வேலூரில், ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைவீதி மற்றும் பஸ் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளைச் சங்க தோழர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நமது பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நிதியும் அளித்தனர்.

வேலூர் கடைவீதி பிரச்சாரம்

     ஜூலை 09 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற செய்வோம்! என்ற அடிப்படையில் பாசிச பா.ஜ.க ஒன்றிய அரசின் தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் நான்கு சட்டத் தொகுப்பை கிழித்தெறிவோம் என்கிற மைய முழகத்தின் கீழ் பு.ஜ.தொ.மு சங்கமான GROBEST கிளையில் ஆலைவாயில் கூட்டம் நடைபெற்றது.

சங்க செயலாளர் வெங்கேடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ம.சி சுதேஷ் குமார் அவர்கள் தொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் அபாயங்களை விளக்கி பேசினார். மேலும், அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து தரப்பு மக்களையும் பங்குபெற வேண்டிய அவசியத்தையும் விளக்கி பேசியும், மோடி அரசுக்கு எதிராக தொழிலாளர்கள் முழக்கமிட்டனர்.

ஆலைவாயில் கூட்டம்

     கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்து தெருமுனை பிரச்சாரம் கடந்த 05.07.2025 தேதியன்று கவுண்டம்பாளையம், GN மில், துடியலூர் பகுதியில் நடத்தப்பட்டது.

கோவை தெருமுனை பிரச்சாரம்

இன்று (07.07.2025) கோவை சிவானந்தா காலணி, கதிபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு, கணபதி போன்ற பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இந்த பிரச்சாரத்தில் NDLF மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர் ஜூலியஸ், துணை செயலாளர் கணேஷ், NDLF மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சந்தோஷ், ம.க.இ.க தோழர் சித்தார்த்தன், மக்கள் அதிகாரம் செயற்குழு உறுப்பினர் தோழர் சரவணகுமார், NDLF மாவட்ட துணை தலைவர் தோழர் கோபிநாத் ஆகியோர் உரையாற்றினார்கள். நடைபெற்ற பிரச்சாரத்தில் 25 மேற்பட்டோர் பங்கேற்றனர்.

     புதுச்சேரியில், தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கங்கள் ஜூலை 9 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்!

2025 ஜூலை 9ஆம் தேதி புதுச்சேரியில் பொதுவேலை நிறுத்தம், பந்த், மறியல் போராட்டம் நடத்துவது என புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு.

இதனை விளைக்கி தெருமுனை கூட்டம் நேற்று இரண்டு மையங்களில் நடைபெற்றது.

புதுச்சேரி தெருமுனைக் கூட்டம்

30.6.2025 திங்கள் கிழமை மாலை 5 மணி அளவில், AITUC ஏற்பாட்டில் சேதராப்பட்டு தொழில்பேட்டையிலும் NDLF ஏற்பாட்டில் திருவாண்டார் கோயில் தொழில்பேட்டையிலும், நடைபெற்றது. இதில், அனைத்து சங்க தலைவர்கள் பங்கேற்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

தெருமுனை விளக்க கூட்டம்!

நேற்று(30.06.2025) ஜுலை 09 அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கன்னிகைப் பேர் கிராமத்தில் தெருமுனை விளக்க கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் கன்னிகைப்பேர் தெருமுனை விளக்கக் கூட்டம்

இதற்கு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் விகந்தர் தலைமைதாங்கினார். திருவள்ளூர் மாவட்ட தலைவர் தோழர் ம.சி சுதேஷ் குமார் விளக்க உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட தோழர்கள் மற்றும் கிளை சங்க தோழர்கள் கலந்துக்கொண்டனர்.

ஜுலை 09 வேலை நிறுத்தத்தை ஆதரித்து கன்னிகைப் பேர் கிராமத்தில் பிரசாரம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் பகுதி பிரச்சாரம்

ஓட்டுக்காக ஒவ்வொரு வீட்டுக்கும் அரசியல் கட்சிகள் வந்து ஓட்டுக்காக பிரச்சாரம் செய்ததை மட்டும் பார்த்த மக்கள் , இன்று அவர்களின் கதவை தட்டி முதல் முறையாக அவர்களின் வாழ்க்கை பிரச்சினை பற்றியும் மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்கி பேசும் போது அவர்களின் குடும்பத்தில் ஒருவராக கருதினர்.

பிரச்சார நிதியாக தங்களால் இயன்றதை தவறாமல் கொடுத்தனர். புன்முறுவலோடு ஆதரவு தெரிவித்தனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி என்பது தொழிற்சங்க நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடும் என்பதை தாண்டி மக்கள் உரிமைக்கும் குரல் கொடுக்கும் என்பதை பிரச்சாரத்தில் நிருபித்தனர் HIL ஒப்பந்த தொழிலாளர்கள் !

      வருகின்ற ஜுலை 09 ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை யொட்டி திருவள்ளுர் மாவட்டம் சோழ வரம் ஒன்றியம் , காரனோடை கடை வீதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

திருவள்ளூர் கடைவீதி பிரச்சாரம்

மோடி அரசின் , தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் நான்கு சட்டத் தொகுப்புகளை கிழித்தெறிவோம் என்கிற முழகத்தின் கீழ் தொழிலாளர்களை அணித்திரட்ட பு.ஜ.தொ.மு அறை கூவல் விடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக பிரசாரத்தில் சோழவரம் ஒன்றியத்தில் இயங்கும் ஹெரன் நெக்ஸ்ட் ஆலை தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு மாவட்ட இணைச் செயலாளர் தோழர் : இரா: சதிஷ் தலைமையில் உழைக்கும் மக்கள் மத்தியில் மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலபடுத்தி பிரச்சாரம் செய்தனர்.

உழைக்கும் மக்களிடம் மோடி அரசுக்கு எதிரான வெறுப்பும் மற்றும் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிரான மன நிலையில் இருப்பதை உணர முடிந்ததாக தொழிலாளர் எடுத்துரைத்தனர்.

ஆம்! உழைக்கும் மக்களின் உரிமைகளை பறிக்கும் எந்த வடிவமும் வென்றதாக வரலாறு இல்லை.

நன்றி: NDLF முகநூல்

படிக்க: ஜூலை-9 பொது வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டக் களமாக்குவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here