கடலூரில் பெண் ஆணவப்படுகொலை? போராட்டக் களத்தில் மக்கள் அதிகாரம்
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் சிறையில் அடைத்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தோழர்கள் களத்தில் போராடி வருகின்றனர்.

கடலூரில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த மாணவி தேவஜெய ஸ்ரீபிரியா வரதட்சணை மற்றும் ஆணவப்படுகொலை?

கடலூர் மாவட்டம், பண்ரூட்டி வட்டம், அரசடிகுப்பம் அஞ்சல், அழகப்பசமூத்திரம் கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்த தேவஜெய ஸ்ரீபிரியா வயது 22 அந்தோணிராஜ் என்பவரின் மகள் ஆவார்.

இவருடைய அண்ணன் ரிச்சர்ட் என்பவரும் இவரும் கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்ட படிப்பை முடித்தவர்கள். படிக்கும் தருணத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் வட்டம் மேல்பாதி சொரணாவூர் வன்னியர் கிராமத்தை சார்ந்த முருகன் என்பவரின் மகன் வசந்தகுமார் என்பவர் காதல் செய்வதாக கூறி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் பாஸ்கான் கம்பெனியில் வேலை செய்த பிரியாவை அழைத்து வந்து ஒரு கோயிலில் திருமணம் செய்து இரண்டு மாத காலம் அவர் வீட்டில் வைத்திருந்து தனது தாய் தந்தை அண்ணன் உள்ளிட்டு அனைவரோடு இணைந்து தொடர்ச்சியாக வரதட்சணை கேட்டும் சாதி ரீதியான பெயரை சொல்லி இழிவுப்படுத்தியும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்த மாணவிக்கு அப்பாவும் அம்மாவும் சிறிய வயதில் இறந்து விட்டார்கள். ஆதரவு இல்லாத தருணத்தில் தனது பாட்டி துணையோடு சொந்த உழைப்பில் சம்பாதித்து படித்து வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர்.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

அண்ணனுக்கு தெரிந்தால் திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று அண்ணனுக்கு தெரியாமல் தனது தகப்பனின் அக்கா அதாவது மாணவியின் அத்தை துணையோடு அந்த வீட்டில் நடந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் ஒரு மணி அளவில் தற்கொலை செய்து கொண்டார் என அவருடைய பாடியை விழுப்புரத்திலிருந்து கொண்டு வந்து கடலூர் மருத்துவமனையில் கபட நாடக மாடி அனுமதித்துள்ளனர்.

நடந்த நிகழ்வை ஆராய்ந்து பார்த்த பிறகு இது திட்டமிட்ட படுகொலை என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இந்நிலையில் சந்தேகத்துக்குரிய மரணம் என்ற அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்துள்ளனர்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் சிறையில் அடைத்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் பால்ராஜ் மற்றும் மக்கள் அதிகாரத்தின் கடலூர் மாவட்ட செயலாளரும் மாநில இணைச் செயலாளருமான தோழர் பாலு அவர்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் கலைமோகன், பண்ருட்டி அருள் செல்வன் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளோடு இணைந்து பாதிப்படைந்த குடும்பத்திற்கு மாணவிக்கு நீதி வேண்டி கடலூர் அரசு மருத்துவமனை பிணவறை அருகில் முற்றுகையிட்டு நீதி கிடைக்கும் வரை மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம், உடலை வாங்க மாட்டோம் என பாதிக்கப்பட்ட உறவினர்களுடன் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

தகவல் :

மக்கள் அதிகாரம்
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 8110815963.

2 COMMENTS

  1. திராவிட மாடல அரசு – சமூக நீதி அரசு’
    இவற்றின் காவல்துறை குற்றவாளிகளை இதுவரை கைது செய்து விட்டதாக உணர முடியவில்லை. வாய் கிழிய ஜம்பம் அடிக்கும் ‘சமூக நீதிக் காவலர்கள்’ ‘பெரிய அய்யா’ ராமதாஸ்; ‘சின்ன அய்யா’ அன்புமணி ராமதாஸ்; தமிழ் மக்களை மீட்க வந்த சசிகலா அக்காள் மகன் டிடிவி தினகரன்; உலகத்துக்கே வழிகாட்டும் உத்தமக் கட்சி ஆர்எஸ்எஸ் பாஜக இவற்றை தூக்கிப் பிடிக்கும் நயினார் நாகேந்திரன், ஆட்டு குட்டி அண்ணாமலை, தமிழிசை, வானதி, எச்ச ராஜா, அர்ஜுன் சம்பத், ரெங்கராஜ் பாண்டே, நாராயணன் திருப்பதி, கரு நாகராஜன், அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொண்டு ‘அமித்ஷா திமுக’ – வாக மாற்றிக்கொண்ட காரியவாத பிழைப்புவாதி எடப்பாடி, அப்பட்டமான பிழைப்புவாதிகள் ச்சீமான், விஜய், மணியரசன்… போன்ற கும்பல் வாய் திறந்து இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

    ஜனநாயக இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள் இப்படித் தொடர்கின்ற ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தக்கவான பொருத்தமான பெரும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

  2. கடலூர் பட்டியல் சமூகத்தை சார்ந்த மாணவி தேவஜெய ஹிபிரியா திருமணம் நடந்த 2 மாதங்களில்
    வரதட்சனை கொடுமையால் படுகொலை!

    தொடரும் ஆணவ படுகொலைகள் தடுக்க தவறிய தமிழக அரசு !ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய் !ஆணவ படுகொலை தடுக்க தனி சட்டம் இயற்று!

    ஆதிக்க சாதி வெறி கொண்ட வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்திய கொலை குற்றவாளி வசந்தகுமார் ஐ வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய போராடுவோம்!
    RSYF .மக்கள் அதிகாரம்.VCK. ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here