நான்கு வேதங்களின் புருஷ சூக்தம் பகுதி, சூத்திரன் முதல் மூன்று வர்ணத்தவரை விட கீழானவன் என்கிறது.

யாகம் வேள்வி ஹோமம் இவற்றைச் செய்வதற்கு சூத்திரனுக்குத் தகுதியில்லை என்கின்றன வேதங்களும் உபநிடதங்களும்.

ஸ்மிருதிகளும் பிரம்மசூத்திரமும் சூத்திரன் நடமாடும் சுடுகாடு என்கின்றன.

சைவ வைணவ ஆகமங்கள் சூத்திரனை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றன.

மநுதர்ம சாஸ்திரம் சூத்திரனை விபச்சாரி மகன் என்கிறது.

பகவத்கீதை சூத்திரனை பாவயோனியில் பிறந்தவன் என்கிறது.

புராணங்கள்,இதிகாசங்கள்,தர்ம சாஸ்திர நூல்கள் சூத்திரன் முதல் மூன்று வர்ணத்தவருக்கு அடிமை சேவகம் செய்வதே அவனது தர்மம் என்கின்றன.

வேத மந்திரங்களை கேட்கும் சூத்திரனின் காதில் அரக்கு மற்றும் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறது பிரம்ம சூத்திரம்.

சூத்திரன் தவம் செய்வதற்கு அருகதையற்றவன் என்பதை சம்பூகன் வதம் மூலம் எச்சரிக்கிறது இராமாயணம்.

சூத்திரன் பொய்மட்டுமே பேசக் கூடியவன் என்கிறது மகாபாரதமும் பிரம்ம சூத்திரமும்.

சூத்திரன் நாலுகால் மிருகம் போன்றவன் என்கிறது ராமாநுஜர் எழுதிய ஶ்ரீ பாஷ்யம்.

வேத மந்திரங்களை சூத்திரன் ஓதக் கூடாது என்கின்றன இதிகாசங்களும் புராணங்களும் உபநிடதங்களும்,மீறி ஓதுகிறவர்களின் நாவை வெட்ட வேண்டும் என்கின்றன ஸ்மிருதிகள்.

பிரம்ம வித்தையைச் சூத்திரன் கற்பதற்கு தகுதியில்லாதவன் என்கிறது பிரம்ம சூத்திரம்.

சூத்திரன் நடத்தை சரியில்லாதவன் என்கிறது மகாபாரதம்.

இவற்றையெல்லாம் படித்தும் கண்டும் காணாமல் தான் உண்டு தன் அடிமைத்தனம் உண்டு,என மேல் வர்ணத்தவருக்கு சேவகம் செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் சூத்திரனின் பெருந்தன்மை யாருக்கு வரும்?!

தினகரன் செல்லையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here