டுக்கப்பட்ட சமூகத்திலிருந்து முகிழ்த் தெழுந்து அம்மக்களுக்காக மட்டுமின்றி, சனாதன பார்ப்பனிய கொடுமைகளுக்கு எதிராக அனைத்துப் பிரிவு மக்களையும் ஒருங்கிணைக்கும் பணிகளை ஓரளவு முன்னெடுத்து விசிக எனும் கட்சியையும் உருவாக்கி தமிழ்நாட்டில் குறிப்பிட்டதொரு செல்வாக்கினை உருவாக்கிக் கொண்டவர் தான் தொல் திருமா என்பதில் அய்யம் இருந்ததில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி என்ற ‘கவர்ச்சியான’ பெயரைச் சூட்டிக் கொண்டு அதன் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தற்போதைய தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘வன்னியர் கட்சி’யாகவே நீடித்து நிலைக்கச் செய்து விட்டார்கள். பலதரப்பட்ட ஆதிக்க சாதி கும்பல்களைப் போல அவ்வப்போது சாதி வெறி கலவரங்களுக்கும், ஆணவப் படுகொலைகளுக்கும் தொடர்ந்து காரண மானவர்களாக நீடிக்கின்றனர்; ‘வன்னியர் நலன் ஒன்றே பிரதானம்’ என்ற ஒரு போலிப் பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு முற்றிலும் பிழைப்புவாத அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.

ஆனால் விசிக-வை அவர்களைப் போன்று சாதிய அமைப்பாக மற்ற எந்தக் கட்சியினரும் கருதவில்லை. அப்படிப்பட்ட கட்சியினர் மட்டுமல்ல: புரட்சிகர இயக்கங்கள் கூட அவர்களது இயக்க மேடைகளில் தொல் திருமாவிற்கு முக்கியத்துவமளித்து உரை நிகழ்த்தச் செய்து பயன்பெறவும், அவர் புகழ் பெறவுமான சூழல் உருவானது. அந்த வகையில் அவர் தமது பேச்சாற்றலை – சனாதன பார்ப்பனிய கொடுங்கோன்மைக்கு எதிராக- பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவக் காவி அரசியலுக்கு எதிராக, விசிக கொண்டிருந்த கொள்கை அளவில் சிறப்பாகவே களமாடினார் என்பதிலும் நாம் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்ததில்லை.

ஆனால் அந்த நிலை நீடித்து நிலைத்து நிற்காமல் இடையில் உடைபட்டது ஏன் என்பதுதான் தற்போதைய பிரதான கேள்வி?

தவெக அணி “இடதுசாரி அணியா?

2026 செப்டம்பர் 11 அன்று நெல்லை அம்பா சமுத்திரத்தில் வன்னி அரசு ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் விசிக இருக்கும் இடம்தான் இடதுசாரிகள் இருக்கும் இடமென ‘அருமையான’ ஜோக் அடித்தார்.

அது மட்டுமா? தற்குறி நடிகர் விஜய் சட்டமன்றத்திலும் பொது வெளியிலும் திமுக குறித்து ஆபாசமாகப் பேசி உடல் மொழியிலும் தனது வக்கிரத்தைக் காட்டி திரிந்து கொண்டிருந்த வேளையிலும், ஸ்டாலின் மிசா காலத்தில் அனுபவித்த கொடுமைகளை மறைத்து இழிவான தன்மையில் உடல் மொழியில் வெளிப்படுத்தியதும், தவெக அமைச்சர் என்ற போர்வையில் வலம் வரும் காக்கி டவுசர் சங்கி பொறுக்கி நிர்மல் குமார் ஸ்டாலினின் மிஷாக் கால கைது குறித்து ஆபாச வக்கிரத்தோடு பேசிய தருணத்திலும், வன்னிஅரசு வாய்திறக்கவில்லை என்பதை அனைவரும் அறிவோம்.

தற்போது விஜய்யின் பொய்யுரைகளுக்கும், இழிவான திரைப்படப் பாணி நடிப்புகளுக்கும், நிர்மல் குமாரின் பொறுக்கித்தனமான பேச்சுக்களுக்கும் கண்டனம் தெரிவித்து திமுக களம் இறங்கிப் போராடி எதிர்ப்பு உரை நிகழ்த்தினால் வன்னிஅரசுக்கு வக்கிரமாகப்படுகிறது. கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு குறித்து இவர் வகுப்பு எடுக்கிறார். ‘எழுச்சித் தமிழர்’ திருமாவும் கண்டனம் தெரிவிக்கிறார். நல்லது, தெரிவிக்கட்டும். யார் பெண்கள் குறித்து தவறான மொழியில் பேசினாலும் கண்டிக்க வேண்டியது ஜனநாயகவாதிகளின் கடமை. ஆனால், வினையை விட்டு எதிர்வினைக்கு மட்டும் கண்டனம் தெரிவிப்பதை என்னவென்று சொல்வது?

மேலும், ‘விசிக வளரக் கூடாதா? ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறக் கூடாதா? விசிக-வை உடைக்கவும் அழிக்கவும் முற்படுகிறார்கள் – திமுகவினர்; எவராவது மறுக்க முடியுமா? பெரியாரின் சுயமரியாதை – திராவிட அரசியலைப் பின் பற்றுவதில் நாங்கள் எவருக்கும் சளைத்தோர் இல்லை; விசிக-வை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது…’ என்ற பாணியில் சம்மந்தமில்லாமல் பேசினார் – வன்னிஅரசு என்றே சொல்ல வேண்டும்.

அதே செப்டம்பர் 11-ல் தர்மபுரியில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு தொல். திருமாவும் இன்னொரு கண்ணோட்டத்தில் பேசியதைப் பார்க்க முடிந்தது!

2026 தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணி உடைந்த வரலாற்றை எல்லாம் புதுப்புது பொழிப்புரையோடு ‘உணர்ச்சி மிகுந்த’ வகையில் பேசினார்.

படிக்க:  ‘மதச் சார்பற்ற(?) சமூக (அ)நீதி வெற்றுக் கூட்டணி’ எனப் பெயர் சூட்டி இருக்கலாம்!

‘திமுக கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்ற சதி நடந்தது; நான் கூட்டணியை உடையவிட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன்; இப்போது எங்களை குறை சொல்பவர்களுக்கு இந்த ‘வரலாறு’ எல்லாம் தெரியாது; நம்மோடு இருந்த(!) ஆதவ் அர்ஜுனா (இவர் மிகுந்த ‘தரமான அரசியல்வாதி’ போலும்), திருமாவளவன் அடுத்த முதல்வராக வேண்டும்; கூட்டணியில் இருந்து வெளியில் வாருங்கள் என்று சொன்னார்; நான் மறுத்தேன்; விஜய் கட்சி துவங்கிய காலம் முதல் திமுக கூட்டணியை விட்டு வெளியில் வரமாட்டேன்; ஆசை வார்த்தை கூறி இழுக்க முயன்றவர்களுக்கு எல்லாம் நான் இசையவில்லை; கரூர் சம்பவத்தை ஒட்டி தவெக-வினர் மீது வழக்குப் போட ஏன் தயக்கம் என்றேன்? அப்பொழுதே தவெக-வை அம்பலப்படுத்தி இருக்க வேண்டும்; திமுக அதைச் செய்யவில்லை; அவர்கள் பேசவில்லை; நான் பேசினேன்;  கூட்டணியில் உள்ளவர்களை ஆடுகளை பாதுகாக்கும் கிடை-க்காரர் போல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு திமுகவினுடையது; ஆடுகள் தப்பி வேறு கிடைக்குப் போய்விட்டால் அதற்கு விசிக பொறுப்பு ஆகாது; திமுக வே பொறுப்பேற்க வேண்டும்; (இவர்கள் ஆடுகளா? சிறுத்தைகளா? என்பதே நமது கேள்வி)

ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை தவெக என்று நான் கூறியது உண்மைதான்; ஆனால் தவெக வெற்றி பெற்றதும் அதிமுக, பாஜக. பாமக-விடம் ஆதரவு கேட்கவில்லை; எங்களிடம் தான் கேட்டனர்; அதனால் தான் பாஜக எதிர்ப்பு சக்தியாக உள்ள தவெக-வை ஆதரிக்க முடிவெடுத்தோம்; தற்போது அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு கூட ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையை நான்தான் சேர்க்க வைத்தேன்; இல்லையென்றால் பாஜக ஆதரவாளர்கள் என முத்திரை(?) குத்தி விடுவார்கள் என்று கூறி ஏற்க வைத்தேன்…’-

என்ற பாணியில் விசித்திரமாகப் பேசியுள்ளார். அதாவது ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது என்பது உளப்பூர்வமான உணர்வுகளுடனானதல்ல; ஊர் உலகத்திற்கு அப்படிப்பட்ட பாவலாவை காண்பிக்க வேண்டும் என்பதே நோக்கம்.

வன்னி அரசு பேட்டியையும் பதிவுகளையும், திருமாவின் பேச்சையும் உன்னிப்பாக கவனிப்போமேயானால் இவர்கள் எவ்வளவு பின்தங்கிப் போய்விட்டார்கள்; குழம்பிப் போய்விட்டார்கள்; பிழைப்புவாத அரசியலுக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள் என்பதை உணர முடியும்.

கரூர் பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாடும் – தற்போதைய விசிக நிலைப்பாடும்!

கரூர் 41 பேர் கொலையுண்டு மாண்டதற்கு – ஆம், அது விபத்து அல்ல; கொலைதான்.

விஜய், ஆதவ், புஸ்ஸி, நிர்மல் குமார், அருண் ராஜ் உள்ளிட்ட கும்பலின் திட்டமிட்ட சினிமா பாணியிலான நடவடிக்கைகளால் செயற்கையாக உருவாக்கப்பட்டதே அந்த மரணங்களும், மரண ஓலங்களும்!

எனவே மேற்கண்ட ஐவர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து விசில் கும்பலையும் சம்பவம் நடந்த நாளன்றே தப்பிக்க விடாமல் கூண்டோடு கைது செய்து சிறையில் தள்ளி இருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் அரசாங்கம் என சம்பவம் நடந்த தருணத்திலும் மற்றும் பல நேரங்களிலும் இதே தளத்தில் நாம் பலமுறை எழுதி இருக்கின்றோம்; இது விடயத்தில் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறோம்; கடுமையாக விமர்சித்து இருக்கிறோம். அதுமட்டுமல்ல; அத்தவறை ஸ்டாலின் அரசாங்கம் செய்தது மட்டும் அல்லாமல், ‘எந்த ஒரு கட்சித் தலைவனும் தமது தொண்டன் சாவதை விரும்ப மாட்டான்’ என்ற பாணியில் விஜய்க்கு நற்சான்றிதழ் வழங்கினார் ஸ்டாலின். அதையும் மிகவும் கடுமையாக விமர்சித்திருக்கிறோம்.

படிக்க:  ‘மதச் சார்பற்ற(?) சமூக (அ)நீதி வெற்றுக் கூட்டணி’ எனப் பெயர் சூட்டி இருக்கலாம்!

இது மட்டுமல்ல; கூட்டணிப் பேச்சுவார்த்தைக் காலங்களில் திமுக கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கட்சிகளுக்குப் பழைய எண்ணிக்கைகளில் கூட இடம் தர மறுத்ததையும் ஒன்றுக்கும் ஆகாத காங்கிரசுக்கும், அழிந்து கொண்டிருக்கும் தேமுதிக-விற்கும் கூடுதல் இடங்களை அள்ளித் தந்ததையும் கடுமையாக விமர்சித்து இருக்கின்றோம். ஆனால் அது வேறு விடயம்.

அதற்காக தவெக-வை ஆதரித்து நிற்பது சரியான நிலைப்பாடு ஆகிவிடுமா?- என்பதைத் தான் விசிக விளக்க வேண்டும். நாம் திமுக அணி சார்ந்தோரில்லை. ‘பாராளுமன்ற ஜனநாயக சரணடைவுப் பாதை’ குறித்த எங்களது பார்வை வேறுவிதமானது. அதே நேர்வில் இன்றைய கார்ப்பரேட் காவிப் பாசிசம் தலை தூக்கி நிற்கும் காலச் சூழலில் காவிப் பாசிச எதிர்ப்பு சக்தியாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் தொல் திருமாவின் விசிக-வின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பதே நமது கேள்வி.

உங்கள் பார்வைப்படி திமுக சாக்கடையாகவே இருந்து விட்டுப் போகட்டும்; அதற்காக தொல் திருமாவின் விசிக, தவெக எனும் மலத் தொட்டியில் வீழ்வது எவ்வகையில் நியாயம் என்பதே எமது கேள்வி. அதிமுக கூட்டணியில் ஆள் பிடிக்காமல் உங்களைத் தேடி வந்ததால் மட்டுமே தவெக, ‘பாசிச பாஜக எதிர்ப்பு சக்தி’ என்ற முடிவுக்கு வருவது சிறுபிள்ளைத்தனமான முடிவு என்பதை தொல் திருமா ஏன் உணரவில்லை?

விஜய்க்கு பாசிசம் என்றால் என்னவென்றே தெரியாது. பாசிசத்தையும் பாயாசத்தையும் போட்டு குழப்பிக் கொண்டு பேசியவர் விஜய். அரசியலிலும் அவர் ஒரு மாபெரும் தற்குறி.

குறைந்தபட்சம் உதயநிதி போன்றவர்கள் சனாதான பார்ப்பனியத்தை எதிர்த்து நிற்பது போன்று, பெரியார் அண்ணா கொள்கைகளை ஸ்டாலின் போன்றோர் புரிந்து கொண்டிருப்பது போன்று – உயர்த்திப் பிடிப்பது போன்று எள்ளின் முனையளவாவது விஜய் புரிந்திருப்பாரா? பேசி இருப்பாரா? குரல் கொடுத்திருப்பாரா?

காவிப் பாசிசத்திற்கு எதிரான செயற்பாடுகளில் திமுகவை விடவும் தவெக மேம்பட்ட இயக்கமா என்பதனை திருமா தான் விளக்க வேண்டும்.

எனவே, நீங்கள் வரித்துக் கொண்டுள்ள சரியான சித்தாந்தம் என்பதிலிருந்து தடம் புரண்டு ஒரு அமைச்சர் பதவி கிடைத்து விட்டதில் திருப்தி அடைவதும், தலைமைப் பண்பில் இருந்து தடம் புரண்டு சுகபோகத்தை அனுபவிக்கத் துடிக்கும் அணிகளின் உணர்வுகளுக்கு அடிபணிந்து விட்டீர்கள் திருமா என்பதே எமது ஆதங்கம்.

‘நான்கு எம்எல்ஏக்கள் இருக்கின்ற பொழுது எங்களுக்கு ஒரு அமைச்சர் கூட திமுக தரவில்லை; இப்போது இரண்டு எம்எல்ஏக்கள் இருக்கின்ற பொழுது ஒரு அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது; அதுவும் தலித்துக்கு கிடைத்துவிட்டது’ – என்று உங்களவர்கள் சிலாகிப்பதன் மூலம் கொள்கை கோட்பாடுகளை மூட்டை கட்டி விட்டது விசிக என்பதைத்தான் வெளிக்காட்டுகிறது.

ஏன், விசிக-விலிருந்து தலித்துக்கு அமைச்சர் பதவி தந்தால் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்ததாக மாறுமோ? பிற கட்சிகளில் இருந்து தலித்துகளுக்கு அமைச்சர் பதவிகள் சபாநாயகர் பதவிகள் வழங்கப்படுவது தாழ்த்தப்பட்டோர்க்கு வழங்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்பட முடியாதோ? என்பதை தொல் திருமா & வன்னிஅரசுதான் விளக்க வேண்டும்.

தருமபுரி கூட்டத்தில் தொல் திருமா-வின் உரை, தமது அரசியல் தவறுகளுக்கான காரணங்களை மூடிமறைக்க மிகவும் மழுப்பலான வாதங்களை முன் வைக்கிறார் என்பதை எளிதாக உணர முடியும். வன்னியரசு-வின் பேட்டியும், பதிவுகளும் உண்மைத் தன்மைகளை மறைத்து வேடமிட்டு ஆடுவதாகவே உணர முடிகிறது.

சிந்தனைச் செல்வனின் தவெக-விற்கு எதிரான கண்ணோட்டம்; குறிப்பாக விஜய்யின் தற்குறித்தனமான அரசியலற்ற பேச்சுக்கள் உடல் மொழிகள் யாவையும் அவருக்கு அசிங்கமாகத் தோன்றியுள்ளது; மிசா குறித்து உண்மைக்கு மாறாக ஸ்டாலினை தரங்கெட்டத்தனமாக பேசியதும் அருவருக்கத் தகுந்த உடல் மொழி செய்கைகளும் அவரைப் பெரிதும் பாதித்தன.

படிக்க: சாக்கடையாகிப் போன தமிழக சட்டமன்றமும் – அதற்குத் தலைமை தாங்கும் ‘முதல்வர்’(?) நடிகர் விஜய்யும்!

அதனால் தான் தன்னளவில் விஜய்யை கண்டனம் செய்ததோடு, விஜய்யை கண்டனம் செய்யாததால் தொல் திருமாவை மறைமுகமாக தாக்குதல் தொடுக்கவும் செய்திருந்தார் சிந்தனைச் செல்வன்.

ஆளூர் ஷாநவாஸும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு விஜய்யை பிடி பிடி என்று வறுத்தெடுத்தார். எது சரியான கண்ணோட்டம்? ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ கும்பலின் கள்ளக் குழந்தை விஜய் மற்றும் அவரது தவெக என்பதனை நம்மைப் போன்றே பல உதாரணங்களுடன் வெட்ட வெளிச்சமாக்கினார். பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் கூறுவது எல்லாம் கடைந்தெடுத்த பொய் நடிப்பு என்று நம்மைப் போன்றே அவரும் உதாரணங்களுடன் விளக்கிக் கூறினார்.

இதன் பின்னரே சில நாட்கள் கடந்து தொல் திருமா, மிசா குறித்தும் ஸ்டாலின் குறித்தும் விஜய் சட்டமன்றத்தில் உரையாற்றும்போது மேற்கொண்ட உடல் மொழியை கண்டனம் செய்வது போன்ற ஒரு பாவனையை வெளிப் படுத்தினார். நெருக்கடியான சூழலில் தான் திருமா, விஜய்யை கண்டனம் செய்வது போன்ற பாவனையைக் காண்பித்துக் கொண்டாரேயல்லாமல் உணர்வுபூர்வமாக அவர் விஜய் பக்கமே சாய்ந்து கிடந்தார். தற்குறி அரசியலை தன்னகத்தே கொண்ட நடிகர் விஜய்யை மாபெரும் தலைவனாக பாவித்து அவர் மீது சாய்ந்து கிடக்கிறார் திருமா. பெயருக்குக் கண்டனம் தெரிவித்த அடுத்த நிமிடமே விஜய் தலைமையில் தமிழ்நாட்டளவிலான கூட்டணி உருவாக்கக் கூட்டத்தில் பங்கேற்க விரைந்து சென்று விட்டார். கூட்டணி தொடர்பான விவரங்கள் யாவற்றையும் நாம் ஏற்கனவே செப்டம்பர் 11 & 12 தேதிகளில் இதே தளத்தில் அம்பலப்படுத்தி விட்டோம்.

ஆக, விசிக-வில் அடிமட்ட அணிகளில் சினிமா மோகத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் பலரும் விஜய்யை ஆதரிக்க முற்பட்டு ‘விசில் அடிக்க’த் துவங்கியதும், ஆதவ் கூறியதாக சொல்லப்படும் முதல்வர் பதவி தருவதற்கு முன் வந்ததாகக் கூறப்படுவதும், அற்றைக் காலத்தில் விசிக பொதுக்குழு கூட்டப்படுகின்ற பொழுது வன்னி அரசு உட்பட(வன்னிஅரசு எம்எல்ஏவாக ஆகாமல் இருந்திருந்தால் இந்த அளவிற்குக் கேடானவராக மாறி இருக்க மாட்டார்)முக்கியத் தலைகள் கூட்டணி அமைத்து அமைச்சர் பதவியை பெற்று விட முண்டியடித்ததும், பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ கும்பலின் கள்ளக் குழந்தை தான் தவெக என்பதை விசிக தலைமை ஏற்க மறுப்பதும், இந்துத்துவக் கூட்டத்தை வேரறுக்க தங்களால் ‘இயன்ற மட்டும்’ செயல்படும் திமுகவை விஜய் மற்ற பிழைப்புவாதக் கட்சிகளுடன் இணைந்து நின்று எதிர்ப்பதும், பாசிச இந்துத்துவ கும்பலுக்கு எதிராக விஜய் இன்றுவரை வாய் திறந்து பேசாமல் இருப்பது மட்டுமின்றி இந்துத்துவ நடவடிக்கைகள் பலவற்றுக்கும் கரம் கோர்த்து நிற்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் மட்டுமே தற்போது விசிக-வில் ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான குளறுபடிகளுக்கும், முன்னணி தலைவர்களுக்கு இடையிலான முரண்களுக்கும் காரணம் என்பதை தொல் திருமாவும், ‘மாண்புமிகு அமைச்சர்’ வன்னி அரசும், விசிக-வும் உணரத் தலைப்படல் வேண்டுமேயல்லாமல், உட்கட்சிக்குள் நிலவும் கருத்து மோதல் போக்குகளுக்கு பிறர் மீது குறிப்பாக பிற கட்சிகள் மீது பழி சுமத்தித் தமது தவறான செய்கைகளை நியாயப்படுத்துவதென்பது எவ்வகையிலும் சரியாகாது என்பதை தொல் திருமாவும், வன்னிஅரசும், விசிகவும் உணரத் தலைப்படல் வேண்டும்.

  • எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here