
பத்திரிகை செய்தி
மாநில பொதுக்குழு கூட்டம்!
அன்பார்ந்த மாணவர்களே! இளைஞர்களே!
எமது புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 12-7-2026 அன்று சென்னையில் வெற்றிகரமாக நடந்தேறியது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் நிகழ்வாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளில் பு.மா.இ.மு. தமிழகத்தில் நடத்திய போராட்டங்கள், அமைப்பின் வளர்ச்சி குறித்து தோழர் ச.அன்பு அவர்கள் விளக்கினார்.
அதனை தொடர்ந்து மாநில பொதுக்குழு, மாநில செயற்குழுவின் கடமைகள் பொறுப்புகள் குறித்து தோழர். மணியரசன் விளக்கினார்.
ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் செயற்குழு தோழர்களை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஐந்து பேர் கொண்ட மாநில செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செயற்குழுவுக்குள் விவாதித்து பொதுச் செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
தோழர் ச. அன்பு மாநில பொதுச் செயலாளர்
தோழர் மணியரசன் மாநில இணைச் செயலாளர்
தோழர் பால்ராஜ் மாநில பொருளாளர்
தோழர் கயல்விழி மாநில செயற்குழு உறுப்பினர்
தோழர் சக்தி மாநில செயற்குழு உறுப்பினர்

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளை
தோழர் தெய்வீகன், மாநில இணைச்செயலாளர் மக்கள் அதிகாரம்.
தோழர். சுதேஷ் குமார் மாநில துணைத்தலைவர் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
வழக்கறிஞர் தோழர் ஆனந்தசாமி உயர்நீதிமன்றம் கிளை மதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பொதுக்குழு தீர்மானங்களை மாநில பொருளாளர் தோழர்.பால்ராஜ் வாசித்தார்.
குறிப்பாக நீட் எனும் ஆட்கொல்லித் தேர்வு முழுமையாக தூக்கியெறியப்பட வேண்டும், நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
மாநில உரிமைகளைப் பறிக்கும் VBSA சட்ட மசோதா முற்றிலுமாக திரும்பப் பெறப்பட வேண்டும்.
மாநிலப் பல்கலைக்கழகங்களுக்குத் துணை வேந்தர் நியமனத்தில் UGC பிரதிநிதியை அனுமதிக்கும் தவெக அரசைக் கண்டிக்ககன்றோம். உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட தோழர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் புமாஇமுவை புதிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்துவது; மாணவர்களின் கல்வி உரிமை, இளைஞர்களின் வேலை வாய்ப்பு உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுப்பது; இளைய சமூகத்தை சீரழிக்கும் பல்வேறு போதைப் பொருட்கள், ஆபாச திரைப்படங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது; சமூக வலைதளத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கருத்துக்களை தீவிரமாக கொண்டு செல்வது, கல்வியைக் கார்ப்பரேட்- காவிமயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்துத் தொடந்து போராடுவது ஆகியவற்றில் முதன்மையான பணிகளுக்கு கவனம் கொடுத்து செயல்பட உறுதியேற்றனர்
தகவல்:

புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி தமிழ்நாடு
95007 92976






