2026 ஏப்ரல் மாதம் ஹரியானா மானேஸ்வர் தொழிலாளர்களும், உத்திரப்பிரதேசம் நொய்டா தொழிலாளர்களும் தங்களது குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த கோரி மிகப்பெரும் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தின் விளைவால் பணிந்த இருமாநில அரசுகளும் ஊதிய உயர்வை அறிவித்தன. ஆனால் போராடிய தொழிலாளர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது பாஜக அரசு.
ஊதிய உயர்வை பெற்ற போதிலும், போராடிய தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் இருமாநில பாஜகவின் டபுள் எஞ்சின் சர்க்கார் ஈடுபட்டுள்ளது. முதலாளித்துவத்திற்கு ஆதரவான இந்நடவடிக்கையின் மூலம் தனது விசுவாசத்தை நிரூபித்துள்ளது.
இதனை கண்டிக்கும் விதமாகவும், கோரிக்கை விடுத்தும் நாடு முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் கலாச்சார செயற்பாட்டாளர்கள் இணைந்து, சமீபத்தில் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையை நடிகரும் பதிப்பாளருமான சுதன்வா தேஷ்பாண்டே முன்முயற்சியாக தொடங்கியுள்ளார். தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறை மற்றும் நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து இந்த அறிக்கை ஆழ்ந்த கவலை வெளியிடுகிறது. அறிக்கையில், தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறை, அநியாயமான கைது நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் போராட்ட உரிமையை ஒடுக்க முயற்சிகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.
போராட்டங்களின் பின்னணி
இந்த போராட்டங்கள் பெரும்பாலும் நொய்டா, குருகிராம் உள்ளிட்ட தொழிற்சாலை பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. 40,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முக்கியமாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றனர்.
படிக்க: நொய்டாவில் தொழிலாளர்களை ஒடுக்கும் பாசிச பாஜகவின் டபுள் எஞ்சின் சர்க்கார்!
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ற ஊதியம் பாதுகாப்பான வேலை சூழல், தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு என தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக நிலவி வரும் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான வேலைநிலைமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
அதிகாரிகளின் நடவடிக்கைகள்
அறிக்கையின் படி, இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்: போலீஸ் வன்முறையின் மூலம் கண்ணீர் புகை (tear gas) பயன்படுத்துதல், பெருமளவில் கைது செய்தல் இத்தகைய நடவடிக்கைகள் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதாக அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
அறிக்கையின் முக்கிய கருத்துகள்
இந்த அறிக்கை பல முக்கிய கருத்துகளை வலியுறுத்துகிறது: மனிதர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடுவது அடிப்படை உரிமை. இந்த உரிமை இந்திய அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த அரசாங்கமும் இந்த உரிமையை மறுக்க முடியாது.
மேலும், ஜனநாயகத்தின் அடிப்படை என்பது மக்கள் தங்கள் கருத்துகளை பயமின்றி வெளிப்படுத்தும் உரிமை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் பல முக்கியமான கலாச்சார மற்றும் கலை உலக நபர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா நடிகர்கள் நசீருதீன் ஷா, ரத்னா பாதக் ஷா நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய், கவிஞர் கே. சச்சிதானந்தன் உட்பட பலர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளனர்.
படிக்க: இந்திய தொழிலாளர்கள் விற்பனைக்கு!
அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்: தொழிலாளர் போராட்டங்களை சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக பார்க்க வேண்டாம். கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இடையே நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனநாயக முறைகளைப் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹரியானா, உத்திரப்பிரதேச தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், அவர்கள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைக்கும் எதிராக இந்திய உழைக்கும் வர்க்கம் இந்நேரம் வெகுண்டெழுந்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றாலும் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் முன்முயற்சியை வரவேற்போம்.
மூலம்: திவயர் இணையதளம்
- சுவாதி






தொழிலாளர்களுக்கு ஆதரவாக 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் அறிவுஜீவிகள் அறிக்கை !
ஹரியானா உத்தர பிரதேசத்தில் ஊதிய உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு ஆதரவாக அருவி ஜீவிகள் கலைஞர்கள் இணைந்து ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர் அந்த அறிக்கை என்பது ஆளும் பாஜக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்தும் போராட்டம் என்பது ஜனநாயகப்பூர்வமான ஒரு உரிமை அந்த உரிமையை ஆளும் அரசு நசுக்க நினைப்பது விடாளி வர்க்கத்திற்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு என்பதை கண்டித்து கூட்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளார்கள்
தி வயர் கட்டுரையில் இருந்து
ஆசிரியர் சுவாதி