எதிர்ப்புகளைக் கண்டு குலை நடுங்கும் பாசிஸ்டுகள்!
புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் அதிகார மையமுமான அமித்ஷா வருகையை எதிர்த்து 24-04-2022 அன்று அனைத்துக்கட்சி கண்டனம் மற்றும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
என்னதான் உள்துறை அமைச்சராக இருந்தாலும், பாதுகாப்பிற்கு அதிநவீன ஆயுதங்களைக் கொண்ட பாதுகாப்பு படை, கருப்பு பூனை படை போன்றவை இருந்தாலும் பாசிஸ்டுகள் தனது நிழலைக் கண்டால் கூட அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டமிட்ட எதிர்க்கட்சிகள் #GoBackShah என்ற முழக்கங்கள் அடங்கிய கருப்பு பலூன்களை பறக்க விட்டனர்.
இதை தடுக்க முடியாத உளவுத்துறை மற்றும் போலீஸ் சாதாரணமாக பலூன்களுக்கு காற்று அடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கர் என்ற பலூன் வியாபாரியை கைது செய்து, “ கருப்பு பலூன்களுக்கு நீதான் காற்றடித்து கொடுத்தாயா” என்று விசாரணைக்கு கொண்டு சென்று மிரட்டியது.
தனக்கு எதிராக கட்சிகள், பொதுமக்கள் போராடுகிறார்கள், அவர்கள் முன் வைக்கும் கோரிக்கை என்ன என்பதை எல்லாம் பரிசீலிக்க துப்பில்லாத அமித்ஷா கும்பல் சாதாரண பலூன் வியாபாரியை கண்டு நடுங்கியதன் மூலம் பாசிஸ்டுகளின் துணிச்சலை உலகிற்கு வெளிக்காட்டி விட்டது.
புதுச்சேரி மட்டுமல்ல இந்தியாவின் நான்கு திசைகளிலும் பாசிஸ்டுகள் சுதந்திரமாக நடமாடுவதை அனுமதிக்காத வகையில் மக்கள் எழுச்சி உருவாக வேண்டும்.
தனது மூதாதையரான ஹிட்லர் வழியில் தனது முடிவை தேடிக் கொள்வதற்கு, நாம் மக்களை திரட்டி அத்தகைய எழுச்சியை உருவாக்க வேண்டும்.
- செல்வம்.