ஓட்டு திருட்டு முலம் ஜனநாயக படுகொலை செய்த இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியிலிருந்து விரட்டி அடிப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் இன்று (13/10/2026) காலை 10 மணி அளவில் ராஜஸ்தானில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வந்து மதுரை செல்லும் அனுவர்ட் ரயிலை மக்கள் அதிகாரம் மற்றும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி தோழர்கள் மறித்து ஒன்றிய மோடி அரசுக்கு எதிராகவும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டியும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும் கைது செய்த மாணவர்கள் விடுதலை செய்யக் கோரியும் கண்டனம் முழக்கங்கள் எழுப்பி போராட்டம் தொடர்ந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தோழர்கள் ஆளும் அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் ரயிலை மறிப்பது தான் நோக்கம் என்று உறுதியுடன் காவல்துறை எதிர்பார்க்காத வண்ணம் திடீரென ரயில் மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பானது, 100-க்கும் மேற்பட்ட தோழர்கள் ரயில் மீது ஏறியும் தண்டவாளத்திலும் உட்கார்ந்தும் கண்டனம் முழக்கங்களையும் தோழர்களது போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

போராட்ட களத்திற்கு வந்த காவல்துறை தோழர்களில் சிலரின் கையை முறுக்கியும் முதுகை திருகியும் ரயில் தண்டவாளத்தில் தோழர்களை இடித்தும் அடாவடியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தோழர்களை கைது செய்தனர்.

தோழர்களின் உறுதியான போராட்டத்தால் அரை மணி நேரம் மேல் போராட்டம் நீடித்தது ரயில்கள் கால தாமதமானது. பொதுமக்கள் போராட்டத்தை சுற்றி நின்று பார்த்தனர். போராட்ட நேரம் அதிகரிக்க காவல்துறை செய்வதறியாது தோழர் திருச்சி செழியன் மாநில பொது செயலாளர் அவர்களிடம் கைதாகுங்கள் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வலியுறுத்தியது. மகஇக பொதுச்செயலாளர் தோழர் கோவனை தனியாக இழுத்துச் சென்றதை பார்த்த தோழர்கள் சுதாரித்து காவல்துறையிடமிருந்து மீட்டனர். போராட்டக்களத்தை விட்டு நாங்கள் கலைய மாட்டோம். நீங்கள் கைது செய்துக் கொள்ளுங்கள் என விடாப்பிடியாக போராடிய தோழர்களை கைது செய்ய முனைந்தது காவல்துறை.

அதைத் தொடர்ந்து காவல்துறை ஒவ்வொரு தோழர்களையும் குண்டு கட்டாக கைது செய்து பேருந்தில் ஏற்றி சிந்தாதிரிப்பேட்டை அருகே தனியார் மண்டபத்தில் அனைவரையும் அடைத்து வைத்துள்ளது. இந்த போராட்டம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து செய்தி சேனல்களிலும் போராட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.









