங்களில் சமூக பாகுபாடுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத்துறை, நீதித்துறை என அனைத்து அதிகார மையங்களும், பல்கலைக்கழகம், ஊடகங்கள் என அனைத்துத் தளங்களும் காவிப் பாசிஸ்டுகளின் ஆதிக்கத்தில் உள்ளன. ஜனநாயக உரிமைகள், கருத்துச் சுதந்திரம், மாணவர், தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பாசிச பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். எதிர்கட்சிகள் முடக்கப்படுகின்றனர்.

இவற்றையெல்லாம் கேள்வியெழுப்ப வேண்டிய இந்திய மாணவர்களும், இளைஞர்களும் சினிமா, கிரிக்கெட், ஆன்லைன் கேம் என மூழ்கிக் கிடக்கும் நிலையே உள்ளது. இந்த நிலையை மாற்ற நாட்டுப்பற்றும் ஜனநாயக உணர்வும் கொண்ட மாணவர்களும், இளைஞர்களும் ஓரணியில் திரள வேண்டும் என்று புமாஇமு அறைகூவி அழைக்கிறது.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் உள்ளிட்ட தோழர்களின் நாட்டுப் பற்றையும், தியாக்த்தையும் நினைவில் கொள்ளவும், இன்றைய தருணத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய மூன்று தலைப்புகளைக் கொண்டு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

மாணவர்கள், இளைஞர்கள் இந்த கருத்தரங்கில் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என உரிமமையுடன் அழைக்கிறோம்.
கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடும் UGCன் புதிய சமத்துவ விதிகளும்
பேராசிரியர் கருணானந்தன்
அமெரிக்காவின் மேலாதிக்க போர்வெறியும் உலக மக்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடியும்
தோழர் சுதேஷ் குமார்.
தலித், சிறுபான்மை மக்கள் மீது அதிகரிக்கும் வன்முறையும் இந்துராஷ்டிரத்தை நோக்கி பின்னகரும் நாடும்
தோழர் இந்திரகுமார் தேரடி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தமிழ்நாடு – புதுவை







பகத்சிங் வழியில் சமத்துவ இந்தியாவை படைக்க இளையதலைமுறை அணிதிரள்வோம்.
தியாகளின் நினைவு நாளில் சூளூரைப்போம்..